Friday, August 5, 2011

அப்பா தயாரிப்பில் விஜய் !

'வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களை அடுத்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. 

ஏழாம் அறிவு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் என அனைத்து முடிந்து படம் தயாராவதற்கும், விஜய்யும் வேலாயுதம் பணிகள், நண்பன் பணிகள் என அனைத்து பணிகளையும் முடித்து விட்டு வருவதற்கு சரியாக இருக்கும் என்பதால் இருவரும் இணைகிறார்கள்.

இப்படம் விஜய்யின் ரசிகர்களுக்கு ஏற்றபடியும், ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதை என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது. விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

படத்தின் நாயகி யார் என்பது இதுவரை முடிவாகவில்லை.

ஏ.ஆர்.முருகாதஸ் படத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்படலாம் என்கிறார்கள்.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம்.

Thursday, August 4, 2011

Ennai Pol Yaarum Illai - Kumudham Article


வேலாயுதம் படம் பார்த்துவிட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்ட விஜய்

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் வேலாயுதம் படத்தை போட்டுப் பார்த்த நடிகர் விஜய், தனது கருத்து எதுவும் சொல்லாமல் கப் சிப்பாகி விட்டாராம். டைரக்டர் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் இப்படத்தை பார்த்துள்ளார் விஜய். படம் முடிந்ததும் அமைதியாகக் கிளம்பி சென்றுவிட்டாராம் விஜய். பக்கத்திலிருந்த டைரக்டர் ராஜாவிடம் கூட எதுவும் சொல்லவில்லையாம். விஜய் கருத்து எதுவும் சொல்லாததால், டைரக்டர் ராஜா ரொம்பவே டென்ஷன் ஆகி விட்டாராம். என்னடா இது... படம் பிடிக்கவில்லையா? என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், விஜய் தன்னிடம் பேசியதாக டைரக்டர் ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன், கூறியிருக்கிறார். அப்போது, படம் பார்த்துவிட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டதால் விஜய் எதுவும் பேசவில்லையாம். படம் மிகப் பெரிய வெற்றிபெறும் என விஜய் கூறியதோடு, உன்னை வெகுவாகப் புகழ்ந்தார்," என்று கூறியுள்ளார் எடிட்டர் மோகன்.

இதுபற்றி டைரக்டர் ராஜா கூறுகையில், விஜய் மிக எளிமையான இனிய மனிதர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. இந்த படத்தில் அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. ரசிகர்களுக்கு இந்தப் படம் திகட்டாத விருந்தாக அமையும், என்றார்.

சீமானைக் கைவிட்டார் விஜய்?

Seeman and Vijayபுலி வருது கதையாக சீமான் - விஜய் இணையப் போகிறார்கள் என்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. காவலன் முடிந்த பிறகு, வேலாயுதம் முடிந்த பிறகு, இல்லையில்லை நண்பனுக்குப் பிறகு என்றெல்லாம் சொல்லி வந்தார்கள்.

இப்போது சீமானுக்கு படமே இல்லையோ என்று கேட்கும்படியாகிவிட்டது நிலைமை.

காரணம் 2013 வரை விஜய் அடுத்தடுத்த படங்களுக்கு ஒப்பந்தமாகி, அதிகாரப்பூர்வமாக உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

வேலாயுதம் படத்தை அடுத்து ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இயக்குனர் ஹரிதான் இந்தப் படத்தை இயக்குகிறார் என்கிறார்கள்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் அக்டோபரில் துவங்கக்கூடும். 2012-ல் கெளதம் மேனன் படம் தொடங்கி 2013 பொங்கல் வெளீயிடாக வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியெனில் சீமான் படம்? சீமான் இரண்டு வெவ்வேறு க்ளைமாக்ஸ்களைச் சொல்லியும் விஜய்க்கு திருப்தியில்லையாம். இப்போதைக்கு அதுபற்றி விஜய் பேச மறுக்கிறாராம்.

விஜய்யின் இந்த மவுனம் தொடர்ந்தால், கைவசம் தயாராக உள்ள 'கோபம்' படத்தினை தொடங்கிவிடுவார் சீமான். இதை ஏற்கெனவே அவர் அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

விஜய் ஆர்பி சௌத்ரி படத்தின் இயக்குனர் யார்?


vijay-hari-04-08-11
விஜய்க்கு சென்டி மென்டான தயாரிப்பாளர் யார் என்றால் அது ஆர்பி சௌத்ரிதான். அவருக்கு விஜய் ஒரு படம் செய்து கொடுக்கப்போகிறார் என்பது கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கோலிவுட்டில் உலாவரும் செய்தி. ஆனால் அடுத்தடுத்து விஜய்க்கு படங்கள் வரிசையாக புக்காகி உள்ளது. அப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் கூட முடிவு செய்யப்பட்டு விட்டது. அப்படியென்றால் சௌத்ரி தயாரிப்பது எந்தப்படத்தை என்றால் முருகதாஸ், கௌதம் மேனன் படங்களுக்கு இடையில் ஹரி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாகவும். அப்படத்தை ஆர்பி சௌத்ரி தயாரிகப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

என்ன ஆனது விஜய்யின் பகலவன்?



vijay-seeman-04-08-11
விஜய்க்கு அடுத்தடுத்து மிகப்பெரிய இயக்குனர்களுடன் படங்கள் ஒப்பந்தம் ஆகிவருகிறது. ஜெயம் ராஜாவுடன் 'வேலாயுதம்' ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 'நண்பண்' படத்தில் நடித்த்து வருகிறார். கௌதம் மேனனுடன் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தின் ப்ரொமோ போஸ்டர்ஸ் கூட வெளியாகி விட்டது. 2012ல் துவங்கவிருக்கும் இப்படத்திற்கு முன்பாகவே முருகதாஸுடன் ஒரு படம் செய்யப்போவதாக செய்திகள் இருந்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க, சீமானுடன் பகலவன் படத்தை செய்வது எப்போது என்பதுதான் பலருடைய‌ கேள்வியாக இருக்கிறது. அதற்கு விசயம் அறிந்தவர்களின் பதில் "அனேகமாக சீமான் விஜய் இணையும் 'பகலவன்' ட்ராப்" என்பதுதான். ஆனால் விஜய் தரப்பிலோ சீமான் தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை

வேட்டைக்காரன் பாட்டு வேலாயுதத்தில்? விஜய் எடுக்கப் போகும் முடிவு..


வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இம்மாதம் 15 ந் தேதி நடைபெறக் கூடும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குறுந்தகட்டில் சேர்க்க வேண்டிய Velayudhamஒரு பாடல் பற்றிய முடிவையே இன்னும் எடுக்காமல் இருக்கிறார்களாம். ஒன்றுக்கு மூன்று பாடல்களை போட்டுக் கொடுத்துவிட்ட விஜய் ஆன்ட்டனி இதில் எதை விஜய் தேர்வு செய்யப் போகிறார் என்று விரல் நகத்தை கடித்தபடி காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் பாடல்களை விஜய்யிடம் காட்டி, அவர் எதை முடிவு செய்கிறாரோ அதைதான் படத்தில் பயன்படுத்தியும் வருகிறார் இயக்குனரான ஜெயம் ராஜாவும். இதுவரை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படங்களில் அந்த முடிவு அவர் கையில்தான் இருக்கும். இது பெரிய ஸ்டார் படமல்லவா? அதனால்தான் முடிவை விஜய்யிடம் ஒப்படைத்துவிட்டு ரவியும் சைலண்ட்டாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்.
இதுவா என்று குழம்பிய விஜய், இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனியை அழைத்து வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலை செலக்ட் பண்ணி யூஸ் பண்ணாம வச்சுருக்கோமே, அதை இந்த படத்தில் சேர்த்துக்கலாமா என்று ஆலோசித்தாராம்.
அதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ சீக்கிரம் ஸ்கிரீனை திறந்து ஒளியை பாய்ச்சுங்ணா...