Thursday, October 17, 2013

முடிந்தது ஜில்லா... பொங்கலுக்கு நிச்சயம்!

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் வசனக் காட்சிகள் மொத்தமும் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன.

பாடல் காட்சிகளை ஒசாகாவில் படமாக்கிவிட்டால் படம் மொத்தமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனுக்குப் போய்விடும்.
முடிந்தது ஜில்லா... பொங்கலுக்கு நிச்சயம்!

விஜய்க்கும் பார்வையாளர்களுக்கும் பெரும் தலைவலியாக அமைந்த தலைவா படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படம் ஜில்லா. 

இந்தப் படத்தில் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் மலையாள நடிகர் மோகன் லால். நேசன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வாலும், மோகன் லால் ஜோடியாக பூர்ணிமா பாக்யராஜும் நடித்துள்ளனர். காமெடிக்கு பரோட்டோ சூரியை போட்டுள்ளனர். இமான் இசையமைக்கிறார். இப்படத்தை ஆர்.சௌதிரி பிரமாண்டமாக தயாரிக்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து முடிந்தது. டாக்கி போர்ஷன் எனப்படும் வசனக் காட்சிகள் முழுவதுமாக படமாக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இம்மாத இறுதியில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. ஜப்பானின் தொழில் நகரமான ஒசாகாவில் பாடல் காட்சிகளைப் படமாக்குகிறார்கள். 

இதனால் படம் பொங்கலுக்கு வருவதை 100 சதவீதம் உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment