Wednesday, September 14, 2011

ஒரு லட்சம் பேர்.. நோ ப்ராப்ளம் ! – ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும்


விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘வேலாயுதம்’. இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.
இப்படம் குறித்து ஜெயம் ராஜா ” விஜய் சார் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்தவர். என் பாதையும் அதுதான். குழந்தைகள் மற்றும் குடும்பதினரை நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள் கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் இறுக்கமும் வந்து விட்டன.

‘வேலாயுதம்’ தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாக இது இருக்கும்.
ஜெனிலியா, ஹன்சிகா என இரு நாயகிகளுக்குமே என்மேல் கடைசி வரை ஒரு சந்தேகம் இருந்தது. படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்கிற சந்தேகம் அது. படத்தில் இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. படம் வெளியான பிறகு வகையில் இருவரும் பேசப்படுவார்கள்.
நட்சத்திரங்களின் ஒத்துழைப்பைப் போல தொழில் நுட்ப கலைஞர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து இருக்கிறார்கள்.இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘வேட்டைக்காரன்’ பாடல்களைத் தாண்டி பேசப்பட வேண்டும் என்று கடுமையாக பாடுபட்டார். அதனால் தான் அவர் போட்டுக் காட்டிய 6 மெட்டுகளும் முதல் முறையிலேயே பிடித்துப் போய் பாடலாயின. அதனால்தான் ஆடியோ விற்பனையிலும் ‘வேலாயுதம்’ சாதனை படைத்தது.
தயாரிப்பாளர் ரவிசார் பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரை மேலே போவார். பாதாளம் தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கும் ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டது. ஏன் எதற்கு என்று கேட்கவில்லைல் ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும் கேரளாவில்… அசந்து போய் விட்டேன்.
இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பொள்ளாச்சி, சென்னை, கொச்சி, லடாக், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஒரிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம்.
தமிழ் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ” என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment