Thursday, May 30, 2013

எகிறிய ‘தலைவா’ பட்ஜெட்: டென்ஷனில் தயாரிப்பாளர்கள்

30-1369913291-thalaivaa-team1-600தலைவா படத்தின் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டதை விட எகிறிவிட்டதாம். இதனால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
விஜய், அமலா பாலை வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் எடுத்துள்ள படம் தலைவா. இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் துவங்கி ஆஸ்திரேலியாவில் முடிந்தது.
ஆஸ்திரேலியாவில் பல நாட்கள் ஷூட்டிங் நடந்தது. அமலா மற்றும் ராகினியுடன் விஜய் ஆடும் பாடல்கள் அங்கு தான் படமாக்கப்பட்டன. மும்பையைவிட ஆஸ்திரேலியாவில் தான் அதிக நாட்கள் ஷூட்டிங் நடந்துள்ளது.

விஜய்யின் தலைவாவை வெளியிடும் வேந்தர் மூவீஸ்

எதிர்நீச்சல் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தலைவா படத்தின் உரிமையை வாங்கியுள்ளது வேந்தர் மூவீஸ். இயக்குநர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தலைவா. அமலா பால் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் விநியோக உரிமையைப் பெற பல நிறுவனங்கள் போட்டியிட்டன. இறுதியில் பெருந்தொகை கொடுத்து வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது.

vendhar movies release thalaivaa
இதன் கேரள விநியோக உரிமையை துப்பாக்கி படத்தை வெளியிட்ட தமீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கர்நாடக உரிமையை கே மஞ்சு பெற்றுள்ளார். 

இதனிடையே படத்தின் ஆடியோவை விஜய் பிறந்த நாளான அதாவது ஜூன் 22ம் தேதி வெளியிடவிருக்கின்றனர். 

வேந்தர் மூவீஸ் நிறுவனம் ஏற்கெனவே 5 படங்களின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவனம் வாங்கி வெளியிட்ட எதிர்நீச்சல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் வெற்றி விழாவை ஜெனீவாவில் பாரிவேந்தர் தலைமையில் நடத்தவிருக்கின்றனர்.
 


Wednesday, May 29, 2013

துள்ளிவிளையாடு படம் பார்த்து வின்செண்ட் செல்வாவைப் பாராட்டிய விஜய்!

Vijay Praised Director Vincent Selva துள்ளி விளையாடு படம் பார்த்துவிட்டு, அதன் இயக்குநர் வின்சென்ட் செல்வாவைப் பாராட்டினார் விஜய். விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற படங்களைத் தந்தவர் வின்செண்ட் செல்வா. ஜித்தன், வாட்டாக்குடி இரண்யன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இப்போது அவர் இயக்கத்தில் வெளிவரத் தயாராக இருக்கும் படம் துள்ளி விளையாடு. ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த விஜய், வின்செண்ட் செல்வாவை மிகவும் பாராட்டியிருக்கிறார். "கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்டோர் புதுமுகங்களாக இருந்தாலும், எனக்கு இந்தப் படம் புதியவர்கள் நடித்ததாகவே தெரியவில்லை... நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் போட்டியை ரசிகர்கள் நிச்சயம் மிகவும் விரும்புவார்கள்..," என்றார். படத்தின் பாடல்களை வெளியிட்டவரும் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. யு சான்றிதழ் பெற்றிருக்கும் துள்ளி விளையாடு விரைவில் வெளியாகவிருக்கிறது.

39வது பிறந்த நாள்… 3900 பேருக்கு உதவி!- நடிகர் விஜய் திட்டம்

28-vijay13-300தனது 39வது பிறந்த நாளன்று 3900 பேருக்கு உதவிகள் வழங்கப் போகிறாராம் நடிகர் விஜய். நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜூன் 22-ம் தேதி வருகிறது.இதற்காக இப்போதே அவரது ரசிகர் மன்றத்தின் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் விஜய் பிறந்த நாளை சென்னையில் ஒரு மாநாடு மாதிரி நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படத்தின் பாடல்களை ஜூன் 22 காலையில் வெளியிடுகின்றனர். அன்று மாலை ஜூன் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் மிகப் பிரம்மாண்ட மேடை அமைத்து, 3900 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் போகிறார்களாம்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். ரசிகர்களிடமிருந்தும் நிதி திரட்டும் வேலை நடப்பதாகத் தெரிகிறது.
கடைசியாக விஜய் கலந்துகொண்ட இரு இலவச திருமண உதவித் திட்ட விழாக்கள் படு சொதப்பலாக மாறின. காரணம் ரசிகர்களின் ஆர்வக் கோளாறு மற்றும் போதிய பாதுகாப்பின்மை. எனவே இந்த நிகழ்ச்சியை பக்காவாக திட்டமிட்டுள்ளார்களாம். முதல்முறையாக ரசிகர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுத்து தொண்டர் படை போல ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளார்களாம்.
தொண்டர் படையே தொந்தரவுப் படையாக மாறாமலிருக்கணுமே!!

Tuesday, May 21, 2013

நீங்கள் பார்த்திராத உங்கள் 'தலைவா'


ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பார்ப்போம். 

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால், சந்தானம் நடித்துள்ள படம் தலைவா. மும்பையில் துவங்கிய படப்பிடிப்பு இறுதியில் ஆஸ்திரேலியாவில் முடிந்தது. இந்த படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார். 

அந்த பாடலை கேட்ட அஜீத் இந்த ஆண்டின் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தலைவா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக...

தலைவா விஜய் 

எங்கோ சீரியஸாகப் பார்க்கும் விஜய்.



கிட்டார் வாசித்து ஹீரோயினை இம்பிரஸ் பண்ண முயற்சிக்கும் விஜய்.

இந்த போஸ் எப்படி இருக்கு?

கன்னத்துடன் கன்னம் வைத்து 

அமலா பால் கன்னத்துடன் கன்னம் வைத்து சிரிக்கும் விஜய்

மிஸ் யூ விஜய்

படிப்பிடிப்பு முடிந்துள்ளதால் அமலா பால் தலைவாவை மிஸ் பண்ணுகிறாராம்.
முத்தம் கொடுக்கிறாரா?

 விஜய் முத்தம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் கண்ணை மூடி இருக்கும் அமலா.

சந்தானத்துடன் விஜய்

 சந்தானம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை விஜய் இந்த பார்வை பார்க்கிறாரே
விஜய்யுடன் விஜய் 

இளைய தளபதிக்கு காட்சியை விளக்கும் இயக்குனர் விஜய்.
கொஞ்சம் சிரிங்க விஜய்

 என்னெவென்று தெரியவில்லை இரண்டு விஜய்யுமே சீரியஸா இருக்காங்கப்பா.









Monday, May 20, 2013

விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை…!

thuakkteam20513_mகடந்தாண்டு வெளிவந்த படங்களில் பாக்ஸ்ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்த படங்களில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படமும் ஒன்று. விஜய்க்கும் சரி, முருகதாஸ்க்கும் சரி வணிக ரீதியாக பெரும் வெற்றியை கொடுத்த படம் இது. அதுமட்டுமின்றி சமீபத்தில் விஜய் டி.வி., சார்பில் வழங்கப்பட்ட விருத‌ில், இப்படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்தன.
இந்நிலையில் துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸூம், விஜய்யும் சேர்ந்து ஒரு படம் பண்ண உள்ளனர் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளன. அது எந்த மாதிரியான படம், யாரும் ஹீரோயின் என்ற விபரம் எல்லாம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் மீண்டும் இணையவுள்ள இப்படத்திற்கு கொலவெறி அனிரூத் மட்டும் இசையமைக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அனிரூத் கூறியுள்ளதாவது, ஆமாம், விஜய்-முருகதாஸ் மீண்டும் இணையும் படத்திற்கு நான் இசையமைக்க இருக்கிறேன். இதுதொடர்பாக அவர்களை சந்தித்து பேசியுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் தான் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது பற்றி வெளியான செய்தி தவறானது என்றும், விஜய் படம் உட்பட மிகப்பெரிய படங்கள் கைவசம் நிறைய இருப்பதால் தற்போது இசையில் மட்டுமே தனது முழு கவனமும் இருப்பதாக கூறியுள்ளார்.
அனிரூத் இசையமைப்பில் வெளிவந்த இரண்டு படங்களின் (3, எதிநீச்சல்) பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், கோலிவுட் இயக்குனர்களின் பலரது பார்வை இப்போது அனிரூத் பக்கம் திரும்பியிருக்கிறது. அந்தவகையில் முருகதாஸின் பார்வையும் இப்போது அவர் பக்கம் திரும்பியுள்ளன. முன்னதாக முருகதாஸ் இயக்கிய கடைசி மூன்று படங்களான கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் ரிலீஸ் விஜய், சூர்யா படங்கள் போட்டி

eb060a72-b90a-4687-8630-12c118238010_S_secvpf.gifவிஜய்யின் தலைவா படமும், சூர்யாவின் சிங்கம்-2 படமும், ஒரே நாளில் ரிலீசாகி மோதப்போகின்றன. இரு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. தலைவா படத்தில் விஜய் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில் நடத்தி விட்டு வந்துள்ளனர். பாடல் வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சிங்கம்-2 படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர். ஹரி இயக்கியுள்ளார். ஏற்கனவே ரிலீசான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
தலைவா ரிலீசாகும் தேதியில் சிங்கம்-2 படத்தையும் வெளியிடுவதற்காக ரீ ரிக்கார்டிங், டப்பிங் போன்ற இறுதி கட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பெரிய நடிகர்கள் படங்கள் ஒன்றாக ரிலீசாகி பல நாட்கள் ஆகின்றன. எனவே இப்படங்களின் ரிலீசை கட் அவுட், கொடி, தோரணம் என போட்டி போட்டு கொண்டாட விஜய், சூர்யா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
அடுத்தமாதம் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் இப்படங்கள் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, May 17, 2013

Thalaiva song Maama un ponnakkudu

Thalaiva song Engita Mothathe

விஜய் ரசிகையான நடிகை

img1130516044_1_1மலையாள கரையோரத்திலிருந்து வந்த நடிகை பூர்ணா. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே நடித்து வந்தவர், தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் ஷக்திக்கு ஜோடியாக ‘படம் பேசும்’, ’உண்மையிலேயே இந்தப் படம் பற்றி பேசாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிரட்டியிருக்கிறார் இயக்குனர்’. அதையடுத்து, அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து ‘தகராறு’ படம். அப்புறம் ‘அர்ஜூணன் காதலி’ இதில் என்னுடன் ஜெய் நடிக்கிறார்.
இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். மிகவும் வித்தியாசமான கதைக்களம். அடுத்து, ‘ஜன்னல் ஓரம்’ இதுவும் எனக்கு ஸ்பெஷல் படம்தான். இவை எல்லாவும் விட, விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனக்கு லட்சியமாகவே இருக்கிறது அந்த அளவுக்கு நான் அவரின் அதி தீவிர ரசிகை.’ என்கிறார்.

Thursday, May 16, 2013

ஜில்லாவில் விஜய்க்கு 17 வயது 'போராளி' தங்கச்சி

Niveda Thomas Is Vijay Sister Jilla ஜில்லா படத்தில் விஜய் தங்கையாக போராளி படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிக்கிறார். விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் அவர் பெயர் சக்தி. இந்த படத்தில் இளைய தளபதிக்கு அப்பாவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார். மதுரையில் எடுக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஒரு தங்கை, அதுவும் அந்த தங்கை கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாம். இந்த படத்தில் விஜய்க்கு யாரை தங்கையாக போடுவது என்று அலைந்துள்ளனர். அப்போது போராளி படத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பெண்ணாக வந்த நிவேதா தாமஸை(17) பார்த்துள்ளனர். உடனே அவரையே விஜய்க்கு தங்கையாக்கிவிட்டனர். படத்தில் அண்ணன், தங்கை சென்டிமென்ட் தூக்கலாக இருக்குமாம். இது குறித்து நிவேதா கூறுகையில், என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அண்ணனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாசமுள்ள தங்கையாக நடிக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். 

Tuesday, May 14, 2013

என்னை விட சிறந்த நடிகர் தனுஷ்தான் - விஜய்யின் பாராட்டு

Vijay hails Dhanushசிறந்த நடிகருக்கான விருதுகள் எனக்குக் கிடைத்திருந்தாலும், என்னைவிட சிறந்த நடிகர் தனுஷ்தான் என்று பாராட்டு தெரிவித்தார் நடிகர் விஜய். விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான பிரிவுகளில் இரு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்ட விஜய், மேடையில் பேசுகையில், "எனக்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் என்னைவிட சிறந்த நடிகர் ஒருவர் இங்கு உட்கார்ந்திருக்கிறார்... அவர் தனுஷ். உண்மையிலேயே மிகச் சிறந்த நடிகர்," என்று பாராட்டினார். விஜய்யின் பாராட்டுக்கு நன்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ். அதில், "விஜய் சாரின் உயர்ந்த வார்த்தைகளுக்கு என் தனிப்பட்ட வணக்கம். ஆனால் என்றைக்கும் அவர் தான் சிறந்த, பெரிய நடிகர். எனக்கு இந்தமுறை இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்று ‘விஜய் விருதுகள்', மற்றொன்று ‘விஜய்' சாரின் பாராட்டு எனும் விருது" என்று குறிப்பிட்டுள்ளார். 

Monday, May 13, 2013

விஜய் அவார்ட்ஸ்: விஜய்யுடன் சேர்ந்து 'கூகுள் கூகுள்' டான்ஸ் ஆடிய ஷாருக்கான்

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து கூகுள் கூகுள் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை வாங்கிய முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

விஜய்யுடன் ஆட்டம்


 ஷாருக்கான் விஜய்யுடன் சேர்ந்து துப்பாக்கி படத்தில் வரும் கூகுள் கூகுள் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.

இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: இயக்குனர் விஜய்

13-1368443441-vijay-al-vijay111-600இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏ.எல். விஜய் இளைய தளபதி விஜய், அமலா பாலை வைத்து தலைவா என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இறுதிகட்ட இதர வேலைகள் நடந்து வருகிறது. இயக்குனர் படத்தை எடிட் செய்வதில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் தனது படத்தின் ஹீரோவை புகழ்ந்து தள்ளியுள்ளார். தமிழகத்தில் வெகுகாலமாக கேட்கப்படும் கேள்வி அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் விஜய் ஒரு புதிய பதிலை அளித்துள்ளார்.

Vijay Awards 2013 Results

Vijay Awards 2013 Winners


Tamil cinema’s most coveted awards statuette, Vijay Awards 2013 was held today at a grand function in Chennai. Vijay Awards 2013 winners were awarded at the function. Ilayathalapathy Vijay and his Thuppakki has literally swept all the major awards at the Vijay Awards 2013.
Vijay won the Best Entertainer of the year Award for Thuppakki and Nanban. Vijay also won the most favorite hero award for his role in Thuppakki. Thuppakki Director A.R Murugadoss won the most favorite director award and the movie went on to win the most favorite movie of the year award.
Here is the complete list Vijay Awards 2013 Awards Won by Vijay and Thuppakki team.


Best Entertainer Of the Year: Vijay
Favorite Actor: Vijay
Favorite Director: A.R Murugadoss (Thuppakki)
Favorite Movie: Thuppakki
Favorite Song: Google Google (Thuppakki)
Favorite Album: Nanban


Here is the full winners list and results of Vijay Awards 2013.
Vijay Awards 2013 Winners List:
Best Entertainer Of the Year: Vijay
Favorite Actor: Vijay
Favorite Director: A.R Murugadoss (Thuppakki)
Favorite Movie: Thuppakki
Favorite Song: Google Google (Thuppakki)
Favorite Album: Nanban
Best Actor: Dhanush
Best Actress: Samantha (Neethaane En Ponvasantham)
Best Movie: Vazhukku en 18/9
Best Director: Balaji Shakthivel
Best Supporting Actor: Sathyaraj (Nanban)
Best Comedian: Santhanam (Oru Kal Oru Kannadi)
Best Lyricist: Thamarai (Muppozhudhum Un Karpanaigal)
Best Villian: Sudeep (Naan Ee)
Best Music Director: D.Imman (Kumki)
Special Jury Award: Vijay Sethupathy
Costume Designer: Rajendran (Aravaan)
Art Director: R.K. Vijayan (Aravaan)
Stunt Director: Anal Arasu (Thadaiyara Thaakka)
Playback Singer (Female): Ramya N.S.K. (Neethaane En Ponvasantham)
Choreographer: Robert (Podaa Podi)
Screenplay: Karthik Subburaj (Pizza)
Dialogues: Rajesh (Oru Kal Oru Kannadi)
Debut Director: Balaji Dharanidharan ( Naduvula Konjam Pakkatha Kaanom)
Debut Actress: Varalaxmi Sarathkumar (Podaa Podi)
Debut Actor: Vikram Prabhu (Kumki)
Jury Award for Best Film: Aarohanam

Best Short Film: Warrant

Jilla movie shooting will start from May 13

Jilla Movie Shooting Starts from May 13!


Ilayathalapathy Vijay’s Jilla movie shooting will start from May 13 in Madurai. Vijay won’t be joining the initial shoot which starts from May 13. He will be joining the crew for the shoot only from first week of June in Chennai. Scenes involving Kajal Aggarwal, Mohanlal will be shot at the first phase which is expected to go on till end of May.
Jilla Photoshoot was held recently in a Chennai studio in which Vijay, Kajal Aggarwal and Mohanlal took part. Directed by Nesan Jilla will have music scored by D.Imman.
Initally Jilla was planned to release for 2013 Diwali. But now it has been pushed back and Jilla will release on January 2014 only. Vijay’s upcoming movie Thalaivaa will release in the month of July 2013.

Sunday, May 12, 2013

15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைத்தார்

0f4c1de9-af77-4f93-9690-aa960e90961f_S_secvpfதிருச்சி மாவட்ட விஜய் இளைஞரணி தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் மற்றும் 51 சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு 15 ஜோடிகளுக்கு திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் நடிகர் விஜயின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு சீர் வரிசையாக பீரோ, மிக்சி, சமையல் பாத்திரங்கள் மற்றும் பாய் உள்ளிட்ட 51 வகையான பொருட்களை நடிகர் விஜய் வழங்கி வாழ்த்தினார்.
பின்னர் அங்கிருந்த பெண்கள் நடிகர் விஜயிடம் கேள்விகள் கேட்டனர். அதற்கு சிரித்த முகத்துடன் நடிகர் விஜய் அளித்த பதில் வருமாறு:-
கே: உங்கள் மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோரது எதிர்காலம் என்னவாக இருக்கும்?
ப: எனது மகன் சஞ்சய் ஒரு சமயம் நடிகர் ஆகவேண்டும் என்கிறான். இன்னொரு சமயம் கிரிக்கெட் வீரராக போகிறேன் என்று கூறுகிறான். அவனுடைய எதிர்காலத்தை பின்னர் அவனே நிர்ணயிக்கட்டும். எனது மகள் திவ்யா குழந்தை என்பதால் அவளது எதிர்காலத்தை பின்னர் யோசிக்கலாம்.
கே: உங்களது புதிய படமான தலைவா அரசியல் படமா? அல்லது கிரைம் பற்றிய படமா?
ப: தலைவா படம் அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரசிகர்களின் பேராதரவை பெறும் வகையில் எடுத்துள்ளார். நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும்.
கே: தற்போது நீங்கள் செய்துவரும் சமூக பணியில் அரசியலுக்கு வரும் நோக்கம் உள்ளதா?
ப: இந்த பணிக்கும், அரசியலுக்கு வருவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது எனது மன திருப்திக்காக செய்யும் பணியாகும். மக்களுக்கு தொண்டு செய்வதில் தான் திருப்தி அடைகிறேன். இதுபோன்ற நிறைவான பணிகளுக்கு ஈடாக எதுவும் இல்லை என்று கருதுகிறேன். இதைத்தவிர வேறு சந்தோசம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, May 7, 2013

விஜய்யின் ‘தலைவா’… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

07-thalaivaa-300இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள்.
காரணம்… இந்தப் படத்தை விஜய் பிறந்த நாளில் வெளியிடும் திட்டம்தானாம்.
பொதுவாக விஜய் படங்களுக்கு நல்ல ஓபனிங் இருக்கும் என்றாலும், அது பிரமாண்டமாக இருக்காது. படம் நன்றாக இருந்தால் மட்டுமே பிக்கப் ஆகும். அவரது சமீபத்திய படங்களே இதற்கு சாட்சி.
நண்பன், துப்பாக்கி என அடுத்தடுத்த ஹிட் கொடுத்திருக்கும் நிலையில், விஜய் பிறந்த நாளில் படத்தை வெளியிட்டால் பெரிய வரவேற்பும், பிரமாண்ட ஓபனிங்கும் கிடைக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரி படப்பிடிப்பை வேகப்படுத்தி முடித்துள்ளார்களாம்.
மும்பை, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் இதன் முழுப் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது ‘டப்பிங்’ மற்றும் ரி-ரீக்கார்டிங் பணிகளும் முக்கால்வாசி முடிந்துள்ளதால், ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றனர்.
வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள். அதற்கு ஒரு நாள் முன்பு வெள்ளிக்கிழமை இந்தப் படத்தை வெளியிடும் திட்டம் உள்ளதாம்.
முதல் நாள் விஜய் பட ரிலீஸ், அடுத்த நாள் பிறந்த நாள் கொண்டாட்டம் என டபுள் ட்ரீட் ரசிகர்களுக்கு!