தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதையொட்டி அனைவருக்கும் இன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டுள்ளது.
அனைவரும் வாக்களிக்க வகை செய்யும் விதத்தில் இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல தியேட்டர்களிலும் இன்று காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில், வாக்குப் பதிவில் அனைவரும் கலந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதை ஏற்று தமிழகத்தில்உள்ள தியேட்டர்களில் இன்று காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் ஊழியர்களும் வாக்களிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
மாலைக் காட்சி மற்றும் இரவுக் காட்சிகள் வழக்கம் போல இடம் பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment