Friday, October 25, 2013

'ஜில்லா'வுக்கு மினி காரில் வந்த நடிகர் விஜய்!

நடிகர் அஜீத் ஒரு பக்கம் காஸ்ட்லி பைக்குகளை வாங்கி வரிசை கட்டி வரும் நிலையில், மறுபக்கம் நடிகர் விஜய் ஆடம்பர கார்களை அடுக்கி வருகிறார். ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் ஏற்கனவே இணைந்து விட்ட விஜய் தற்போது மினி கூப்பர் எஸ் காரை வாங்கியுள்ளார். 

வேகமாக வளர்ந்து வரும் ஜில்லா படப்பிடிப்புக்கு மினி காரில்தான் அவர் வருகை தருகிறார். அழகு, பெர்ஃபார்மென்ஸ் என அனைத்திலும் சிறப்பானதாக புகழப்பெறும் விஜய்யின் புதிய மினி கார் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்

மினி கார் முன்னோட்டம் 

1959ம் ஆண்டு 2 கதவுகள் கொண்ட முதல் மினி கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கன்வெர்ட்டிபிள் மற்றும் கிராஸ்ஓவர் ரகங்களில் பல மாடல்கள் வெளிவந்தன. 1994ல் இங்கிலாந்தை சேர்ந்த மினி கார் நிறுவனத்தை ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ கையகப்படுத்தியது. 2000ம் ஆண்டில் முழுவதுமாக பிஎம்டபிள்யூ கட்டுப்பாட்டில் வந்த மினி பிராண்டு 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வழியாக தனது மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஏ, பி மற்றும் சி பில்லர்கள் கருப்பு நிறப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது


டிசைன் 

பிரிமியம் கார்களில் மிக சிறிய அதேவேளை மிகக் கவர்ச்சியான கார் மாடல்கள்தான் மினி. பெயரில் மினியாக இருந்தாலும், அழகியலில் மேக்ஸிமம் என்று கூறவைக்கும். இதனாலேயே பார்த்தவுடன் மினி கார் அழகில் மயங்கி வாங்கியுள்ளார் விஜய். இந்த சிறிய காருக்கு 17 இஞ்ச் அலாய் வீல் கம்பீரமான அழகை தருகிறது. பின்புறத்தில் இரட்டைக் குழல் சைலென்சர் சூப்பர் சொல்ல வைக்கிறது.


வண்ணம்

 நீல வண்ணத்தில் வெள்ளை நிற கூரை கொண்ட கார் மாடலை விஜய் வாங்கியுள்ளார். இந்த காரில் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.


இடவசதி

4 பேர் செல்லும் வசதி கொண்ட இந்த காரில் உயர்ரக லெதர் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. 160 லிட்டர் பூட்ரூம் கொண்ட இந்த காரின் பின் இருக்கைகளை மடக்கினால் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி 680 லிட்டராக அதிகரித்துக் கொள்ள முடியும். கூரையில் கேரியர் பொருத்தி 75 கிலோ எடையை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இன்டிரியர் 

இன்டிரியர் மிக ரம்மியமாக காட்சி தருவது இதன் சிறப்பம்சம். இந்த காரின் இன்டிரியரில் மிக கவரும் அம்சம் கடிகார சைஸ் இருக்கும் இதன் பெரிய ஸ்பீடோமீட்டர் கன்சோல். ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூவின் ஐடிரைவ் அடிப்படையிலான இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஸ்டீயரிங் வீலுக்கு நேர் கீழாக டாக்கோ மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏசி வென்ட், ஸ்டீயரிங் வீல் டிசைன், ஸ்பீடோமீட்டர் என எங்கு பார்த்தாலும் வட்ட வடிவ டிசைனாகவே இருக்கிறது. இருப்பினும், மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

 184 பிஎச்பி ஆற்றலையும், 240 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. பேடில் ஷிப்ட் வசதியும் உண்டு.


பெர்ஃபார்மென்ஸ்

 0- 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 223 கிமீ வேகத்தில் செல்லும் கட்டமைப்பை பெற்றது.


மைலேஜ் 

லிட்டருக்கு 15.6 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


பாதுகாப்பு வசதிகள்

 இபிடியுடன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரொகிராம், கார்னரிங் பிரேக் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.


விலை 

மாருதி ரிட்ஸ் போன்ற நீள, அகல அளவுகள் கொண்ட மினி கூப்பர் எஸ் கார் ரூ.30 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.






No comments:

Post a Comment