சமீபத்தில் சென்னை ஆவடியில் உள்ள காவலர் மைதானத்தில் விஜய்யும் மற்றவர்களும் பங்கேற்ற காட்சியைப் பார்த்த சிலர் வெளியிட்ட தகவலில் அடிப்படையில் இந்த செய்தி பரவி வருகிறது.
ஜில்லா படத்தை முருகா படம் இயக்கிய நேசன் இயக்குகிறார். விஜய்க்கு மீண்டும் இந்தப் படத்தில் ஜோடியாகியுள்ளார் காஜல் அகர்வால்.
முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
படம் மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் விஜய் முஸ்லிம் இளைஞராக நடிக்கிறார் என முதலில் செய்தி வெளியாகி, பலவிதமான கமெண்ட்கள் பறக்க காரணமானது நினைவிருக்கலாம். ஏற்கெனவே போக்கிரி படத்தில் போலீசாக சில காட்சிகளில் தோன்றினார் விஜய் என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment