Wednesday, March 20, 2013

விஜய் படத்தில் காஜல் அகர்வாலின் தங்கை?

img1130320026_1_1நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் ஒரு நடிகை. தங்கைக்காக அக்கா காஜல் அகர்வால் வாய்ப்பு கேட்பதாக இன்டஸ்ட்‌ரிக்குள் வதந்தி உண்டு. இந்நிலையில் இப்படியொரு செய்தி, விஜய்யின் ‌ஜில்லா படத்தில் காஜல் அகர்வாலுடன் நிஷா அகர்வாலும் நடிக்கிறார்.
‌ஜில்லாவின் ஸ்டார்காஸ்ட்தான் முதலிலேயே ஆச்ச‌ரியமாகப் பேசப்பட்டது. மணிரத்னம், கமல் என்று ஜாம்பவான்கள் விரும்பி அழைத்தால் மட்டுமே கேரள எல்லையை தாண்டும் மோகன்லால் ‌ஜில்லாவில் ஒரு படம் மட்டுமே இயக்கியிருக்கும் நேசனின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது முதல் ஆச்ச‌ரியம்.
‌ஜில்லாவில் காஜல் அகர்வால் விஜய்யின் ஜோடி. பரோட்டா சூ‌ரி, தம்பி ராமையா போன்றவர்களும் உண்டு. மகத் விஜய்யின் தம்பியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
தற்போது காஜலின் தங்கை நிஷா அகர்வாலை மகத்தின் ஜோடியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. மேலும் விடிவி கணேஷ், கோவை சரளா ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமாக படாவதி ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறாராம்.
(காமெடி படமாக இருக்குமோ?)

Wednesday, March 13, 2013

ஜில்லா எனது செல்லப் பெயர் – விஜய் பேட்டி

img1130312027_1_1நேற்று ‌ஜில்லா படத்தின் பூஜை சூப்பர்குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. படத்தை குறித்த செய்திகளை ஆர்.பி.சௌத்‌ரி முறைப்படி அறிவித்தார். பிறகு பத்தி‌ரிகையாளர்களுக்கு படம் குறித்து பேட்டியளித்தார் விஜய்.
சினிமாவில் என்னை உருவாக்கிய முக்கியமான நிறுவனம் சூப்பர்குட் ஃபிலிம்ஸ். பூவே உனக்காக, லவ் டுடே, ஷாஜகான், துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி என்று அவர்கள் பேன‌ரில் நான் நடித்த எல்லாப் படங்களுமே சூப்பர்ஹிட். எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மோகன்லாலுடன் நடிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
வேலாயுதம் படத்தின் போதே அதில் அசோசியேட்டாக இருந்த நேசன் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். கதை பவர்ஃபுல்லாக இருந்தது. சேர்ந்து பணியாற்றுவோம் என்று அப்போதே சொல்லியிருந்தேன். சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மூலம் அது இப்போது நிறைவேறியிருக்கிறது.
‌ஜில்லா என்பது ஒரு பகுதியை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் இதில் எனது நண்பர்கள் என்னை செல்லமாக கூப்பிடும் பெயராக வருகிறது. மதுரை பேக்ராப்பில் உருவாகும் படம். ஆக்சன், சென்டிமெண்ட் எல்லாம் நிறைந்த கதை. எனக்கு இது இன்னொரு கில்லியாக அமையும் என்று நம்புகிறேன்.
நேசன் முருகா என்ற படத்தை ஏற்கனவே இயக்கியிருக்கிறார் என்பது முக்கியமானது.

Tuesday, March 12, 2013

I am happy to share the screen with Mohanlal: Ilayathalapathy Vijay

imagesProducer R B Chowdhary is producing a film titled Jilla which has Vijayin the lead role under the banner Super Good Films. Kajal Agarwal is pairing with Vijay. Malayalam super star Mohanlal is donning an important role in this film.
Poornima Bhagyaraj, Thambi Ramaiah, Parotta Soori and Mahat are also starring in this film. Nesan is directing this film. Nutty Natraj is handling the camera while Imman is composing the music.
The pooja of Jilla was held today morning at R B Chowdhary’s Super Good Films office located in T Nagar. Vijay who had participated in this function spoke to the media people. He said, ” I am immensely happy because I am going to share the screen with Mohanlal. I have already acted in Poove Unakkaga, Thulladha Manamum Thullum, Love Today and Thirupachi produced by R B Chowdhary. All of them were great success. Jilla will overtake all those films.Kajal Agarwal is the heroine of this film.”
Producer R B Chowdhary while speaking said, ” Jilla is the 25th film of Super Good Films. After Thirupachi we are joining hands once again with Vijay.” Actor Jiiva also attended this function

Monday, March 11, 2013

விஜயின் ஜில்லா ஹிட் ஆயிடுமோ...?!

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ஜில்லா படம் உறுதியாக ஹிட் ஆகிவிடும் போல் இருக்கிறது. விஜய் படங்களை எத்தனையோ தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளனர். ஆனால் விஜய்க்கும் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸுக்கும் ஒரு ராசி உள்ளது. அதாவது இளைய தளபதியும், சௌத்ரியும் சேர்ந்த படங்கள் எல்லாமே ஹிட் தான். அப்படி இருக்கையில் இந்த கூட்டணி தற்போது மீண்டும் சேர்ந்துள்ளது. நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜில்லா படத்தை தயாரிப்பது வேறு யாருமல்ல சூப்பர் குட் பிலிம்ஸ் தான். அப்படி என்றால் ஜில்லாவும் ஹிட் தானா என்று கேட்கத் தோன்றுகிறது?


சூப்பர் குட் பிலிம்ஸ், விஜய் இதுவரை சேர்ந்த படங்கள் அனைத்தும் ஹிட். அப்படி என்றால் ஜில்லாவும் ஹிட்டா?

பூவே உனக்காக விக்ரமன்
 இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக படம் ஹிட் என்று அனைவருக்கும் தெரியும். அதை தயாரித்தது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

துள்ளாத மனமும் துள்ளும்
 காதலை அழகாகச் சொன்ன துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய், சிம்ரன் அருமையாக நடித்திருந்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ்.

லவ் டுடே 
லவ் டுடே படத்தில் காதல் காதல் என்று காதலி பின்னால் சுற்றி தந்தையை இழந்த பிறகு வாழ்க்கையை புரிந்து கொள்வார் விஜய். இதை தயாரித்ததும் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குடம் பிலிம்ஸே.

ஷாஜகான் 
விஜய் காதலிக்கும் பெண் வேறு ஒருவரை காதலிக்கும் படமான ஷாஜகானை தயாரித்ததும் சூப்பர் குட் பிலிம்ஸ் தான்

திருப்பாச்சி 
திருப்பாச்சியில் தங்கையை சந்தோஷப்படுத்த அவளது தோழியின் முடியை நறுக்கி வரச் சென்று மாறாக தோழியின் தாயின் முடியை நறுக்கி வருவார் விஜய். அண்ணன்-தங்கை பாசத்தை சிலிரிக்கும்படி சொன்ன திருப்பாச்சியை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது
.


தல' ரசிகரை தன் படத்திற்கு பரிந்துரைத்த விஜய்

நான் 'தல' அஜீத் குமார் ரசிகன்டா என்று கூறும் பரோட்டா சூரியை தனது ஜில்லா படத்தில் எடுக்க பரிந்துரை செய்துள்ளார் விஜய். துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய், காஜல் அகர்வால் ஜோடி சேரும் படம் ஜில்லா. இதை நேசன் இயக்குகிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது. படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தில் விஜயுடன் முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கிறார். படத்தில் விஜய் தம்பியாக மகத் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் பூர்ணிமா பாக்யராஜ்.

வேலாயுதத்தில் விஜய்யுடன் கலக்கிய சூரி 

வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார் பரோட்டா சூரி. அவர்கள் காம்பினேஷன் நன்றாக ஒர்க்கவுட் ஆனது. விஜயால் அவரும், கிராம மக்களும் படும்பாட்டை அவர் கூறுவதே தனி அழகு தான்.

ஜில்லாவில் சூரி இருக்கட்டுமே...

 'தல' ரசிகரான சூரியை தனது ஜில்லா படத்தில் நடிக்க வைக்குமாறு விஜய்யே பரிந்துரை செய்துள்ளார். அவரது பரிந்துரையின் பேரில் தான் சூரியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விஜய்யின் ஜில்லா – இன்று தொடங்கியது

img1130311032_1_1விஜய் நடிக்கும் புதிய படம் ஜில்லா இன்று காலை சூப்பர்குட் பிலிம்ஸின் அலுவலகத்தில் பூஜையுடன் தொடங்கியது.
தலைவா படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து ஜில்லா என்ற படத்தில் நேசனின் இயக்கத்தில் நடிக்கிறார் என சில மாதங்கள் முன் செய்தி வெளியானது.
நேசன் முருகா என்ற படத்தை இயக்கியவர். அதிகம் அறிமுகம் இல்லாத இயக்குனர் என்பதால் ஜில்லா படம் வதந்தி என்றே பலரும் நம்பினர்.
இந்நிலையில் மோகன்லால் ஜில்லாவில் விஜய்யுடன் நடிப்பதை உறுதி செய்தார். படத்தை தயாரிப்பவர் விஜய்யை வைத்து பல வெற்றிப்படங்களை தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி.
இன்று காலை சென்னையிலுள்ள சூப்பர்குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஜில்லாவின் தொடக்க விழா நடந்தது. விஜய், பூர்ணிமா பாக்யராஜ் ஜித்தன் ரமேஷ், ஜீவா, இசையமைப்பாளர் டி.இமான். இயக்குனர் நேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஜில்லாவுக்கு ராஜிவன் ஒளிப்பதிவு செய்கிறார், டி.இமான் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வாலும் தம்பியாக மகத்தும் நடிக்க உள்ளனர்.

Sunday, March 10, 2013

இறுதிக் கட்டத்தில் தலைவா… படப்பிடிப்புக்கு ஆஸ்திரேலியா செல்கிறார்கள்

09-thalaivaa-1-300தன் ரசிகர்களைத் தவிர, மற்றவர்களும்கூட தன்னை தலைவா என்றழைக்க என்ன வழி என்று ரூம் போட்டு யோசித்து, தன் படத்துக்கு தலைப்பு வைத்த விஜய் அன்ட் கோ, படத்தை முடிக்கும் வேலைகளில் படுபிஸியாக உள்ளது. இப்போது படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறார்கள். ஏ எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அமலா பாலுடன் விஜய் டூயட் பாடும் காட்சிகள் ஸ்பெயினில் படமாக்கப்பட்டன. பின்னர் மீண்டும் மும்பைக்கே திரும்பிய படக்குழு அங்கு வைத்து விஜய் – மும்பை நடிகை ராகினி நந்த்வானி நடிக்கும் காட்சிகளைப் படமாக்கினர்.
இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக வரும் 15ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது படக்குழு. அங்கு ஒரு மாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு திரும்புகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படுகிறது.

Friday, March 8, 2013

துள்ளி விளையாடு இசையை வெளியிட்டார் விஜய்

08-vijay-new-600துள்ளி விளையாடு படத்தின் முதல் இசை குறுந்தகட்டை வெளியிட்டார் நடிகர் விஜய். ப்ரியமுடன் படம் மூலம் நடிகர் விஜய்க்கு பெரிய பிரேக் கொடுத்தவர் வின்சென்ட் செல்வா. தொடர்ந்து யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர். த்ரில்லர் கதைகளை கையாள்வதில் தேர்ந்தவரான இவர் இப்போது கையிலெடுத்திருப்பது துள்ளி விளையாடு என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையை. படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா. இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் – வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர். இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரித்துள்ளார் .
எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்ய வின்சென்ட் செல்வாவின் ஃபேவரிட் இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோவை நடிகர் விஜய் மும்பையில் தலைவா படப்பிடிப்பின்போது வெளியிட்டார். இயக்குனர் வின்சென்ட் செல்வா, நாயகன் யுவராஜ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தயாரிப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடும் ஸ்ரீகாந்த் ஆகியோர் உடனிருந்தனர். ‘எனக்கு வெற்றிப் படத்தைக் கொடுத்த உங்களுக்கு இந்த படம் பெரிய வெற்றியைத் தரட்டும்,’ என இயக்குனர் வின்சென்ட் செல்வாவிற்கு தனது வாழ்த்தை தெரிவித்தார் இளையதளபதி.

Thursday, March 7, 2013

தலைவா படத்தில் எனக்குத்தான் முக்கிய வேடம் - ராகினி நந்த்வானி


Rahini Nandhwani Claims Her Role Thalaiva Is Crucial விஜய் நடிக்கும் தலைவா படத்தில் எனக்கு முக்கியத்துவம் அதிகம். 2வது முக்கிய பாத்திரமே நான்தான், என்கிறார் அதில் விஜய்க்கு ஜோடியாக வரும் ராகினி நந்த்வானி. ஏஎல் விஜய் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தலைவா பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் அமலா பால் அறிவிக்கப்பட்டார். படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களில், அமலா பாலுக்கு நிகரான வேடத்தில் இன்னொரு நாயகியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தனர். அவர் ராகினி நந்த்வானி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர இவர். விஜய்யின் மும்பை காதலியாக வருகிறார். இவரும் விஜய்யும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஆஸ்திரேலியாவில் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அதிலும் ராகினி நடிக்கிறார். விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து ராகினி கூறுகையில், "தலைவா பட வாய்ப்பு கிடைத்தது எதிர்ப்பாராத இனிய அதிர்ச்சி. இந்தப் படத்தில் என் வேடம் மிகவும் எளிதானது. காரணம் நான் ஒரு வட இந்திய பெண்ணாகவே இதில் நடித்தேன். எனது வசனங்கள் முழுவதும் இந்தி தான். ஒவ்வொரு முறையும் விஜயுடன் நடிக்கும் போது எனக்கு படபடப்பாக இருக்கும். இந்த படத்தில் நான் ஏதோ வந்து போகும் கதாபாத்திரம் அல்ல. படத்தின் 2-வது முக்கிய கதாபாத்திரம். விஜயுடன் ஒரு பாடலில் கூட நடித்துள்ளேன். விஜய் மிகவும் எளிமையானவர். நம்பிக்கைக்கு உரியவர்," என்றார். இந்த இரண்டாவது ஹீரோயின் விவகாரமே அமலா பாலை கடுப்பேற்றியிருந்தது. இந்த நேரத்தில் இப்படி ஒரு பேட்டி!

Vijay's 'Thalaivaa' almost complete

Being an extremely organized planner, director Vijay has completed about 70% of the upcoming Ilayathalapathy flick 'Thalaivaa'. Of everybody else who is happy with the progress, Vijay is the most contended with the results. The team has already completed three songs and most of the Mumbai shooting. Only the Australia schedule is pending, the scenes of which will form a vital part of the first half.

The crew is confident of a May/June movie release. The film has Vijay and Amala Paul in the lead with Santhanam, Rajeev Pillai and Ponvannan in crucial roles. Nirav Shah is cranking the camera to the tunes set by GV Prakash. The audio release of the movie is expected to be in April, or latest by the first week of May.

அடுத்து விஜய்யை இயக்கும் லிங்குசாமி

அடுத்து விஜய்யை இயக்கும் லிங்குசாமி

ரன், சண்டக்கோழி, வேட்டை படக் கதைகளை விஜய்யிடம் கூறியும் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் தான் சூர்யாவை வைத்து எடுக்கும் படத்தை முடித்த பிறகு இளைய தளபதியுடன் படம் பண்ணப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரன், சண்டக்கோழி, வேட்டையை நழுவவிட்ட விஜய்

ரன், சண்டக்கோழி மற்றும் வேட்டை படங்கள் விஜய் நடிக்க வேண்டியது என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து படம் எடுக்க கோலிவுட் இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கு இயக்குனர் லிங்குசாமி ஒன்றும் விதிவிலக்கு அல்ல. விஜய் சில படங்களின் கதையைக் கேட்டு அதில் நடிக்க முடியாமல் போயுள்ளது. அந்த படங்கள் ரிலீஸான பிறகு அடடடா நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று அவர் வருத்தப்பட்டதும் உண்டு. இந்நிலையில் விஜய் மிஸ் பண்ணிய மேலும் 3 படங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

சென்னையில் நடந்த சிசிஎல் பார்ட்டிக்கு வந்த விஜய், நயன்தாரா

சென்னையில் நடந்த சிசிஎல் பார்ட்டியில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர். சிசிஎல் 3வது சீசன் சென்னை அணிக்கு ராசியில்லாததாகிவிட்டது. இந்த சீசனில் சென்னை அணி வெளியேறிவிட்டது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் சென்னை ரைனோஸ் அணிக்கு ஒரு பார்ட்டி கொடுக்கப்பட்டது. அந்த பார்ட்டிக்கு இளைய தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வந்திருந்தார். அடுத்து அழகுச் சிலை நயன்தாரா வந்திருந்தார். பார்ட்டியில் ஷாம், விஷால், பரத், சோனியா அகர்வால், கன்னட நடிகரும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி கேப்டனுமான சுதீப், கர்நாடகா அணியின் உரிமையாளர் அசோக் கெனி, விக்ராந்த், ஜீவா, விஷ்ணு, ஆர்யா, ஜே ரமேஷ், ஷிவா, சாந்தனு, ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிரித்துப் பேசும் விஜய்

 விஜய் மற்றும் நயன்தாரா வந்தவுடன் தான் பார்ட்டி களை கெட்டியது என்று கூறப்படுகிறது.



பார்ட்டியில் விஜய்

 பார்ட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும், சென்னை அணியும் நட்புடன் பழகியுள்ளனர்.




Tuesday, March 5, 2013

விஜய்க்கு பெயர் வாங்கிக் கொடுத்த பூவே உனக்காக படத்தை......

அஜீத், விஜய் நடித்தாலும் கதை சரியில்லை என்றால் படம் ஓடாது என்று இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார். விஜய்க்கு பெயர் வாங்கிக் கொடுத்த பூவே உனக்காக படத்தை இயக்கிய விக்ரமன் தற்போது நினைத்தது யாரோ படத்தை எடுத்து வருகிறார். தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்திருக்கும் அவர் கார்த்திக், விஜய், சூர்யா, விஜயகாந்த், சரத் குமார் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்துள்ளார். அவரது இயக்கத்தில் நடித்த பெரிய ஹீரோக்களுக்கு படம் ஓடியது மட்டுமில்லாமல் அவர்களுக்கு பெயரும் கிடைத்தது.

பூவே உனக்காக 
விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தை இப்போது பார்த்தாலும் விஜயின் நடிப்பை பாராட்டத் தோன்றும். விஜயின் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது என்று கூட கூறலாம்.



Monday, March 4, 2013

துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஒரு பாட்டுக்கு ஆடும் விஜய்

03-1362295907-vijay-600 துப்பாக்கி இந்தி ரீமேக்கான பிஸ்டலில் அக்ஷய் குமாருடன் விஜய் ஒரு பாட்டுக்கு ஆடவிருக்கிறார். விஜய், காஜல் அகர்வால், ஜெயராம் உள்ளிட்டோரை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த படம் துப்பாக்கி. நீண்ட நாட்கள் கழித்து விஜய்க்கு அமைந்த பெரிய ஹிட் படம் என்றால் அது துப்பாக்கி தான். இந்நிலையில் முருகதாஸ் துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இந்தியில் காஜல் கதாபாத்திரத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சோனாக்ஷிக்காவது கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.