சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் துப்பாக்கி இந்தி ரீமேக்கை முடித்துவிட்டு அஜீத்தை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. ஆனால் தற்போது விஜயை வைத்து படம் எடுக்கிறாராம். ஏ.ஆர். முருகதாஸ் விஜய், காஜல் அகர்வாலை வைத்து எடுத்த துப்பாக்கி படத்தை இந்தியில் பிஸ்டல் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்தியில் விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 50 கோடி சம்பளமாம். பிஸ்டல் படப்பிடிப்பு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிஸ்டலை முடித்த கையோடு முருகதாஸ் தமிழில் படம் இயக்குகிறார் என்று கூறப்பட்டது.

No comments:
Post a Comment