Showing posts with label வேலாயுதம். Show all posts
Showing posts with label வேலாயுதம். Show all posts

Sunday, October 30, 2011

எம்ஜிஆர் - ரஜினி பாணியில் 'வேலாயுதம்'! - விஜய்

Vijayஎம்ஜிஆர், ரஜினியின் படங்களின் பார்முலாதான் சினிமாவில் எவர்கிரீன் வெற்றி பார்முலா என்றார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதால், அதைப் பகிர்ந்து கொள்ள பிரஸ் மீட் வைத்திருந்தார் நடிகர் விஜய்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நான் நடிச்ச 52 படங்களை விட 'வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிரார்கள். கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.

ஜெயம் ரவியும் கதை விவாதத்துக்கு வந்தார்...

ஜெயம்ரவிக்கும் நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டும். அவரும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார். ராஜாவின் தந்தை எடிட்டர் மோகனும் பல ஆலோசனைகள் சொன்னார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும் ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்து கொடுத்தார். விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம். படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் கூட்டுவதாக செய்திகள் வருகின்றன. இது படம் ஹிட்டானதற்கு அறிகுறி," என்றார் விஜய்.

அப்போது ஒரு நிருபர், "உங்கள் படங்களில் எம்ஜிஆர் பாணியில் வந்தது இந்தப் படம்தான் என்பது சரியா?" என்றார்.

உடனே விஜய், "எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவார்கள். அது தவறு அல்ல. எம்.ஜி.ஆர். பாணியில் படம் பண்ணுவது சாதாரணம் அல்ல. அது போல நடிக்க நல்ல கதை அமையணும். அது 'வேலாயுதம்' படத்தில் இருக்கு," என்றார்.

தொடர்ந்து, " ஆரம்பத்தில் நீங்கள் ரஜினி பாணியில் நடிப்பதாகச் சொன்னீர்கள். இப்போது எம்ஜிஆர் பாணி என்கிறீர்கள்," என்றனர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த விஜய், "எம்ஜிஆர், ரஜினி படங்களின் பார்முலா என்றுமே எவர்கிரீன். நான் ஆரம்பத்திலிருந்தே இதை சரியான வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்தியுள்ளேன். மறுக்கவில்லை," என்றார்.

நெட்டில் விடாதீங்க...

மேலும் அவர் கூறுகையில், "கிளைமாக்சில் கூட்டத்தினர் பிடித்து வரும் கொடிகள் எனது மக்கள் இயக்க கொடி அல்ல.

இந்தப் படம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை மகிழ்வித்துள்ளது. நான் இப்போதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வருகிறேன். ஹேப்பியா சார் என்று கேட்டேன். அவரோ, "கவலையே இல்ல.. படம் சூப்பர் ஹிட். நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார். இதைவிட வேறு என்ன வேண்டும்.

இண்டர்நெட்டில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது. அதை தடுக்க எனது இண்டர்நெட் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர். புதுப்படங்களை இது போல் இண்டர்நெட்டில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. 'காவலன்' படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். யோஹன் அடுத்த வருடம் ஆரம்பமாகும். சீமான் படம் குறித்து பின்னர் சொல்கிறேன்," என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ராஜா கூறுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம் வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி என்றார்.

வெற்றியை நோக்கி செல்லும் வேலாயுதம்

இந்த தீபாவளிக்கு இரண்டே படங்களில் வெற்றி பெறப் போவது 7 ஆம் அறிவா, வேலாயுதமா என்று ஏக எதிர்பார்ப்பு நிறைய இருந்தன.
ஆனால் ஓபனிங்கை பொறுத்தவரை இரண்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
இரண்டு படங்கள் ஓடும் திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன, போட்டி பலமானது என்பதால் விஜய் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே வேலாயுதத்தை வரவேற்றார்கள்.
படம் வெளியான அனைத்துத் திரையரங்குகளிலும் இசைக்குழுவை இறக்கிவிட்டு காதுகளை சிதறவைக்கும் படி அமைந்தது வேலாயுதம்.
அதே அரைத்த மாவு என்றாலும் ச‌ரியான விகிதத்தில் ஜெயம் ராஜா தந்திருப்பதால் வேலாயுதம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
7 ஆம் அறிவு புதிய களம், புதிய முயற்சி. ஆனால் தொய்வான திரைக்கதை ரசிகர்களுக்கு பல நேரம் கொட்டாவியை வரவழைத்தது எதிர்பாராத ஏமாற்றம் கிடைத்தது.
7 ஆம் அறிவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத அதேநேரம் வேலாயுதம் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது. சுறா, வேட்டைக்காரனெல்லாம் ரசிகர்களையே முகம் சு‌ளிக்க வைத்தவை. ஆனால் அந்தவகையில் வேலாயுதத்தின் வெற்றி உறுதி என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Tuesday, October 18, 2011

'எல்லாரு சென்னாகிதீரா..?''-பெங்களூரில் அசத்திய விஜய்!

Vijayவேலாயுதம் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற இளைய தளபதி விஜய் கன்னடத்தில் பேசி அசத்தியுள்ளார்.

விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள வேலாயுதம் வரும் 26-ம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள பூர்ணிமா திரையரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜய்க்கு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடிதது, விசில் பறக்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திரையரங்கமே அதிரும்படி கரகோஷம் எழுப்பினர். இதைப் பார்த்து விஜய் நெகிழ்ந்து போனார்.

மேடையில் பேசிய விஜய் கூறியதாவது,

எல்லாரு சென்னாகிதீரா? (எல்லாரும் நல்லா இருக்கிறீர்களா) என்று கன்னடத்தில் நலம் விசாரிக்க ரசிகர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. பெங்களூர் வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தமிழகத்தைப் போன்ற வரவேற்பு இங்கும் உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் எனக்கு எப்பொழுதுமே பேராதரவு அளித்து வருகின்றனர்.

எனது நண்பர் சிவராஜ் குமாரின் 100வது படமான ஜோகையா அறிமுக விழாவுக்கு வந்திருந்தபோது கூட எனக்கு உற்சாக வரவேற்பளித்தீர்கள். நீங்கள் என் படங்கள் எத்தனையோ பார்த்திருப்பீர்கள். ஆனால் வேலாயுதம் அவற்றைவிட வித்தியாசமானது என்றார்.

விஜய் பேசப், பேச ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விஜய் வருகையால் பூர்ணிமா திரையரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது.

வேலாயுதமா... ஏழாம் அறிவா... உங்க 'ஓட்டு' யாருக்கு?

Vijay and Hansikaகுறைந்தது 5 படங்களாவது வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட இந்த தீபாவளிக்கு கடைசியில் மிஞ்சியிருப்பது விஜய்யின் வேலாயுதமும் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள ஏழாம் அறிவும்தான்.

விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா வர்த்தகர்கள் கருத்து. விஜய் ரசிகர்களும் போக்கிரி மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.

அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளி சரவெடியாக வந்துள்ளது படம் என்கிறார் இயக்குநர் ராஜா. இவர் விஜய்க்காக இயக்கும் முதல் படம் என்பதால் நம்பிக்கையுடன் படத்தை வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.

விஜய் படம் அதிரடி மாஸ் மசாலா வகை என்றால், இந்தப் பக்கம் முருகதாஸ் தன் வழக்கமான கிளாஸிக் + மாஸ் அப்பீலோடு உருவாக்கியுள்ள படம் ஏழாம் அறிவு. ஆரம்ப நாளில் இந்தப் படம் பற்றி சாதகமான கருத்துக்கள் வெளியானாலே போதும், படம் பிய்த்துக் கொண்டு ஓடும் (வசூலில்தாங்க!) என்பது பாக்ஸ் ஆபீஸ் கருத்து.

சூர்யாவின் அபார உழைப்பு, சீனா, தாய்லாந்து என கலர்ஃபுல் லொகேஷன்கள், ஹீரோயின் ஸ்ருதி... அனைத்துக்கும் மேல், முருகதாஸ் எனும் கடின உழைப்பாளியின் மீதான நம்பிக்கை இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பையும் அட்வான்ஸ் புக்கிங்கையும் எகிர வைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட அரங்குகளிலெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் குறித்த விசாரணை இப்போதே ஆரம்பமாகிவிட்டது.

இந்த இரு படங்களில் எது உங்கள் சாய்ஸ்... எந்தப் படம் இந்த தீபாவளி ரேஸில் அசத்தல் வெற்றியை ஈட்டித் தரப்போகிறது? ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எந்தப் படம் இருக்கும் என்கிறீர்கள்?

Monday, October 17, 2011

‘எனக்கு எல்லாருடைய படங்களும் பிடிக்கும்.

‘எனக்கு எல்லாருடைய படங்களும் பிடிக்கும். ‘மங்காத்தா’வாகட்டும், ‘அங்காடித் தெரு’வாகட்டும் முதல் நாள் முதல் ஷோ பாத்துடுவேன். அதேபோல என் படங்களும் எல்லாத் தரப்பினருக்கும் பிடிக்கணும்னு நினைப்பேன். அதுக்கான உழைப்பு என் எல்லாப்படங்கள்லயும் இருக்கும். அதுல உச்சம் இந்தப்படம்...’’ என்கிறார் ஆஸ்கர் பிலிம்ஸின் ‘வேலாயுதம்’ இயக்குநர் எம்.ராஜா.

‘‘அதிலயும் இதுல விஜய் ஹீரோவாகிட்டதால, அவருக்கேத்த ஹீரோயின்கள், அ...வருக்கேத்த வில்லன்கள், அவங்க தாங்கற அளவுக்குப் பிரச்னைகள், அதுக்கான பேக்ட்ராப்கள்னு படம் பெரிசா போய்க்கிட்டேயிருந்தது. அது அத்தனைக்கும் ஈடு கொடுத்து ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தா இந்தப் படத்தைக் கொடுக்கிறோம். அதுலயும் செம விருந்தா இருக்கும் ‘வேலாயுதம்’...’’ என்ற ராஜா, கடைசியாக காஷ்மீர் சென்று படத்துக்கான பாடலைப் படம்பிடித்து வந்த அனுபவத்தைச் சொன்னார்.

‘‘காஷ்மீர்ல ஸ்ரீநகர் தாண்டி 200 கிலோமீட்டர்ல இருக்கிற அற்புதமான டூரிஸ்ட் ஸ்பாட் ‘பகல்காம்’. எந்த சீசன்லயும் போகமுடியும்ங்கிறது அந்த இடத்தோட சிறப்பு. ஆனா என்ன ஒண்ணு, அங்கே போக மோட்டார் வாகனங்களால முடியாது. முழுக்க குதிரை சவாரிதான். நாங்க தங்கியிருந்த ஹோட்டல் வாசல்ல கார்கள் போல ஆயிரக்கணக்கில குதிரைகள் சவாரிக்காகக் காத்திருந்ததைப் பார்த்து அசந்து போனோம். விஜய், ஹன்சிகா, ஜெனிலியான்னு நாங்க எல்லாருமே குதிரைல போனது மறக்க முடியாத அனுபவம். அதேபோல காஷ்மீர் கலவர பூமியானதால, ராணுவத்தினர் காவல்ல படம் பிடிச்சதும் த்ரில்லான அனுபவம்.

‘முளைச்சு மூணு இலை விடல...’ங்கிற விவேகா எழுதிய பாடலை அங்கே எடுத்தோம். அந்தப் பாடலோட சிறப்பு... அதுல விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மூணு பேருமே நடிக்கிறதுதான். ஆனா ஒரு ஹீரோயினோட டூயட் பாடறது இன்னொரு ஹீரோயினுக்குத் தெரியாது. அதை சரியா மேட்ச் பண்ணி அழகா கம்போஸ் பண்ணியிருந்தார் ஷோபி மாஸ்டர். படத்தில வரிசைப்படி நான்காவதா வர்ற இந்தப்பாடல், விஜய்யோட மெலடிகள்லயே அலாதியா அமைஞ்சிருக்கு. பரபரன்னு ஃபாஸ்ட்டா ஆடற விஜய்க்கு இத்தனை மெலடி சாத்தியமான்னுதான் முதல்ல இந்தப்பாடலைக் கேட்கும்போது தோணும். ஆனா சாத்தியப்பட்டுதுங்கிறதுதான் உண்மை. 7&8 ரிதம்னு சொல்லக்கூடிய அற்புதமான மெலடியில விஜய் ஆன்டனி இசைச்சிருக்க இந்தப்பாடல்தான் என்னோட ரேட்டிங்படியே நம்பர் ஒன். விஜய் ஆன்டனியோட மெலடி வரிசைலயும் இந்தப்பாடல் இன்னைக்கு இடம் பிடிச்சிருக்கு..!’’

விஜய் பற்றிப் பேசும்போது சில டெசிபல்கள் சப்தம் கூடியது மென்மையாகப் பேசும் ராஜாவின் பேச்சில்...

‘‘இதுவரை தமிழ்ல வராத கதை இதுங்கிறது போலவே, விஜய் இதுவரை ஏற்காத கேரக்டரை இதுல ஏற்றிருக்கார். அவர் தகுதிக்கு எவ்வளவு இறங்கி நடிக்க முடியுமோ அவ்வளவு இறங்கி நடிச்சிருக்கிறதோட, இதுவரை இத்தனை ஏறி நடிச்சதில்லைங்கிற அளவில ஏறியும் சூப்பர் ஹீரோவாகியிருக்கார். இதுவரை சூப்பர் ஹீரோவான நடிகர்கள் கூட ஃபேன்டஸியாதான் அப்படி ஆகியிருக்காங்க. ஆனா இவர்தான் முதல்முதலா லாஜிக்கா சமுதாயத்துக்காக சூப்பர் ஹீரோவா ஆகியிருக்கார். இந்தப்படத்தோட ஸ்பெஷாலிட்டியே ஹீரோவைப் போல, ஹீரோயின்கள் போல, வில்லன்களைப்போல மக்களும் இதுல கேரக்டர்களா வர்றதுதான்.

சில வசனங்கள் ஹீரோக்களுக்குப் பேர் கொடுக்கும். சில வசனங்கள் ஹீரோக்களால புகழடையும். இதுல அப்படி ஒரு வசனம்... விஜய் பேசற ‘உழைக்கிறவன் வியர்வை தாய்ப்பாலைவிட உயர்வானது...’ இது டிரெய்லர்ல வெளியான நாளிலிருந்தே மத்த டைரக்டர்கள் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டற அளவுக்கு பவர்ஃபுல்லா அமைஞ்சிடுச்சு. ‘நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன். இதுல நீ வேற காட்டு காட்டுன்னு சொல்றே... காட்டாம இருந்தா நல்லா இருக்குமாங்ணா..?’ன்னு அவர் பேசற இன்னொரு வசனம் தியேட்டர்கள்ல பட்டையைக் கிளப்பும்னு நம்பலாம்.

இதுல எந்த அளவுக்கு விஜய் இன்வால்வ் ஆகியிருந்தார்னா, பால்காரரா வர்ற அவருக்கு ஒரு சண்டை இருக்கு. அதுல இறங்கி அடிக்கணும்ங்கிறதால சட்டை போடாத வெற்று உடம்போட அவர் அதை செய்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அதுக்காக ஒருமாசம் பிரேக் விட்டு அவரை உடம்பை ஏத்தச் சொல்லலாம்னு நானே முடிவு கட்டி அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே சட்டையைக் கழற்றி, ‘இந்த அளவுக்கு இருந்தா போது மா..?’ன்னு கேட்டப்ப என் கண்களையே நம்ப முடியலை. அத்தனை கட்டுமஸ்தா ஏத்தி வச்சு அந்த ஃபைட்டுக்காகக் காத்திருந்தார். அவர் மேல சட்டை போட்டிருக்கும்போது அந்த உடம்பு தெரியலை. சட்டையைக் கழற்றினா கும்முன்னு தெரியறார். பேர் பாடியோட ஃபைட் யோசிச்சது நல்லதா போச்சு. இல்லாட்டி அந்த ஸ்பெஷல் விஷயத்தை ரசிகர்கள் மிஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். படத்துக்கே ஹைலைட்டா ஆகியிருக்கு அந்த ஃபைட்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஸ்டன்ட் மாஸ்டர் செல்வா பெரிய இடத்துக்குப் போவார். ப்ரியனோட ஒளிப்பதிவும், வி.டி.விஜயனோட எடிட்டிங்கும் எனக்குத் தோள் கொடுத்திருக்குன்னா, புரட்யூசர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என் கனவுகளை நிஜமாக்க உதவியிருக்கார். அதோட ரிசல்ட், சென்சார்ல படத்தைப் பார்த்தவங்க பாராட்டி சர்டிபிகேட் கொடுத்திருக்கிறதுதான். மக்கள் சர்டிபிகேட்டும் இதுக்குக் குறைவிருக்காதுன்னு நான் எதிர்பார்க்கிறது போலவே ரசிகர்களும் இந்தப் படத்தை தீபாவளி ட்ரீட்டா எதிர்பார்க்கலாம்..!’’
See More

Velayuthan Theaters Details

Velayudham Kerala Theater List Updated : 

1. Trivandrum - Anjali, Dhanya, Remya

2. Ernakulam - Kavitha
...
3. Ernakulam - Q Cinemas

4. Ernakulam - Cinemax

5. Kochi - EVM Cinema

6. Calicut - Apsara

7. Thrissur - Girija , Raagam

8. Anchal - Varsha

9. Shornur - Suma

10. Palakkad - Sathya, Aroma, Sreedevi Durga

11. Kollam - Aradhana

12. Nedumangadu - Shakthi

13. Attingal - Thapasya, Thapasya Paradise

14. Karunagapally - Khans

15. Alapuzha - Pankaj

16. Thirur - Chitrasagar

17. Thalassery - Liberty Paradise

18. Kannur - Savitha

19. Payyannur - Divya

20. Vadakara - Keerthi

21. Kanjangadu - Deepthi

22. Ponnani - Aishwarya

23. Manjeri - Sreedevi Cinemax

24. Kottarakkara - Minerva

25. Punalur - Thailakshmi

26. Karungapally - Khanselayudham



Vellore Theater List..
1.Venus
2.raja
3.balaji
4.balamani yar
5.VBC
6.Rajisawa ri
7.laxmi
8.lite Laxmi
9.raj kamal
10.kirsna
11.rajsawa ri
12.ventasw ara
13.MC
14.sagitha
15.Vijay
16.menathi
17.Murgan
18.karapag am
19.vijay vari
20.maran
21.Sangam
22.arun

Saturday, October 15, 2011

வேலாயுதத்துக்கு ‘யு’


விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்துக்கு, அனைவரும் பார்க்கக் கூடிய படம் என ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். விஜய் – ஜெனிலியா, ஹன்ஸிகா, சந்தானம், சரண்யா மோகன் நடிப்பில், ‘ஜெயம்’ ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேலாயுதம்’ படத்தை, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் வரும் தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியாகிறது. படத்தை தணிக்கைக் குழுவினருக்கு நேற்று திரையிட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்த பிறகு, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருப்பதாகக் கூறிய அதிகாரிகள், படத்தில் சண்டைக் காட்சிகளில் மட்டும் சில வெட்டுக்களைக் கொடுத்தனர்.
பின்னர் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என ‘யு’ சான்று அளித்தனர். இந்தப் படம் திங்களன்றுதான் சென்சாருக்கு திரையிடுவதாக இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, நேற்றே திரையிடப்பட்டுவிட்டது.
மக்கள் மனசுல பதியும் ஆயுதம்!

வேலாயுதம் வெளியீடும், விஜய் ரசிகர்களின் கருத்துக் கணிப்பும்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!


வேலாயுதம் படம் தீடீரென்று தீபாவளி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள உத்தேசித்தாக உறுதியான தகவல்கள் உலா வந்தன கோடம்பாக்கத்தில். திடீர் விலகலுக்கு காரணமாகச் சொல்லப்பட்டத்து சரியான தியேட்டர்கள் அமையவில்லை என்பது. ஆனால் நிஜமான காரணம் 7-ஆம் அறிவு படத்துக்கு வேலாயுதம் போட்டியாக அமைய முடியாது என்று தெரிய வந்ததாலேயே இந்த முடிவை எடுத்தார்கள் என்று தகவல்கள் கசிந்தன.
7-ஆம் அறிவு படம், கதை, திரைக்கதை, எண்டெர்டெயிண்மெண்ட், மேக்கிங், என எல்லாவற்றிலும் பிரிலியண்டான படமாக இருக்கிறது என்ற தகவல் விஜய் வட்டாரத்துக்கு தெரிய வந்ததும் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள்.
ஆனால் வேலாயுதம் தீபாவாளிக்கு பின் வாங்கினால் ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு செல்வாக்கு குறையும் என்று மன்ற நிர்வாகிகள், விஜயின் அப்பா எஸ்.ஏ.சியிடம் கருத்து சொல்லியிருகிறார்கள். இதனால் ஒவ்வோரு மாவட்டத்திலும் குறைந்தது 100 விஜய் ரசிகர்களிடம், வேலாயுதம் தீபாவளிக்கு வராவிட்டால் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்று கேட்டு கருத்துக் கணிப்பு நடத்தசொன்னார்களாம்.
இரண்டே நாட்களில் இந்த கருத்து கணிப்பை எடுத்து முடித்து அனுப்பி வைத்தார்களாம் மன்ற நிர்வாகிகள். இந்த அதிரடிக் கருத்து கணிப்பில் தெரிய வந்திருப்பது “ 7-ஆம் அறிவு படத்துடன் வந்தால்தான் உண்மையான போட்டியாக இருக்கும். வேலாயுதம் தீபாவளிக்கு வெளியாக விட்டால், சூரியா படத்துக்காக பயந்து பின் வாங்கி விட்டதாக இருக்கும். இது நமக்கு பின்னடைவாகி விடும் என்று 80 சதவிகிதம் ரசிகர்கள் கருத்து சொல்லியிருகிறார்களாம்.
உண்மையில் வேலாயுதம் விஜய் ரசிகர்களின் இந்த நம்பிக்கையை காப்பாற்றுமா, 7-ஆம் அறிவுக்கு சரியான போட்டியாக அமையுமா என்று வேலாயுதம் இயக்குனர் வட்டாரம், விஜய் ரசிகர்கள், பொதுவான சினிமா ரசிகர்கள் என நாம் ஒரு சிறு கருத்துக் கணிப்பில் இறங்கினோம். அதில் நமக்குகிடைத்தன பல அதிரடித் தகவல்கள்.
நிச்சயமாக விஜயின் முந்தைய படங்களை போல் அல்லாமல் வேலாயுதம் மாஸ் எண்டெர்டெயினர் என்பதில் சந்தேகமில்லை. இம்முறை விஜய் அளவாக படம் முழுவதும் பேசியிருகிறார். ஏற்கனவே வந்து ஹிட்டாகியிருக்கும் பாடல்களையும், சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் வேலாயுதம் ட்ரைலரையும் பார்த்தபின்பு, படம் தோற்பது உறுதி என்று கூறி வரும் பலருக்கும், வேலாயுதம் பற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருகிறது என்கிறார்கள். அத்துடன் எல்லோரும் விஜயின் சிக்ஸ் பேக் பற்றியும்பேசிக்க்கொண்டிருகிறார்கள். அது ஊசி, கிராபிக்ஸ் என்று சிலர் கூறினாலும் நிச்சயம் அப்படி கூறுபவர்களுக்கும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.
அதேசமயம் விஜய் படத்தை ஒருமுறை பார்க்க விரும்பும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்களிடம், வேலயுதம் படத்தின் டிரைலர் பல கேள்விகளைஎழுப்பியுள்ளது! அதாவது இந்த அளவு ஆக்‌ஷனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதுதான் அந்தக் கேள்வி!
இதற்கு எடுத்துக்காட்டாக காவலனுக்கு முன்னர் வந்த ஐந்து படங்களின் தோல்வியை கூறினாலும் அவற்றின் தோல்விக்கு ஆக்‌ஷன் மட்டுமே காரணமாகாது. குருவி போன்ற அதீத, மக்கள் நம்பமுடியாத, லாஜிக் இல்லாத ஆக்‌ஷனும், ஓவர் பஞ்ச் வசனங்களுமே அவற்றின் தோல்விக்கு காரணமாக இருந்தன. அதை விட அவற்றில் கதை குறைவாகவும் , சில நல்ல கதைகள் கூட விஜய்க்காக மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அதனாலேயே சில படங்கள் விஜய் ரசிகர்களாலேயே ஏற்கமுடியாமல் போய்விட்டது என்பது இவர்கள் கருத்து.
வேலாயுதத்துக்கும் இதே நிலையா என்று விஜய் ரசிகர்களிடம் கேட்டால் கொதித்துப் போகிறார்கள்.…! நிச்சயமாக விஜய் படங்களின் ஆக்‌ஷன் காட்சிகள் தோல்விக்கான காரணமாக இருந்ததில்லை. படத்தின் கதையில் பலகீனம் இருந்தால் விஜய் படங்கள் தோற்று இருக்கலாம். ஆனால் விஜய் போல ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம் காட்ட இங்கே அர்ஜூன் மட்டும்தான் இருகிறார். ஆனால் எங்கள் விஜயிடம் ஆக்‌ஷனோடு ஸ்டைலும் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
வேலாயுதம் படத்தின் கதை தெலுங்கு ஆசாத்தின் தழுவல் என்றாலும், இன்றைய காலகாட்டத்துக்கு ஏற்ப அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏற்கனவே இயக்குனர் ராஜா கூறியிருக்கிறார். விஜயின் அதீத பில்ட் அப்புகள், ஓவர் பஞ்ச் வசனங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் வேலாயுதம் பெரிய வெற்றிதான்! அதேநேரம் கில்லியில் அதீத பஞ்ச் வசனங்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதையாலும், தேவையான இடங்களில் மாத்திரம் பஞ்ச் வசனங்களை பயன்படுத்தியதாலும் அது விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களும் ஏற்கக்கொள்ளப்பட்டது என்கிறார் கோலிவுட்டின் பிரபல சினிமா விமர்சகர்.
ஆக 7-ஆம் அறிவு, வேலாயுதம் கொஞ்சம் சரிக்கு சரி போட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள். பார்க்கலாம்…

GK Media bags 'Velayudham' USA rights

A press report read that GK Media has acquired the theatrical rights of Ilayathalapathy Vijay's film, 'Velayudham' in USA.
The film will portray drastic changes in Vijay's character as it progresses. While Vijay is introduced to the audiences initially as a simple villager who is a milkman, his visiting Chennai changes it all for him as he dons the role of a superhero to eradicate corruption in the city and put an end to the baddies.
Director Jayam Raja has expressed that the film will be family entertainer and also be different from earlier vigilante hits in Tamil cinema like 'Indian' and 'Anniyan', as 'Velayudham' has a whole-new approach to the script.
'Velayudham' that boasts off a huge budget stars Vijay, Hansika Motwani and Genelia in the lead roles with music by Vijay Antony. The film has a number of comedians including Santhanam. Stunts are choreographed by Tom Delmar from Hollywood and Stunt Silva and there's a train fight sequence scene in the film which is much-expected.
In USA, the ticket price for the film is only 10$, also, kids who are below 12 years of age get to watch the film for free! This is applicable to all Big Cinemas locations whereas in some centers restrictions might apply. Please check with your local exhibitor for other details.

Wednesday, October 12, 2011

ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்?


விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதால் ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகரும் மத்திய அமைச்சர் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இது காதல் திருமணமாகும்.
திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என ஜெனிலியா முடிவு செய்துள்ளார். இப்போது தமிழில் அவர் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.
இதுவே அவரது கடைசி தமிழ்ப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரை இன்னும் ஒரு படத்தில் நடிக்குமாறு இயக்குநர் சிம்புதேவன் கேட்டுக் கொண்டுள்ளார். அது தனுஷ் நடிக்கும் மாரீசன். ஆனால் இன்னும் தன்முடிவை ஜெனிலியா சொல்லவில்லையாம்.
இந்தியில் கைவசம் உள்ள 3 படங்களையும் முடித்துவிட்டு, வரும் பிப்ரவரியில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம் ஜெனிலியாவும் ரிதேஷும்.a

விஜய்யின் வேலாயுதம் – 20 ந் தேதி சென்சார்?


புதிய தெம்போடு காத்திருக்கிறது வேலாயுதம் டீம். இந்த தெம்புக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். தனது பிள்ளைக்காக அவர் சட்டதிட்டங்களை வளைக்கப் போவதில்லை என்றாலும், மலையை இழுக்கும்போது செடியை பிடித்துக் கொள்வதில்லையா? அப்படிதான் இதுவும்.
ஆஸ்கர் பிலிம்ஸ் என்ற பிரமாண்ட பேனர், வசூல் மன்னன் என்ற பிரமாண்ட அடைமொழி, ரஜினி, அஜீத் வரிசையில் அதிர வைக்கும் ஒப்பனிங் ஹீரோ என்ற மாஸ். இவ்வளவு இருந்தும் இந்த படம் தீபாவளிக்கு வந்துவிடுமா என்ற கேள்வியை அவ்வப்போது எழுப்பி ரசிகர்களை பிபி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இந்த சந்தேகத்தை அவர்கள் கிளப்ப காரணம் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் 7 ஆம் அறிவு திரைப்படம்தான். ஏராளமான தியேட்டர்களை கைப்பற்றியிருக்கிறதாம் இந்த படக்குழு. இதிலிருந்து பாதி தியேட்டர்களை மீட்டெடுத்தால்தான் அங்கு வேலாயுதம் படத்தை திரையிட முடியும் என்பதால் அந்த வேலையில் இறங்கியிருக்கிறார்களாம் இப்போது.
வருகிற 20 ந் தேதி இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கப் போகிறார்களாம். ஆனால் அதுவும் தவறான செய்தி. இன்னும் ஒரு பாடல் காட்சியே எடுக்கப்படாமலிருக்கிறது என்று இன்னொரு தகவலை கசிய விடுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
சர்க்கரை பொங்கலையும் வச்சுட்டு, சைட் டிஷ்ஷா மிளகாய் பொடியையும் வச்ச மாதிரிதான் இருக்கு கேள்விப்படுகிற எல்லாமே!a

Santhanam leads 30 comedians in Velayutham


velayutham-vijay-11-10-11






Vijay starrer Velayutham has Santhanam handling the comedy department. But what is news now is that the film is going to be a complete laugh riot because there are 30 comedians in it with Santhanam leading the pack.
This detail was let out recently. Velayutham is gearing up for Diwali release. The film’s director Jayam Raja says that it will go in for Censor certification on 16th or 17th October and the release date will be announced officially after that.

Friday, October 7, 2011

வேலாயுதம் வெற்றி பெறுமா?


நீண்டதொரு இடைவெளிக்குப்பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் விஜய் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புடனும் தீபாவளியன்று வெளிவர இருக்கும் வேலாயுதம் வெற்றி பெறுமா?
நிச்சயமாக முன்னைய விஜய் படங்களை போல் அல்லாது வேலாயுதம் சிறப்பாக வரும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே வந்து ஹிட்டாகிய பாடல்களும், நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வேலாயுதம் ட்றெயிலரும் படம் தோற்கும் என்று கூறிய பலருக்கும் வேலாயுதம் பற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் எல்லோரும் விஜயின் சிக்ஸ் பக் பற்றியே பேச்சு. அது ஊசி, கிராபிக்ஸ் என்று சிலர் கூறினாலும் நிச்சயம் அப்படி கூறுபவர்களுக்கும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம் ட்றெயிலர் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.. அதாவது இந்தளவு ஆக்‌ஷனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே.
இதற்கு எடுத்துக்காட்டாக காவலனுக்கு முன்னர் வந்த ஐந்து படங்களின் தோல்வியை கூறினாலும் அவற்றின் தோல்விக்கு ஆக்‌ஷன் மட்டுமே காரணமாகாது. குருவி போன்ற அதீத, மக்கள் நம்பமுடியாத, லாஜிக் இல்லாத ஆக்‌ஷனும், ஓவர் பஞ்ச் வசனங்களுமே அவற்றின் தோல்விக்கு காரணமாக இருந்தன. அதை விட அவற்றில் கதை குறைவாகவும் , சில நல்ல கதைகள் கூட விஜய்க்காக மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டும் வந்திருந்தன. அதனாலேயே சில படங்கள் விஜய் ரசிகர்களாலேயே ஏற்கப்படாமல் போயின.
வேலாயுதத்துக்கும் இதே நிலையா என்று பார்த்தால்.. இருக்கலாம் அல்லது வெற்றி பெறலாம். ஆனால் நிச்சயம் ஆக்‌ஷன் தோல்விக்கான காரணமாக இருக்கப்போவதில்லை. படத்தின் கதை சிறப்பாக வருமிடத்து நிச்சயம் வேலாயுதம் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் சந்தேகம் இல்லை. வேலாயுதம் படத்தின் கதை தெலுங்கு ஆசாத்தின் தழுவல். ஆனால் இன்றைய காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏற்கனெவே ராஜா கூறியிருந்தார்.
அதனால் கதையும் சிறப்பாக வரும் என்று நம்பலாம். விஜயின் அதீத பில்ட் அப்புகள், ஓவர் பஞ்ச் வசனங்கள் தவிர்க்கப்படுமிடத்து வேலாயுதம் பெரிய வெற்றிதான். இன்னொரு விடயம் கில்லியில் கூட பஞ்ச் வசனங்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதையாலும், திணிக்கப்பட்ட பஞ்ச் வசனங்களாக இல்லாமல் தேவையான இடங்களில் மாத்திரம் பயன்படுத்தியதாலும் அது விஜய் ரசிகர்களால் மாத்திரமன்றி ஏனையவர்களாலும் ஏற்கப்பட்டிருந்தது.
எது எப்படியோ.. வரும் 25 ஆம் திகதி முடிவு தெரிந்துவிடும்
ஆனால் நான் உட்பட ( ஹி ஹி ) விஜய் ரசிகர்களுக்கு வேலாயுதம் மிகப்பெரிய விருந்தாகவே இருக்கப்போகிறது. காரணம் 10 மாதத்திற்கு பின்னர் வரும் விஜய் படம் என்பதாலும், காவலனில் அமைதியான விஜயை பார்த்துவிட்டு அதிரடியான விஜயை பார்க்கப்போவதாலும், நிச்சயமான என் போன்ற விஜய் ரசிகர்களுக்கு இது பெரும் விருந்துதான்.

Friday, September 23, 2011

KUMUDHAM - Arasiyal Illai - Vijay Pudhu Route

பட்டாசுக்கு ஆர்டர் குடுத்து விட்டு, பால் அபிஷேகத்துகாக காத்திருகிறார்கள் "விஜய்" ரசிகர்கள்!


1) Vijay fans are waiting eagerly for Velayutham. Many of them have ordered fire crackers and waiting eagerly to do the first day milk pooja for Vijay. What can you say for them?

Ilayathalapathy Vijay has did an action rampage festival in Velayutham. It's worth a wait.

2) What is your opinion about making a film with Vijay?

Before 2 years, I met Vijay. He just asked me openly that, "You are always making films with your own brother and giving super hits. Won't you do a film with me?". I was so delighted to hear those words from his mouth and I narrated the story of Velayutham, in which the way i wanted to see Vijay in the silver screen as. At that time there was no political buzz surrounded Vijay.

3) Is there any dialouges in Velayutham to show Vijay as a politician?

In talking about Vijay movies, his fans always go to the theater to see their star's face in the silver screen only. If Vijay is with 500 fans in a spot, He will always pay attention to his fans and love to take photographs with all of them patiently. In Velayutham there is a dialogue, where Vijay says 'En Rasigargalukku onnu na naan aayutham ah maariduven".

4) Who is more responsible for a film's failure? Is it the story of the film or the hero?

The story is the first reason. Then comes the producer of the film. In my opinion, a brave director means, a person who fixes the hero in mind, for whom he is writing the script and makes a perfect story that suits him.

5) Did Velayutham gave the confidence that, it will break all the expectations while producing itself?

There are producers like Aascar Ravichandran, who won't even think about backing off or be scared to invest money to produce a big sum film like Velayutham for a mass hero like Vijay, who has a huge fan base

Monday, September 19, 2011

Vijay fans expectations cross Velayutham

vijay-vijay-fans-17-09-11
We all know that the expectation for Velayutham is much more than what it was earlier. But the Ilayathalapathy fans’ expectations are now crossing beyond Velayutham. What is it? With the local elections round the corner, his fans are hoping that the star and his dad SA Chandrasekar would arrange to get them some seats to contest in the polls.

With Vijay enjoying a good rapport with the Tamil Nadu chief minister J Jayalalitha, it could turn out to be a possibility

For the record

Within minutes of reaching the market, the audio of Velayudham recorded an unprecedented sell-out. More than a lakh CDs on the first day of release is an incredible figure, and naturally I'm curious about the reaction of the man behind the music — Vijay Antony. Particularly because Antony is one music director who doesn't mince words when he says he's had no formal training in the art. “I don't know how I do it,” is all he has to say when queried about his creative skill!

Success is on a fast track for this composer-lyricist-singer-t
urning-actor. After a spate of hits, the response to his songs for Velayudham has touched a new high! He laughs, “I work for every film with the same amount of diligence. But here it is also the draw of the hero that's working magic for my music.”

At the launch of the album in Madurai, Vijay, the leading man of Velayudham , proved for the nth time that he's a veritable crowd-puller. And when he announced that each Vijay Antony number should be a rollicking hit, the audience cheered in assent. Vijay then went on to sing a couple of lines of ‘Sonna Puriyaadhu' from the new album, and the people went delirious with joy. “Vijay loved the songs. The 20-minute teaser we had circulated on the net also helped,” says Antony.


Director Raja, Vijay and Vijay Antony as a team, is new. “I can't thank Raja enough. I just gave him one tune for each lyric. He liked them all,” smiles Antony. Generally, directors listen to several options before they zero in on one. “As a composer, I only give directors tunes I'm happy with. I was thrilled to see our tastes converge at the same point.” But among the songs, the melody of ‘Mulachu Moonu' is the most mesmerising. Viveka's verses for the number are equally splendid.


Antony has this practice of plumping for new voices and lyricists. All aspiring singers have to do is mail their voices to v ijayantonymusic@gmail.com “I get back to them if I find the timbre impressive. I don't accept CDs. The ‘Mulachu Moonu' you tell me about has been sung by Supriya Joshi from Mumbai. She sent a demo by mail and I asked her to come down for the recording,” he says.


This composer is himself a singer, and invariably the songs turn out to be chartbusters. The most recent is ‘Oh my Angel,' a favourite on FM. Now, two of Velayudham 's songs are in Antony's voice. “It isn't planned. Once a composition is complete I sing the track and send it to the director. He sometimes suggests I record them in my voice, and I go ahead.”


Composing a tune, giving it to the lyricist and getting the words for it, is the norm. Very rarely it works the other way too, with the words coming first, and the composer lending a tune to them. Vijay Antony always prefers the latter. “I interact a lot with the lyric writer. His diligence and the concept are primary. Then the rest fall in place,” he reasons. Probably it is this rapport that has made Annamalai, the wordsmith of Antony hits such as ‘En Uchi Mandaiyila' and ‘Benares Pattu Katti,' pen a couple of songs for Velayudham . “He's talented and we vibe well,” says Antony.


Mention Vijay Antony and the strange words in his refrains are bound to come to mind — ‘Naaku Mooka,' ‘Aathi Choodi' … You now hear it in the Velayudham piece — ‘Chillax' (!) begins the number. Is it a cultivated Vijay Antony stamp? Antony disagrees. “I intend relegating such rigmarole to the background for a while because my melodies get buried in the bargain. All the same, on the very day of the audio release everyone in the crowd screamed ‘Chillax.' So the draw of such usages is obvious,” he grins.


He must be tracking his listeners' choices to know their pulse so well. “Of course, social networking is essential. The feedback helps me grow. And it's a real stress buster. When I knew that without my knowledge responses were being circulated on websites in my name, I decided to plunge into it myself. Now www.facebook.com/vijayantonyinfo. is my fan page. My updates are lapped up in a jiffy and I'm thrilled. I'm active on Twitter too. So in no time I could gauge that Velayudham music had caught on!”

Saturday, September 17, 2011

Vijay to shoot in Srinagar


Ilayathalapathy Vijay will shake his legs in the backdrop of picturesque locales of Srinagar for 'Velayudham', as the only one song which is left to be shot will be canned in the capital city of Jammu and Kashmir.
Select members of the cast and crew of 'Velayudham' will leave for Srinagar on September 17 to shoot the number 'Molachu moonu ilai vidala...'  They will be back within a week, sources in the know tell us.
What is more interesting about this particular song is that it would have both the heroines of the film - Genelia D'Souza and Hansika Motwani - sharing screen space with Vijay. It will be choreographed by a popular dance master.
Meanwhile, director 'Jayam' Raja is upbeat about the movie's prospects in the box-office. "Velayudham will be tailor-made for the fans of Vijay. How an ordinary man becomes a super hero is the one-line that can best describe the story," he says

Wednesday, September 14, 2011

ஒரு லட்சம் பேர்.. நோ ப்ராப்ளம் ! – ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும்


விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘வேலாயுதம்’. இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.
இப்படம் குறித்து ஜெயம் ராஜா ” விஜய் சார் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்தவர். என் பாதையும் அதுதான். குழந்தைகள் மற்றும் குடும்பதினரை நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள் கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் இறுக்கமும் வந்து விட்டன.

‘வேலாயுதம்’ தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாக இது இருக்கும்.
ஜெனிலியா, ஹன்சிகா என இரு நாயகிகளுக்குமே என்மேல் கடைசி வரை ஒரு சந்தேகம் இருந்தது. படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்கிற சந்தேகம் அது. படத்தில் இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. படம் வெளியான பிறகு வகையில் இருவரும் பேசப்படுவார்கள்.
நட்சத்திரங்களின் ஒத்துழைப்பைப் போல தொழில் நுட்ப கலைஞர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து இருக்கிறார்கள்.இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘வேட்டைக்காரன்’ பாடல்களைத் தாண்டி பேசப்பட வேண்டும் என்று கடுமையாக பாடுபட்டார். அதனால் தான் அவர் போட்டுக் காட்டிய 6 மெட்டுகளும் முதல் முறையிலேயே பிடித்துப் போய் பாடலாயின. அதனால்தான் ஆடியோ விற்பனையிலும் ‘வேலாயுதம்’ சாதனை படைத்தது.
தயாரிப்பாளர் ரவிசார் பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரை மேலே போவார். பாதாளம் தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கும் ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டது. ஏன் எதற்கு என்று கேட்கவில்லைல் ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும் கேரளாவில்… அசந்து போய் விட்டேன்.
இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பொள்ளாச்சி, சென்னை, கொச்சி, லடாக், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஒரிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம்.
தமிழ் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ” என்று தெரிவித்துள்ளார்

ஜெனிலியாவா-ஹன்சிகாவா? – வோலாயுதம் படப்பிடிப்பில் மோதல்!


விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘வேலாயுதம்’ படத்தில் ஜெனிலியா – ஹன்ஸிகா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த இருவருக்கும் யார் பெரிய நட்சத்திரம், யாருக்கு படத்தில் முக்கியத்துவம் என்ற மோதல் எழுந்தததாம்.
பின்னர் ஒருவழியாக இந்த மோதலைத் தீர்த்து வைத்தார்களாம்.
வேலாயுதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். படத்தின் சிறப்புகள் குறித்து இயக்குநர் ராஜா பேட்டியளித்து வருகிறார்.
படத்தின் இரு ஹீரோயின்களின் ஈகோ போட்டி குறித்து இயக்குநர் ராஜா கூறுகையில், “ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற ‘ஈகோ’ மனப்பான்மை இருந்தது உண்மைதான். ஆனால், அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள்.
உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு, வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும்போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான்.
ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், பிரச்சினை எதுவும் இல்லை.
படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது. உச்சக்கட்ட காட்சியை கேரள மாநிலம் கொச்சியில் 15 நாட்கள் நடத்தினோம்.
ரஜினிக்கு பாட்ஷா போல…
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘பாட்ஷா’வைப்போல், கமல்ஹாசனுக்கு ‘தசாவதாரம்’ போல், விஜய்க்கு `வேலாயுதம்’ படம் அமையும்,” என்றார் ராஜா.
அமைஞ்சா சரி!