Tuesday, October 29, 2013

தீபாவளிக்கு ஜில்லா 'ஃபர்ஸ்ட் லுக்', பொங்கலுக்கு படம் ரிலீஸ்

விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் ஜில்லா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது என ஜித்தன் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் ஜில்லா படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் சண்டை காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியுள்ளனர்.

 இந்நிலையில் படம் குறித்து ஆர்.பி. சௌத்ரியின் மகனான ஜித்தன் ரமேஷ் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

தீபாவளிக்கு

 ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படுகிறது என்று ஜித்தன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


ஜீவா பிரார்த்தனை 

தனது தந்தை தயாரிக்கும் ஜில்லா படம் ஹிட்டாக நடிகர் ஜீவா பழனி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா உரிமை 

விஜய் படங்களுக்கு கேரளாவிலும் மவுசு உள்ளது. இதை அறிந்த மோகன்லால் ஜில்லாவின் கேரள உரிமையை வாங்கிவிட்டார். படத்தில் மோகன்லால் விஜய்யின் தந்தையாக நடிக்கிறார்.


பாடல்

 ஜில்லா படத்துக்காக விஜய், ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார். படத்தில் தாதாவின் மகனான விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sunday, October 27, 2013

அத்தரின்டிக்கி தாரெதி... அடுத்த ரீமேக்குக்கு ரெடியாகும் விஜய்!

தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற அத்தரின்டிக்கி தாரெதி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் விஜய். 

சமீபத்தில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம் இந்த 'அத்தரின்டிக்கி தாரெதி'. இதில் பவன் கல்யாண் - சமந்தா ஜோடியாக நடித்திருந்திருந்தனர்.

பிரபு தேவா? 


தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார். படத்துக்கு இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை. பிரபு தேவாவின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

சமந்தா 

விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஜய்யுடன் அவர் ஜோடி சேர்வது இதுவே முதல் முறை. இந்த வேடத்துக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர் நஸ்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திக் 

காவலன் படத்தை இயக்கிய சித்திக் இயக்கினால் நன்றாக இருக்கும் என விஜய் விரும்பினாலும், ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் இந்திப் படத்தை சித்திக் இயக்க உள்ளதால் பிரபு தேவாவுடன் பேசி வருகிறார்களாம்.

தெலுங்கு ரீமேக்தான் பேவரைட் 

விஜய்க்கும் தெலுங்குப் படங்களுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. அவரது பல படங்கள் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றவைகளின் ரீமேக்தான் என்பது தெரிந்த விஷயமே.



Friday, October 25, 2013

'ஜில்லா'வுக்கு மினி காரில் வந்த நடிகர் விஜய்!

நடிகர் அஜீத் ஒரு பக்கம் காஸ்ட்லி பைக்குகளை வாங்கி வரிசை கட்டி வரும் நிலையில், மறுபக்கம் நடிகர் விஜய் ஆடம்பர கார்களை அடுக்கி வருகிறார். ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் ஏற்கனவே இணைந்து விட்ட விஜய் தற்போது மினி கூப்பர் எஸ் காரை வாங்கியுள்ளார். 

வேகமாக வளர்ந்து வரும் ஜில்லா படப்பிடிப்புக்கு மினி காரில்தான் அவர் வருகை தருகிறார். அழகு, பெர்ஃபார்மென்ஸ் என அனைத்திலும் சிறப்பானதாக புகழப்பெறும் விஜய்யின் புதிய மினி கார் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்

மினி கார் முன்னோட்டம் 

1959ம் ஆண்டு 2 கதவுகள் கொண்ட முதல் மினி கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கன்வெர்ட்டிபிள் மற்றும் கிராஸ்ஓவர் ரகங்களில் பல மாடல்கள் வெளிவந்தன. 1994ல் இங்கிலாந்தை சேர்ந்த மினி கார் நிறுவனத்தை ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ கையகப்படுத்தியது. 2000ம் ஆண்டில் முழுவதுமாக பிஎம்டபிள்யூ கட்டுப்பாட்டில் வந்த மினி பிராண்டு 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வழியாக தனது மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஏ, பி மற்றும் சி பில்லர்கள் கருப்பு நிறப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது


டிசைன் 

பிரிமியம் கார்களில் மிக சிறிய அதேவேளை மிகக் கவர்ச்சியான கார் மாடல்கள்தான் மினி. பெயரில் மினியாக இருந்தாலும், அழகியலில் மேக்ஸிமம் என்று கூறவைக்கும். இதனாலேயே பார்த்தவுடன் மினி கார் அழகில் மயங்கி வாங்கியுள்ளார் விஜய். இந்த சிறிய காருக்கு 17 இஞ்ச் அலாய் வீல் கம்பீரமான அழகை தருகிறது. பின்புறத்தில் இரட்டைக் குழல் சைலென்சர் சூப்பர் சொல்ல வைக்கிறது.


வண்ணம்

 நீல வண்ணத்தில் வெள்ளை நிற கூரை கொண்ட கார் மாடலை விஜய் வாங்கியுள்ளார். இந்த காரில் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.


இடவசதி

4 பேர் செல்லும் வசதி கொண்ட இந்த காரில் உயர்ரக லெதர் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. 160 லிட்டர் பூட்ரூம் கொண்ட இந்த காரின் பின் இருக்கைகளை மடக்கினால் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி 680 லிட்டராக அதிகரித்துக் கொள்ள முடியும். கூரையில் கேரியர் பொருத்தி 75 கிலோ எடையை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இன்டிரியர் 

இன்டிரியர் மிக ரம்மியமாக காட்சி தருவது இதன் சிறப்பம்சம். இந்த காரின் இன்டிரியரில் மிக கவரும் அம்சம் கடிகார சைஸ் இருக்கும் இதன் பெரிய ஸ்பீடோமீட்டர் கன்சோல். ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூவின் ஐடிரைவ் அடிப்படையிலான இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஸ்டீயரிங் வீலுக்கு நேர் கீழாக டாக்கோ மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏசி வென்ட், ஸ்டீயரிங் வீல் டிசைன், ஸ்பீடோமீட்டர் என எங்கு பார்த்தாலும் வட்ட வடிவ டிசைனாகவே இருக்கிறது. இருப்பினும், மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

 184 பிஎச்பி ஆற்றலையும், 240 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. பேடில் ஷிப்ட் வசதியும் உண்டு.


பெர்ஃபார்மென்ஸ்

 0- 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 223 கிமீ வேகத்தில் செல்லும் கட்டமைப்பை பெற்றது.


மைலேஜ் 

லிட்டருக்கு 15.6 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


பாதுகாப்பு வசதிகள்

 இபிடியுடன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரொகிராம், கார்னரிங் பிரேக் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.


விலை 

மாருதி ரிட்ஸ் போன்ற நீள, அகல அளவுகள் கொண்ட மினி கூப்பர் எஸ் கார் ரூ.30 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.






Wednesday, October 23, 2013

'தம்பி விஜய்... இதான் கரெக்ட்.. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க!'

Vijay will be singing along with Shreya Ghoshal for a song in Jilla

இனி ஆண்டுக்கு இரு படங்கள் செய்வேன் என்று அறிவித்துள்ள விஜய்யை திரையரங்க உரிமையாளர் சங்கம் பாராட்டியுள்ளது.

 இதுகுறித்து அச்சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

அன்பு தம்பி விஜய்,

 இன்றைய தினம் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். 

அழிந்து வரும் திரையரங்குகளைக் காக்க தாங்கள் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களும் ஆண்டுக்கு மூன்று படங்களாவது நடிக்க வேண்டும் என கடந்த வாரம் பத்திரிகை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தோம். 

அதை ஏற்று, இனி ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருவதாக அறிக்கை வெளியிட்டு, திரையரங்குகளைக் காப்பாற்ற நான் தயார் என உணர்த்தியதோடு, மற்ற கலைஞர்களுக்கும் முன் மாதிரியாகத் திகழும் உங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

'இல்ல இல்ல... நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கல, அரசியல் பேசல!' - விஜய் அவசர மறுப்பு


ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து நான் அரசியல் ஆலோசனை நடத்தவே இல்லை என்று நடிகர் விஜய் அவசரமாக மறுத்துள்ளார். 

சமீபத்தில் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரை வெளிமாநிலத்தில் ரகசியமாகச் சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்தினார் விஜய் என தகவல் வெளியானது. இது ஊடகங்களில் செய்தியாகவும் வெளியிடப்பட்டது. 

இப்போது இதுகுறித்து விஜய் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதை படித்து ரசிகர்களும், பொதுமக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள். 

நான், கடந்த இரண்டு மாதமாக ஹைதராபாத்தில் ஜில்லா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். கேரளாவிற்கே நான் செல்லவில்லை. அப்படியிருக்க இப்படியொரு தவறான செய்தியால் ரசிகர்கள் மட்டுமின்றி நானும் குழப்பம் அடைந்தேன். 

நான் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான். ஆகவே தயவு செய்து உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார். 


Monday, October 21, 2013

Ilayathalapathy Vijay and Shreya Ghoshal to delight fans

Vijay will be singing along with Shreya Ghoshal for a song in Jilla

Whenever a Vijay movie is announced, fans are eager to know whether the star would be lending his vocals for one of the numbers in that film. For Thuppakki and Thalaivaa, the star sang two superhit chartbusters in Google Google and Vaanganna Vanakkanganna respectively and for Jilla, the question was again "Will Vijay sing?" 
 
Composer Imman had tweeted long back that they were making all efforts to make Vijay sing a song in Jilla and now he has come out officially and updated on his Twitter space that Vijay has recorded a lovely melody track with the queen among singers, Shreya Ghoshal. 
 
"#Jilla Its official guys!! Recorded Vijay Annan for an ethnic melodious number with shreya ghoshal..Lyric by Vairamuthu sir..Praise God!"
 
With Vairamuthu's masterly lyrics and with two highly popular singers on-board, this song has all the credentials to be the best song on Jilla's album already. 

Sachin Tendulkar and Vijay through the eyes of the same man

Vijay's Jilla has an ace cameraman, Ganesh who has worked with Sachin before on ads

The Vijay - Kajal Agarwal pairing which worked big time in Thuppakki, particularly in the song sequences, is set to take it several notches higher in Jilla, directed by Neason. The director opened up about his Jilla pair in a recent interview. 
 
"Kajal plays a jovial Madurai girl in this movie and we chose her as her chemistry with Vijay in Thuppakki was awesome. In Jilla, it will be that much more intimate. For their duet that we are going to shoot in Osaka (Japan), Imman has expertly used a different variety of Japanese instrument which sounds like our flute. Vairamuthu has penned the lyrics and we are sure that this song will be a great audio-visual experience.
 
Cinematographer Ganesh, who has worked before in Aadhavan has also shot for ads featuring Sachin Tendulkar and Amitabh Bachchan. He is popular nationwide and we are proud to have him on board. 
 
Jilla will surely be a technically sound film", avers Neason