பவன் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படமான அத்தாரின்டிகி தாரேதி பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டுள்ளது. படம் கல்லா கட்டிய வேகத்தை பார்த்து அதை தமிழில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத்தை கோலிவுட்டைச் சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் அணுகினர்.
இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விஜய் ஆர்வமாக உள்ளதாகக் கூறப்பட்டது.
அத்தாரின்டிகி தாரேதி தமிழ் ரீமேக்கில் நடிக்க விஜய்யை அணுகியுள்ளனர். ஆனால் அவரோ சாரி, நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
ரீமேக்கே வேண்டாம்
இனி ரீமேக் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று விஜய் தெரிவித்தாராம்.
ரீமேக் தானே ராசி
முன்னதாக விஜய் நடித்த படங்களில் ரீமேக் படங்கள் தானே அவருக்கு ஹிட் கொடுத்தன. இந்நிலையில் இந்த திடீர் முடிவு என்ன காரணம் விஜய்?
அப்போ யார்?
விஜய் நடிக்க மறுத்ததை அடுத்து அந்த படத்தில் யார் நடித்து கல்லா கட்டப் போகிறார்களோ தெரியவில்லையே?
No comments:
Post a Comment