Tuesday, July 30, 2013

பவர்ஸ்டாருடன் மோதும் விஜய்யின் தலைவா

விஜய்யின் தலைவா படம் தெலுங்கில் அண்ணா என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. விஜய்யின் தலைவா படம் வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று முதலில் அறிவித்தார்கள். பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது என்று கூறப்பட்டது. தற்போது இறுதியாக முன்பு முடிவு செய்த அதே ஆகஸ்ட் 9ம் தேதி தான் தலைவா படம் ரிலீஸ் ஆகிறது. படம் அதிகமான ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. இதனால் சின்ன படங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

ரம்ஜான் ஸ்பெஷல்
தலைவா படம் ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது. இந்த படம் விஜய் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கில் அண்ணா

தலைவா படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அண்ணா என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழில் ரிலீஸாகும் அதே தேதியில் தான் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது
பவர்ஸ்டார்
தெலுங்கு பவர்ஸ்டார் பவன் கல்யாணின் அத்தாரின்டிகி தாரேடி படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பவன் கல்யாண் படம் ரிலீஸான மூன்றாம் நாள் விஜய்யின் தலைவா ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்யும், பவனும்


பவன் கல்யாண் நடித்த தம்முடு படம் தமிழில் விஜய் நடிப்பில் பத்ரியாக ரிலீஸ் ஆனது. விஜய்யின் லவ் டுடே மற்றும் திருப்பாச்சி ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக்கான சுஸ்வாகதம், அன்னவரம் ஆகியவற்றில் பவன் கல்யாண் நடித்தார்.


Monday, July 29, 2013

தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.... சின்னப் படங்கள் இன்னும் 2 வாரம் காத்திருக்க வேண்டும்!

விஜய்யின் தலைவா படத்துக்கு அதிகபட்சமாக தியேட்டர்களை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதால் சிறிய பட்ஜெட் படங்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை.

விஜய் நடித்துள்ள தலைவா வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்தப் படத்துக்கு நகரங்களில் அதிகபட்ச மல்டிப்ளெக்ஸ் ஸ்க்ரீன்களும், கிராமம் சார்ந்த நகரங்களில் இருப்பதிலேயே நல்ல தியேட்டர்களையும் ஒதுக்கியுள்ளனர். அதிகபட்ச அரங்குகளை ஒதுக்கு முதல் வாரத்திலேயே வசூல் பார்க்க இந்த யுத்தி (படம் குறித்து எதிர்மறை பேச்சு நிலவுவதால்!).


தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.... சின்னப் படங்கள் இன்னும் 2 வாரம் காத்திருக்க வேண்டும்!
அதற்கு அடுத்த வாரமே ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் வருகிறது. பொதுவாக இந்த நாளில் பண்டிகைக்கு வெளியாவது போல நான்கைந்து படங்கள் வருவது வழக்கம். இந்த முறையும் 6 படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. ஆனால் தலைவாவுக்கே அதிக தியேட்டர்கள், அதுவும் இரண்டு வாரங்களுக்கு தரப்பட்டுள்ளதால், மற்ற படங்களுக்கு போதிய அரங்குகள் இல்லை. எனவே தேசிங்கு ராஜா மற்றும் ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்கள் மட்டும் இருக்கும் தலைவாவுக்கு ஒதுக்கியது போல மிச்சமிருக்கும் தியேட்டர்களில் வெளியாகின்றன

தங்க மீன்கள், ரகளபுரம் போன்றவை இந்த முறையும் தியேட்டர்களின்றி காத்திருக்கின்றன. 

ஜில்லாவில் விஜய் சம்பளம் ரூ 20 கோடி

ஜில்லாவில் விஜய் சம்பளம் ரூ 20 கோடியாமே!
ஜில்லா படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ 20 கோடிவரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்துவதில் தமிழ் ஹீரோக்களுக்கு இணை கிடையாது. ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் தங்கள் நூறாவது படத்தில் கூட கோடி ரூபாய் சம்பளம் பெற்றதில்லை. 

ஆனால் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, அட.. சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கும் கோடி ரூபாய் என்பது ஆரம்ப கட்ட படங்களிலேயே கிடைத்துவிட்டது. 

விஜய்யைப் பொறுத்தவரை, பூவே உனக்காக படம் வரை அவருக்கு பெரிய சம்பளம் என சொல்லிக் கொள்ளும்படி யாரும் தந்ததில்லை. ஆனால் காதலுக்கு மரியாதைக்குப் பிறகு அவரது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. தலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ 18 கோடி என்றும், அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் அவருக்கு ரூ 20 கோடிக்கு மேல் பேசப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

கண்டவன் எல்லாம் கோடில சம்பளம் வாங்கும் போது தலைவா எத்தனை கோடி வாங்கினால் என்ன படம் ஹிட் எல்ல ...

Thalaiva Dance

Sunday, July 28, 2013

தலைவாவுக்கு ‘யு‘ சான்று தர தணிக்கை குழு மறுப்பு

Thalaiva-2விஜய் நடித்து முடித்துள்ள படம் தலைவா. அமலாபால், ஹீரோயின். மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதை. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி.
வருகிற 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள். போஸ்டர்களும் அடித்து குவித்து விட்டார்கள். டி.வி. எப்.எம். பத்திரிகை அனைத்திலும் விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்து விட்டார்கள். படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கி இருக்கும் வேந்தர் மூவீஸ் விளம்பரத்துக்காக மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க தலைவா படத்திற்கு தணிக்கை குழு யு சான்று கொடுத்ததாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை. இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைமையிலான படக்குழுவினர் விஜய் படம்தானே தணிக்கை குழு தாராளமாக யு சான்றிதழ் தந்து விடும் என்று அபாரமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிலைமை தலைகீழானது.
படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி ஏ கொடுக்க முடிவு செய்தனர். தயாரிப்பாளர், இயக்குனர் அனைவரும் வாதாடியதால் கடைசியில் தணிக்கை குழுவினர் யு/ஏ கொடுக்க முன்வந்தனர். ஆனால் படக்கு குழுவினர் யு தான் வேண்டும் என்று பிடிவாதமாக சொன்னார்கள். அதனை ஏற்க தணிக்கை குழு மறுத்துவிட்டது. சில காட்சிகளை நீக்கினால் யு தருவாதாக சொன்னார்கள். அந்தக் சீன்கள்தான் படத்தில் முக்கியமானது கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்டது.
இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். அங்கும் யு/ஏ உறுதி செய்யப்பட்டால் மும்பையில் மறு தணிக்கை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். யு/ஏ சான்றிதழுடன் படம் வெளிவந்தால் வரிவிலக்கு கிடைக்காது.
இதனால் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய கோடிக் கணக்கான ரூபாய் அரசுக்கு வரியாகச் சென்று விடும். வரிவிலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வருமானத்தையும் சேர்த்துதான் வேந்தர் மூவீஸ் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கி உள்ளது.
ஒரு வேளை வரிவிலக்கு கிடைக்காவிட்டால் கொடுத்த பணத்தின் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும் என்று வேந்தர் மூவீஸ் கோரலாம். அதனால்தான் யு வாங்கியே தீருவது என்ற தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.
சமீப காலமா தமிழக அரசு விஜய்க்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்றும், விமானநிலையம் அருகே நடைபெற இருந்த பிரமாண்ட ரசிகர் மன்ற விழாவுக்கு தடைவிதித்தது. இப்போது தலைவா படத்துக்கு தொல்லை தருகிறது என்றும் விஜய் தரப்பு கருதுகிறது. எது எப்படி இருந்தாலும் அறிவித்த தேதிக்குள் படத்தை வெளியிட்டு விடுஙங்கள் என்று விஜய் கூறியிருக்கிறாராம்.

பொங்கலில் ஜில்லா

JILLA Kediவிஜய்யின் ஜில்லா படத்திற்கான மூன்றாம் கட்ட படிப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. நடிகர் விஜய்யும், காஜல் அகர்வாலும் இணைந்து நடித்த துப்பாக்கி படம் ஏக வசூலை அள்ளியது. அதைதொடர்ந்து, விஜய்யும், காஜலும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ஜில்லா.
இப்படத்தில் மேகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைக்கிறார் டி. இமான். ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், 3ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. விஜய்யின் தலைவா படத்தை விட அதிக எதிர்பார்பை கிளப்பிவிட்டிருக்கும் ஜில்லா படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.ஜே. நேசன் இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, சென்னையில் நடக்கவுள்ள ஷூட்டிங்கில், ஹீரோ ஹீரோயின் முதல் முதலில் சந்திக்கும் காட்சி எடுக்கப்படவுள்ளது. இதுதவிர, படத்தில் புரோட்டா சூரியை வைத்து எடுக்கப்படவுள்ள காமெடி சீன்களும் சென்னையில் ஷூட் செய்யப்படவுள்ளது என்றார்.
அடுத்த வருடம் (2014) பொங்கலில் ஜில்லா படம் வெளியாக இருக்கிறது.

Thursday, July 25, 2013

விஜய்க்கு அசின், அஜீத்துக்கு நயன்தாரா தான் பெஸ்ட்

விஜய் கூல் ஆனவர் என்றும், அஜீத் குமார் உண்மையானவர் என்றும் கோலிவுட்டின் பிரபல புகைப்படக்காரர் சிற்றரசு தெரிவித்துள்ளார். 

கோலிவுட்டின் பிரபலமான புகைப்படக்காரர்களில் ஒருவர் சிற்றரசு. அவர் அஜீத், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் முதல் இளம் தலைமுறை ஹீரோக்கள் வரை ஏராளமானோருடன் பணியாற்றியுள்ளார்.

 அவர் அஜீத் மற்றும் விஜய் குறித்து முன்னணி பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சில விவரங்களை உங்களுக்கு அளிக்கிறோம்.

விஜய்க்கு அசின்

இளையதளபதி விஜய்க்கு அசின் தான் சிறந்த ஜோடி என்று புகைப்படக்காரர் என்ற முறையில் தனக்கு தோன்றுகிறது என்றார் சிற்றரசு.

அஜீத்துக்கு நயன் 

அஜீத் குமாருக்கு ஏற்ற ஜோடி என்றால் அது நயன்தாரா தான் என்று சிற்றரசு தெரிவித்துள்ளார்.

தளபதிக்கு கேஷுவல்

விஜய்க்கு கேஷுவல் டிரஸ் நன்றாக இருக்குமாம்.

அஜீத்துக்கு வேட்டி, சட்டை

அஜீத் குமார் வேட்டி, சட்டையில் அம்சமாக இருப்பார் என்று கூறியுள்ளார் சிற்றரசு.


விஜய் கூல்

விஜய்யிடம் சிற்றரசுக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் அவர் தன்னுடன் பணிபுரிபவர்களை ரிலாக்சாக ஃபீல் பண்ண வைப்பது தான்.

அஜீத் உண்மையானவர் 

அஜீத் குமார் உண்மையானவர் என்றும் தன்னுடன் பணிபுரிபவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார் என்றும் சிற்றரசு தெரிவித்துள்ளார். ஒருவரிடம் அஜீத் நன்றாக பழகிவிட்டால் அவருக்கு தேவையான நேரத்தில் உதவி செய்வார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் 

சிற்றரசு அஜீத்தின் ஆரம்பம் படத்தில் பணிபுரிந்துள்ளார். மேலும் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் பணிபுரிகிறார்.

Monday, July 22, 2013

ஜில்லாவில் போலீசா வர்றாராம் விஜய்!

ஜில்லாவில் போலீசா வர்றாராம் விஜய்!துப்பாக்கியில் ராணுவ வீரர், தலைவாவில் 'அரசியல் புள்ளி' என நடித்த விஜய், அடுத்த படமான ஜில்லாவில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. 

சமீபத்தில் சென்னை ஆவடியில் உள்ள காவலர் மைதானத்தில் விஜய்யும் மற்றவர்களும் பங்கேற்ற காட்சியைப் பார்த்த சிலர் வெளியிட்ட தகவலில் அடிப்படையில் இந்த செய்தி பரவி வருகிறது. 

ஜில்லா படத்தை முருகா படம் இயக்கிய நேசன் இயக்குகிறார். விஜய்க்கு மீண்டும் இந்தப் படத்தில் ஜோடியாகியுள்ளார் காஜல் அகர்வால். 

முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

 படம் மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் விஜய் முஸ்லிம் இளைஞராக நடிக்கிறார் என முதலில் செய்தி வெளியாகி, பலவிதமான கமெண்ட்கள் பறக்க காரணமானது நினைவிருக்கலாம். ஏற்கெனவே போக்கிரி படத்தில் போலீசாக சில காட்சிகளில் தோன்றினார் விஜய் என்பது நினைவிருக்கலாம்.