Friday, August 30, 2013

SIIMA Awards 2013 Nominees

SIIMA Awards 2013 Nominees
Ilayathalapathy Vijay’s Thuppakki has got nomination in 10 Categories in SIIMA Awards 2013. Vijay has been nominated for best actor and best play back singer. A.R Murugadoss has been nominated for best director, Thuppakki for best film and Kajal Agarwal has been nominated for best actress awards.

SIIMA, an acronym for South Indian International Movie Awards, is a one-of-its-kind endeavour to present South Indian Cinema on a global platform. SIIMA consists of film from language Tamil, Telugu, Kannada and Malayalam industries.

SIIMA Awards 2013 will be held on September 12th & 13th, 2013 in U.A.E. Biggest start of south Indian cinema Shruti Haasan, Hansika, Shriya, Richa Gangopadhyay, Pranitha, Anirudh, Andrea, Lakshmi Menon and Remya Nambeesan will perform at the event.

Tuesday, August 27, 2013

'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்

விஜய் நடித்த தலைவா படத்தின் கதை கற்பனையானது. எந்த நிஜ மனிதர்களையும் குறிப்பிட்டு அந்தப் படம் எடுக்கவில்லை. எனவே படத்துக்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று இயக்குநர் விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர், "தலைவா' படம் மும்பையில் வாழ்ந்த தனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை பற்றியது. தனது தாத்தாவும், தந்தையும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது. "தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். அதனால் அந்தப் படத்தை வெளியிடத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தயாரிப்பாளர், இயக்குநர் உள்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இது குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்
"தலைவா' படத்தை தடை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தவர் குறிப்பிட்டபடி, அந்தப் படம் யாரையும் மையப்படுத்தி எடுக்கவில்லை. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தின் கதாபாத்திரங்கள் உள்பட அனைத்தும் கற்பனைக் கதைதான். 

படத்தில் வரும் சத்யராஜ் கதாபாத்திரம் எந்த தொழிலும் செய்வதாக காட்டப்படவில்லை. மேலும், அவர் எந்த சங்கத்துக்கும் தலைவராக இருக்கவில்லை. அவர் அங்குள்ள ஏழைகள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் உதவி செய்வதாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது.
'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்
இது தவிர, அந்த கதாபாத்திரம் குறிப்பிட்ட சாதி, மதம், மொழி மக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. மகாராஷ்டிரம், பிகார், தமிழகம் மற்றும் இதர மாநில மக்களுக்காக அவர் உதவுவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. 

மனுதாரர் குறிப்பிட்டபடி மும்பை தாராவி பகுதியில் எந்த படப்பிடிப்பும் நடத்தவில்லை. மும்பை கடற்கரை ஓரங்களில்தான் நடத்தப்பட்டது. மனுதாரரின் மனுவில் கூறியவாறு படத்தில் யாரையும் குறிப்பிடவில்லை. அதனால் படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என இயக்குநர் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

வழக்கை விசாரித்த இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம், இந்த வழக்கு தொடர்பான உத்தரவை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

ஏற்கனவே பட்டது பத்தாதா, லீடரின் அரசியல் பஞ்ச் டயலாக்கை நீக்கிய தயாரிப்பாளர்



லீடர் படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்கள் பேசி வந்த பிரச்சனையை அடுத்து தளபதி நடிக்கும் மாவட்ட படத்தில் வரும் அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் நீக்கிவிட்டாராம். 

தளபதி நடிகர் லீடர் படத்தில் ஒரு சில அரசியல் பஞ்ச் வசனங்களை பேசியதற்கே படம் அறிவித்தபடி ரிலீஸாக முடியாமல் போனது. இதையடுத்து அரசிடம் மன்றாடி படத்தை ரிலீஸ் செய்தனர். இந்நிலையில் தளபதி தற்போது நடித்து வரும் மாவட்ட படத்திலும் அரசியல் பஞ்ச் வசனங்களை வைத்திருந்தனர். 

லீடர் பிரச்சனையைப் பார்த்து அதிர்ந்த மாவட்ட பட தயாரிப்பாளர் தனது படத்தில் இருந்து அரசியல் பஞ்ச் வசனங்களை நீக்கிவிட்டாராம். மேலும் ஏற்கனவே படமாக்கப்பட்ட அரசியல் பஞ்ச் வசன காட்சிகளையும் தூக்கி கடாசிவிட்டாராம். நான் தயாரிக்கும் படத்தில் அரசியல் பஞ்ச்சோ, அல்லது யாரையாவது தாக்கியோ எந்த வசனமும் இருக்கவே கூடாது என்று இயக்குனர் மற்றும் தளபதியிடம் கறாராக கூறிவிட்டாராம் தயாரிப்பாளர். 

Monday, August 26, 2013

65 சதவீதம் முடிந்தது... பொங்கலுக்கு ஜில்லா!

தலைவா பட தலைவலியிலிருந்து விடுபட்டு ஜில்லாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இந்தப் படம் நிச்சயம் பொங்கலுக்கு ரிலீசாகிவிடும் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர். 

தலைவா படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் ஜில்லா. சூப்பர் குட் ஆர்பி சவுத்ரி தயாரிக்கும் படம் இது.

மோகன்லால் 


இந்தப் படத்தில் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் மோகன்லால். மங்காத்தா படத்தில் நடித்த மகத்தும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நேசன் இயக்கும் இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார்.

காஜல் அகர்வால் 

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். துப்பாக்கி படத்துக்குப் பிறகு அவர் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். காமெடிக்கு பரோட்டா சூரியைப் போட்டுள்ளனர்.

65 சதவீதம் 

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 65 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. மோகன் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போடப்பட்டு தொடர்ச்சியாக படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்து ஹைதராபாதுக்கு கிளம்புகிறது ஜில்லா குழு.


ஜித்தன் ரமேஷ்

 இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மகனும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் படம் குறித்துக் கூறுகையில், "படத்தின் பர்ஸ்ட் லுக்கை இப்போதே காட்டிவிடத் தயாராக உள்ளேன். ஆனால் விஜய் அண்ணாவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

பொங்கலுக்கு.. 

இந்தப் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி. தலைவா படத்துக்கு வந்த சிக்கல்களை மனதில் வைத்து காட்சிகளில் கவனமாக இருக்கும்படி இயக்குநருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

நடிகர் விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த மு.க. அழகிரி மகன் துரைதயாநிதி!

தலைவா திரைப்படத்தை வெளிநாட்டில் பார்த்துவிட்டு அங்கிருந்தபடியே நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனம்திறந்து பாராட்டியிருக்கிறார் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி.

தலைவா பற்றி ட்விட்டரில் 


தலைவா திரைப்படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு காட்டி வருபவர் துரை தயாநிதி. மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி கூட, தலைவா பட பிரச்சனை முடிந்த நிலையில் அம்மாவுக்கு யாரும் நன்றி கூறலையே என்று கலாய்த்திருந்த போது அவருடன் துரைதயாநிதி அழகிரியும் கை கோர்த்திருந்தார்

பாரீஸில் படம் பார்த்த துரைதயாநிதி 

இந்நிலையில் தலைவா படத்தை பாரீஸில் பார்க்கப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.


விஜய்க்கு வாழ்த்து

 தற்போது தமது ட்விட்டர் பக்கத்தில், விஜய்யுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.. நல்ல மனதுக்காரர் என்று கூறியிருக்கிறார்

சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேனே.. 

அத்துடன் அவருடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்று பதிவிட்டிருக்கிறார். அப்படியென்ன பகிர்ந்து கொண்டிருப்பார்?



விஜய்யின் 'ஜில்லா' ஹிட்டாக பழனி முருகனிடம் வேண்டிய ஜீவா

விஜய்யின் 'ஜில்லா' ஹிட்டாக பழனி முருகனிடம் வேண்டிய ஜீவாஜீவா தான் நடிக்கும் படங்களும், தனது தந்தை தயாரிக்கும் ஜில்லாவும் ஹிட்டாக பழனி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார். 

ஜீவா யான் மற்றும் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது மனைவி சுப்ரியா மற்றும் மகன் ஸ்பர்ஷுடன் கொடைக்கானலுக்கு அண்மையில் சென்றார். கொடைக்கானலில் ரிலாக்ஸ் செய்த அவர் அப்படியே அங்கிருந்து பழனிக்கு சென்றார். 

பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்ற அவர் தான் நடிக்கும் படங்கள் ஹிட்டாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். மேலும் தனது தந்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் விஜய்யின் ஜில்லா படமும் ஹிட்டாக பிரார்த்தனை செய்தார் ஜீவா. 

ஜீவா நல்லா வருவடா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நஸீம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டான்ஸ் ஹீரோக்கள் பட்டியலில் விஜய் பெயரை மறந்துவிட்டு, மழுப்பிய பிரபுதேவா

சிறப்பாக டான்ஸ் ஆடும் ஹீரோக்கள் யார், யார் என்று கேட்டபோது பிரபுதேவா விஜய்யின் பெயரை மட்டும் கூற மறந்துவிட்டார். இதையடுத்து ஒரு பஞ்ச் டயலாக்கை விட்டு மழுப்பிவிட்டார். 

ரீமேக் படங்களை எடுக்க வேண்டும் என்றால் கூப்பிடுங்கள் பிரபுவதேவாவை என்று பாலிவுட்டில் கூறுகிறார்களாம். மனிதர் அந்த அளவுக்கு ரீமேக் செய்வதில் கெட்டிக்காரராக உள்ளார். 

அவரது படங்களில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பேராவலாக உள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

டான்ஸ் ஹீரோ


 பிரபுதேவா தான் டான்ஸுக்கு பெயர் போனவர் அல்லவா. அதனால் அவரிடம் சிறப்பாக நடனமாடும் ஹீரோக்கள் யார், யார் என்று கொஞ்சம் கூறுங்களேன் என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.

விஜய்யை மறந்த பிரபு

சிறப்பாக டான்ஸ் ஆடும் ஹீரோக்கள் பட்டியலை கொடுத்த பிரபுவதேவா அதில் சிம்பு, தனுஷ் பெயரை எல்லாம் தெரிவித்தார் ஆனால் ஆட்ட நாயகன் விஜய்யின் பெயரைக் கூற மறந்துவிட்டார்.

மழுப்பல் 

விஜய்யின் பெயரை பிரபுதேவா மறந்ததால் அவரது ரசிகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் ரீமேக் மன்னனை கோபித்துக் கொண்டனர். இதையடுத்து பிரபுதேவா மழுப்பலான பதில் ஒன்றை அளித்துள்ளார்.


விஜய்க்கு எதுக்கு சர்டிபிகேட்? 

விஜய் எவ்வளவு அருமையான டான்ஸர் என்பது மக்களுக்கு தெரியும். நான் அவருக்கு சர்டிபிகேட் கொடுக்கத் தேவையில்லை. அந்த பேட்டியில் அவர் பெயரை எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை. அந்த பட்டியலில் விஜய்யின் பெயரை முதலிடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி சமாளித்தார் பிரபுதேவா.



படத்தை வாங்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுக்கிறார்: தலைவா படத் தயாரிப்பாளர் மீது புகார்

படத்தை வாங்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுக்கிறார்: தலைவா படத் தயாரிப்பாளர் மீது புகார்தலைவா படத் தயாரிப்பாளர் தன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக இயக்குனர் ரமேஷ் செல்வன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது இயக்குனர் ரமேஷ் செல்வன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,

நான் உளவுத்துறை, ஜனனம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது சத்யராஜ் கதாநாயகனாக வைத்து ‘கலவரம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து, தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை இரண்டு வாரங்களுக்கு முன் நேரில் அழைத்து பேசினார். அப்போது எங்களுடைய தலைவா படத்தின் பிரச்னையில் நாளை முடிவு தெரிந்துவிடும். தெரிந்ததும் தலைவா படத்தை உடனே வெளியிடுகிறோம். உங்களுடைய படம் கலவரம் வெளியிட்டால் எனது தலைவா படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது. 

எனவே நானே உங்களுடைய படத்தினை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன். ஒப்பந்தம் தயார் செய்து கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார். அதன்படி நேற்று ஒப்பந்தத்தோடு சந்திரபிரகாஷ் ஜெயினை சந்திக்க சென்றோம். அதற்கு அவர் எங்களை சந்திக்க மறுத்ததுடன், எங்களை தாழ்த்தியும் அவமானப்படுத்தியது மட்டுமில்லாது உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி படத்தை வாங்க மறுத்துவிட்டார். படத்தை வெளியிடாததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நானும் எனது தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் தற்கொலை செய்து செள்ளுவதை தவிர வேறு வழியில்லை. எனவே இந்த பிரச்னையில் போலீசார் தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சந்திரபிரகாஷ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Sunday, August 25, 2013

விஜய், முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி 2 வருதாங்கணா?

விஜய், ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் இணையும் படம் துப்பாக்கி இரண்டாம் பாகமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

விஜய் ஏ.ஆர். முருகதாஸின் துப்பாக்கி படத்தில் நடித்தார். இதையடுத்து இந்த கூட்டணி மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்றவிருக்கிறது. துப்பாக்கியை அடுத்து விஜய் தலைவா, ஜில்லா படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 

அதில் தலைவா படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 20ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆனது.

ஜில்லா

நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. துப்பாக்கியை அடுத்து இந்த படத்தில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

அதிரடி 

ஜில்லாவை முடித்த உடன் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிரடி என்று பெயர் வைத்ததாக தகவல்கள் வந்தன. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.


துப்பாக்கி 2? 

விஜய், முருகதாஸ் மீண்டும் சேர்ந்து பணியாற்றும் படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமில்லை என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமந்தா 

விஜய்க்கு ஜோடியாக முருகதாஸின் படத்தில் சமந்தா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை

அட, விஜய்க்கு கல்யாணமாகி 14 வருஷமாயிடுச்சா?

விஜய், சங்கீதா தம்பதி இன்று தங்களது 14வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். 

இளையதளபதி விஜய் தனது இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். அவரது பெற்றோர் அவரை டாக்டராக்க விரும்பினார்கள். ஆனால் அவர் நடிகராகிவிட்டார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். 

அவருக்கு தமிழகத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

25-8-1999 

விஜய் தனது ரசிகையான இலங்கை தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மணந்தார்.


ஜேசன் சஞ்சய் 

திருமணமான மறு ஆண்டு அதாவது 2000த்தில் விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜேசன் சஞ்சய் என்று பெயர் வைத்தனர்.


திவ்யா சாஷா

 2005ம் ஆண்டு விஜய்யின் மனைவி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். விஜய் தனது செல்ல மகளுக்கு திவ்யா சாஷா என்று பெயர் வைத்தார்.


வேட்டைக்காரன் 

வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலில் சில ஸ்டெப்ஸ் போட்டிருப்பார் ஜேசன் சஞ்சய்.

டோணி மாதிரி 

ஜேசனுக்கு கேப்டன் டோணி போன்று பெரிய கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்று ஆசையாம். அதனால் கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறாராம்.


மகளை காட்டவே இல்லையே 

விஜய் தனது மகனை படத்தில் ஆட வைத்தார், ஐபிஎல் போட்டிகளுக்கு அழைத்து வந்தார். ஆனால் மகளை மட்டும் இன்னும் காட்டவில்லையே.

14வது திருமண நாள் 

விஜய், சங்கீதா தம்பதி இன்று தங்களின் 14வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.

நீங்களும் வாழ்த்துங்களேன்

 இளையதளபதி விஜய்-சங்கீதா தம்பதிக்கு நீங்களும் வாழ்த்து தெரிவிக்கலாமே!

Saturday, August 24, 2013

விஜய் ட்விட்டரில் இல்லை... அந்த அறிக்கை எப்படி வந்ததென்றும் தெரியவில்லை! - விஜய் மேனேஜர்

விஜய் ட்விட்டரில் இல்லை... அந்த அறிக்கை எப்படி வந்ததென்றும் தெரியவில்லை! - விஜய் மேனேஜர்விஜய் ட்விட்டரில் இல்லை. அவர் பெயரில் வந்த அறிக்கை யார் வெளியிட்டதென்றும் தெரியவில்லை என்று விஜய்யின் மேலாளர் தெரிவித்துள்ளார். 

அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தை கலைப்பேன் என்றும் நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக அவர் பெயரில் ட்விட்டரில் அறிக்கை வந்துள்ளது. 

விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அவற்றை நிர்வகித்து வருபவர் எஸ்ஏ சந்திரசேகரன்தான். 

சமீபத்தில் மீனப்பாக்கம் விமான நிலையம் எதிரில் ரசிகர் மன்ற மாநாடு நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க செய்யப்பட்ட ஏற்பாடு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 

விஜய் பிறந்த நாள் விழாவைக் கூட வெளிப்படையாகக் கொண்டாடவில்லை. அதைத் தொடர்ந்து வந்த தலைவா படப் பிரச்சினையில் விஜய் கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். திரையுலகமும் அவருக்குக் கைக் கொடுக்கவில்லை. 

ஒரு வழியாக படம் வெளியான பிறகு, "நான் அரசியலில் ஈடுபடமாட்டேன்" என்ற விஜய் அறிக்கை வெளியானது. 

"எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை எழுத வேண்டாம். என் வேண்டுகோளையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைப்பேன். ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ வேறு யாரோ ரசிகர் மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுகுறித்து நேற்று விஜய்யின் மக்கள் தொடர்பாளர் மற்றும் மேனேஜர் பி.டி.செல்வகுமாரிடம் கேட்டபோது, எனக்குத் தெரியாதே என்று கூறிவிட்டார். இன்று மீண்டும் தொடர்பு கொண்டபோது, "விஜய் ட்விட்டரில் இல்லை. நானும் எந்த சமூக வலைத் தளத்திலும் இல்லை. விஜய் பெயரில் இந்தச் செய்தி எப்படி வெளியானதென்று தெரியவில்லை. யாரும் இதை நம்ப வேண்டாம்,' என்றார்.

Friday, August 23, 2013

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை... ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைப்பு - நடிகர் விஜய்

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை... ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைப்பு  - நடிகர் விஜய்எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. மீறி என் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தைக் கலைத்துவிடுவேன், என்று விஜய் அறிவித்துள்ளார். 

இனி ரசிகர் மன்ற விவகாரங்களில் தன் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் ஈடுபடமாட்டார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் தன் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதற்கென தனி கொடியையும் நயன்தாராவை வைத்து வெளியிட்டார். 

தொடர்ந்து ஆங்காங்கே நிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இலவசத் திருமண நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். 

திடீரென ஒரு நாள் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்துவிட்டு வந்து பிரஸ் மீட் வைத்து அறிவித்தார். ராகுல் காந்தியே தன்னை அழைத்ததாகக் கூறினார். ஆனால் ராகுல் காந்தியோ தான் யாரையும் அழைக்கவில்லை என்றும், அப்பாயின்ட்மென்ட் கேட்டு வந்ததால் விஜய்யைச் சந்தித்தேன் என்றும் கூறினார். 

தொடர்ந்து காவலன் படம் வெளியீட்டுக்கு அப்போதைய ஆளும்கட்சி திமுக முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறி பேட்டிகள் கொடுத்த விஜய், திடீரென ஒரு திருமணத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவைச் சந்தித்து வணக்கம் வைத்தார். தொடர்ந்து தேர்தலின்போது அதிமுகவை ஆதரிப்பதாகக் கூறினார். போயஸ் தோட்டத்துக்குப் போய் ஜெயலலிதாவை தன் தந்தையுடன் சந்தித்தார். 

அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே.எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நண்பன், துப்பாக்கி என இரு படங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகி, வசூலையும் கொடுத்தன. 

இந்த நேரத்தில் விஜய் பெரிய அளவில் அரசியலில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சுகள் கிளம்பின. அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் போகும் இடமெல்லாம் அப்படித்தான் பேசி வந்தார். ரசிகர் மன்ற விளம்பரங்களில் ஒரு பக்கம் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு புரட்சித் தலைவி அம்மா என்று குறிப்பிட்டிருந்த நிர்வாகிகள், அதற்கு எதிர்ப்பக்கம் எஸ் ஏ சந்திரசேகரன் படத்தைப் போட்டு புரட்சி இயக்குநர் அப்பா என குறிப்பிட்டிருந்தார்கள். 

இது அதிமுகவினரை மட்டுமல்ல, பார்த்த அனைவரையுமே முகம் சுழிக்க வைத்தது. நான் அண்ணாவைப் போன்றவன்.. என் மகன் எம்ஜிஆரைப் போன்ற ஆற்றல் மிக்கவன் என்று ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார் எஸ்ஏ சந்திரசேகரன். 

இந்த நேரத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தலைவா என்று தலைப்பிட்டு, அதற்குக் கீழே தலைமை ஏற்கும் நேரம் இது என ஆங்கில வாசகம் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் பாத்திரங்களில், விஜய்யின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு பெயர் அண்ணா. அண்ணாவுக்குப் பிறகு விஜய் தலைமை ஏற்க வருவதுபோல காட்சிகள் வசனங்கள் வைத்திருந்தனர். 

இந்தப் படம் வெளியாக பட்ட பாடுகள் எல்லாம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். 

இந்த நிலையில்தான் நேற்று விஜய் திடீரென்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், "அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. தயவுசெய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை போடவேண்டாம். 

அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மன்றங்களை கலைக்கக்கூட தயங்க மாட்டேன். 

இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ, வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிடமாட்டார்கள்". -

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு எப்போதும் www.vijeenthiran.blogspot.com


அடுத்தது 'அதிரடி' எல்லாம் இல்லீங்கணா: விஜய்

அடுத்தது 'அதிரடி' எல்லாம் இல்லீங்கணா: விஜய்ஜில்லா படத்தை அடுத்து தான் நடிக்கும் படத்தின் பெயர் அதிரடி இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார். 

விஜய்யின் தலைவா படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 20ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆனது. விஜய் தற்போது நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் சேர்ந்து ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். 

படத்தில் விஜய் மதுரைக்கார தம்பியாக வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிரடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இது குறித்து விஜய் கூறுகையில், 

நான் ஜில்லாவை முடித்துவிட்டு முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மை. ஆனால் படத்தின் தலைப்பு அதிரடி இல்லை. அது வெறும் வதந்தி தான். படத் தலைப்பை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

தலைவா பட விவகாரம்- எனக்கு சம்பந்தமில்லை என்கிறார் விஜயகாந்த்!

தலைவா பட விவகாரம்- எனக்கு சம்பந்தமில்லை என்கிறார் விஜயகாந்த்!நான் இப்போது சினிமாக்காரன் இல்லை.. நான் ஒரு அரசியல்வாதி, எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை, என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் வந்திருந்தனர். 

பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த விஜயகாந்த், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது: 

ஆந்திராவை பிரிப்பது போல் தமிழகத்திலும் மாநிலம் பிரிக்கப்படுமா?. 

ஆந்திராவிலேயே இதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. இங்கு அதற்கான முடிவு வந்தபிறகு தமிழகம் பிரிப்பது பற்றி பின்னர் ஆலோசிக்கலாம்.

 தலைவா சிக்கல்

 தமிழகத்தில் விஜய் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது ஏன்? சினிமாவுக்கும், எனக்கும் இப்போது சம்பந்தம் இல்லை. நான் தற்போது அரசியலில் உள்ளேன் இவ்வாறு அவர் கூறினார். 

சினிமா நடிகராக இருந்து நடிகர் சங்கத்தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். தலைவா விவகாரத்தில் எந்த குரலும் கொடுக்கவில்லை. இப்போது நான் சினிமாக்காரனே இல்லை என்று பதில் கூறியுள்ளார்.

Wednesday, August 21, 2013

'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல!

'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல!
தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்

 நாயகன் - ஒரு கிலோ 

சர்க்கார் - அரை கிலோ 

பாம்பே -1 துண்டு 

தேவர்மகன் - 6 பல் 

இந்திரா - ஒரு தேக்கரண்டி 

பில்லா - அரை கப் 

புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன் 

பொல்லாதவன் - தேவையான அளவு 

கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும். 

இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் . 

பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். 

ன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். 

நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். 

நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி.

தலைவா: தியேட்டர் முன்பு கெடா வெட்டி, மொட்டை போட்ட விஜய் ரசிகர்கள்

தலைவா படம் ரிலீஸானதையொட்டி விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுள்ளனர். 

தலைவா படம் கடந்த 9ம் தேதி அதாவது ரம்ஜான் அன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு முந்தைய நாள் இன்ன காரணம் என்று தெரியாமல் படத்தின் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து விஜய் தனது அப்பா சந்திரசேகரை அழைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார். முதல்வரை பார்க்க முடியாமல் போன வேகத்தில் திரும்பி வந்தார்.

மருத்துவமனையில் தயாரிப்பாளர் 

படத்தை ரிலீஸ் செய்யக் கோரி தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவழியாக ரிலீஸ் 

பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து படம் ஒரு வழியாக நேற்று தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.


உதயம் தியேட்டர் 

சென்னை உதயம் தியேட்டருக்கு தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விஜய் ரசிகர்கள் ஏக குஷியாக காணப்படுகின்றனர்.


ஆடு வெட்டி, மொட்டை 

புதுக்கோட்டையில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுக் கொண்டனர்.


பாலாபிஷேகம் 

ஆடு வெட்டிய ரசிகர்கள் விஜய்யின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். படம் பல நாட்கள் ஓடத் தான் இப்படி செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.





Monday, August 19, 2013

சர்ச்சையில் சிக்கித் தத்தளித்த படங்கள்: ஒரு பார்வை

சில காட்சிகள் மற்றும் வசனங்களால் சர்ச்சையில் சிக்கிய சில படங்களை பார்ப்போம்.

இந்திய திரை உலகம் இதுவரை எத்தனையோ படங்களை பார்த்துள்து. அதில் சில படங்கள் ரிலீஸாகும் முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும்.

அப்படி சர்ச்சைகளில் சிக்கித் தள்ளாடிய படங்களில் சிலவற்றை பார்ப்போம்.

தலைவா 

விஜய் நடித்துள்ள தலைவா படத்தில் அரசியல் சம்பந்தமான வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வரவே படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸாகவில்லை. அதன் பிறகு படக்குழுவினர் முதல்வரை அணுகி பிரச்சனையை தீர்த்தனர். ரம்ஜானுக்கு ரிலீஸாக வேண்டிய படம் ஒருவழியாக வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது

களிமண்ணு 

மலையாள படமான களிமண்ணுவில் நடிகை ஸ்வேதா மேனின் நிஜ பிரசவக் காட்சியை வைத்துள்ளனர். இதனால் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மெட்ராஸ் கஃபே 

ஜான், ஆபிரகாம் நடித்துள்ள இந்தி படமான மெட்ராஸ் கஃபே வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆனால் படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் போன்று காண்பித்துள்ளனர் என்று தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மேலும் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


விஸ்வரூபம் 

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை 
தீவிரவாதிகளாக காட்டியதாகக் கூறி அப்படத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய மாநில அரசு தடை விதித்தது. கமல் ஹாஸன் பல நாட்கள் போராடிய பிறகு படம் ரிலீஸ் ஆனது.


சின் 

வினோத் பாண்டேவின் இயக்கத்தில் வந்த படம் சின். அதில் பாதிரியாராக வந்த ஷைனி அஹுஜா இளம் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது போன்று காண்பிக்கப்பட்டது ரோமன் கத்தோலிக்கர்களை கோபமடையச் செய்தது. இந்த படத்தின் விளம்பர துணுக்குகளை கூட ஒளிபரப்ப டிவி சேனல்கள் மறுத்துவிட்டன.


ஃபயர் 

பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை மையமாக வைத்து தீபா மேத்தா எடுத்த படம் ஃபயர். 1998ல் இந்த படம் வெளியானபோது மும்பை மற்றும் டெல்லியில் உள்ள தியேட்டர்களை இந்து அமைப்பினர் தாக்கினர். ஆனால் கொல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டரில் படத்தை நிறுத்த அரசியல் அமைப்புகள் முயன்றபோது நிர்வாகமும், ரசிகர்களும் அதை எதிர்த்து போராடினர்.





தலைவா விவகாரம்..ஜெயலலிதாவை ட்விட்டரில் கலாய்த்த உதயநிதி! கரம் கோர்த்த துரைதயாநிதி!

தலைவா திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ட்விட்டரில் மு.க .ஸ்டாலின் மகன் உதயநிதி கலாய்க்க, அவருடன் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதியும் கரம் கோர்த்திருக்கிறார். 

தலைவா படம் ஆகஸ்ட் 9-ந் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் வெளியில் சொல்லிக் கொள்ளவே முடியாத 'உள்' காரணங்களால் முட்டுக்கட்டை நீடித்தது. 

ஒருவழியாக நாளை தலைவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவுதான் உதயநிதி ஸ்டாலினும் துரைதயாநிதி அழகிரியும் ட்விட்டரில் கலாய்த்திருக்கிறார்கள்.தலைவா விவகாரம்..ஜெயலலிதாவை ட்விட்டரில் கலாய்த்த உதயநிதி! கரம் கோர்த்த துரைதயாநிதி!

அம்மாவுக்கு நன்றி சொல்லலையே.

உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்னும் அம்மாவுக்கு யாரும் நன்றி சொல்லலையே? மாணவர் புரட்சி படைக்கு என்ன தொடர்பு? என்று கேட்டிருக்கிறார். 

கரம் கோர்த்த மு.க. அழகிரி மகன் 

இந்த ட்விட்டருக்கு பதில் கொடுத்திருப்பவர் மு.க. அழகிரி மகன் துரைதயாநிதி அழகிரிதலைவா விவகாரம்..ஜெயலலிதாவை ட்விட்டரில் கலாய்த்த உதயநிதி! கரம் கோர்த்த துரைதயாநிதி!

தலைவா பற்றி அழகிரி மகன் சொன்னது என்ன? 

தலைவா படம் செவ்வாய்க்கிழமை வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரை அரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதே இதே நடவடிக்கையை அரசு ஏன் முன்னரே எடுக்கவில்லை? அப்படி முன்னரே எடுத்திருந்தால் படம் பிரச்சனையின்றி ரிலீஸாகி இருக்குமே? நான் நினைக்கிறேன் இது சரியான கேள்வி என்று! மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்

தலைவாவுக்கு நாளை ராஜ உபச்சாரம் தான்

தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக நாளை உதயம் தியேட்டருக்கு கொண்டு வரப்படுகிறது. 

விஜய்யின் தலைவா படம் ஒரு வழியாக நாளை தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். தலைவா படத்தின் ரீல்பெட்டியை ரதத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள உதயம் தியேட்டருக்கு கொண்டு வருகின்றனர்.

தலைவா ரம்ஜானுக்கே வர வேண்டியது. ஆனால் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தலைவா ரிலீஸாகும் குஷியில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் விஜய்யை புகழ்ந்து ட்வீட் செய்து கொண்டிருக்கின்றனர். 

மேலும் படம் நிச்சயம் 100 நாட்கள் ஓடும் என்றும், திரையுலகில் ரஜினியைத் தவிர வேறு யாராலும் விஜய்யை அடித்துக்கொள்ள முடியாது என்றும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

Friday, August 16, 2013

அம்மா மனமிறங்குங்க... தலைவா ரிலீஸ் ஆகலேன்னா நடுத்தெருவுக்கு வந்துருவேன்- சந்திரபிரகாஷ் ஜெயின்

முதல்வர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம்   வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைவா படத்தை வெளியிட பல்வேறு வழிகளிலும் அதன் குழுவினர் முயற்சித்து வருகின்றனர். நேற்று நடிகர் விஜய் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று அதன் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் பேட்டி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கூடவே படத்தின் இயக்குநர் விஜய்யும் உடன் இருந்தார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்மா... 

அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன்.


நல்ல தயாரிப்பாளர்... நாணயமானவன் 

நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.

4 வருடமாக முயற்சித்து 

கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.
9ம் தேதி வெளியிட ஒப்பந்தம்

 கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.


யாரோ குண்டு மிரட்டல் விட்டுட்டாங்கம்மா... 

இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று 
வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.














தியேட்டர்காரர்கள் பயந்துட்டாங்கம்மா 

இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9-ந் தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.


வெளிமாநிலத்தில் வெளியாகிடுச்சேம்மா... 

ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.


திருட்டு டிவிடி வந்துருச்சேம்மா...

 இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும், திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது.


பெரிய கடனாளியாகி விடுவேன் 

இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன்.



மன உளைச்சல் 

இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள்.

அம்மா மனமிறங்கி... 

ஆகவே முதல்- அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.