நடிகர் விஜய் - ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்து வரும் புதிய படம் வேலாயுதம். |
விஜய்யின் முந்தைய படமான காவலன் படத்திற்கு எக்கச்சக்க தொந்தரவுகளை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வேலாயுதம் பட சூட்டிங்கில் விஜய் பங்கேற்று வந்த நிலையில்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் ரசிகர் மன்றம் பகிரங்க ஆதரவு தெரிவித்தது. விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ரசிகர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். முன்னணி நிலவரம் வெளியாக ஆரம்பித்ததில் இருந்தே ஜெயா டிவியில் விஜய்யின் வேலாயுதம் படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டன. இறுதிகட்ட படப்பிடிப்பில் வேலாயுதம் என்ற விளம்பர வரிகளுடன் வெளியான அந்த விளம்பரம் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. வேலாயுதம் படத்தினை வாங்க பலரும் முயற்சி செய்துவந்த நிலையில் அந்த படம் ஜெயா டிவிக்கு கைமாறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
Wednesday, May 18, 2011
ஜெயா தெலைக்காட்சிக்கு கைமாறிய வேலாயுதம் படம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment