Friday, August 9, 2013

வேளாங்கண்ணியில் விஜய் சிறப்பு பிரார்த்தனை - திருப்பலி!

வேளாங்கண்ணியில் விஜய் சிறப்பு பிரார்த்தனை - திருப்பலி!தலைவா படம் இன்று ரிலீசாகாத நிலையில், நாகப்பட்டினம் சென்றுள்ள விஜய், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை நடத்துகிறார். அவருக்காக திருப்பலி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அந்த மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் செய்துள்ளது. 

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது, தமிழகம் தவிர. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பையிலும் படம் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் அண்ணா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 

ஆனால் தமிழகத்தில் மட்டும் எங்கும் இந்தப் படம் திரையிடப்படவில்லை. 

எப்படியாவது படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் கொடநாட்டுக்கே போய் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 

இந்த நிலையில் கோவையில் நேற்று இரவு தங்கிய விஜய், பின் அங்கிருந்து நாகப்பட்டினத்துக்கு வந்தார். இன்று மாலை அவர் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற மேரி மாதாவின் தேவாலயத்துக்குச் செல்கிறார். 

தேவாலயத்தில் சிறப்புப் பிராத்தனை மற்றும் திருப்பலிக்கு விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் பங்கேற்று பிரார்த்தனை நடத்துகிறார் விஜய்.

Thursday, August 8, 2013

தலைவா... ஒரு வாசகரின் விமர்சனம்!

இயக்குநர் விஜய், நடிகர் விஜய் இருவருக்குமே சொந்த சரக்கில் நம்பிக்கை இல்லை என்பதற்கு இன்னொரு சான்று தலைவா

இந்த முறை தெலுங்கு, ஆங்கிலப் படங்கள் எதிலும் கைவைக்காமல், உள்ளூர் க்ளாசிக்குகளான நாயகன், தேவர் மகனே போதும் என முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் ஜாலியாக டான்ஸ் குழு நடத்தும் விஜய், தன் அப்பா சத்யராஜை சில சமூக விரோதிகள் கொன்றுவிட, மும்பை திரும்புகிறார். தந்தையின் இடத்தில் இருந்து மக்களுக்கு நல்லது செய்கிறார். முட்டுக் கட்டையாய் வந்து நிற்கும் சதிகார சமூக விரோதிகளுடன் மோதி மக்கள் தலைவனாகிறார்.

இதைத்தான் பாட்டு, சண்டை, காமெடி என கதம்பமாக்கி கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு ஜவ்வாய் இழுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். 

‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ்
விஜய்யின் நடிப்பு என்று தனியாகக் குறிப்பிட ஒன்றுமில்லை. அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஆனால் அவர் பல்லைக் கடித்துக் கொண்டு பஞ்ச் விடுவதிலும், வில்லன்களுக்கு அறிவுரை சொல்வதும்தான் ரொம்ப போரடிக்கிறது. நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் வழக்கம்போல அசத்தியிருக்கிறார்

ஹீரோயின் அமலா பாலுக்கு பெரிதாக ஒரு வேலையுமில்லை படத்தில். அவரும் பார்க்க ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறார்.

சில காட்சிகளில் சந்தானம் சிரிக்க வைக்கிறார். யு ட்யூப் புகழ் சாம் ஆன்டர்சனும் இந்தப் படத்தில் காமெடி செய்திருக்கிறார். சிரிப்புதான் வரமறுக்கிறது. 


சத்யராஜுக்கு முக்கியமான பாத்திரம்தான். ஆனால் அவரது பாத்திரம், அவரது காஸ்ட்யூம் எல்லாமே ஏற்கெனவே அமிதாப் நடித்த சர்க்கார் படத்தை நினைவூட்டுகிறது. 

வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலும் அதற்கான நடனமும் கவர்கின்றன. மற்ற பாடல்களும் ஓகே ரகம்தான். ஆனால் பின்னணி இசை காட்சிகளை இன்னும் டம்மியாக்கும் அளவுக்குதான் உள்ளது.

 படத்தின் பெரிய பலம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. 

உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரை பார்த்தாலும் அவற்றை உல்டா பண்ணுவதுதான் தன் வேலை என்பதில் தெளிவாக இருக்கிறார் இயக்குநர் விஜய். அது எல்லா நேரத்திலும் கை கொடுக்காதல்லவா! 

என்னுடைய ரேட்டிங்.... 2/5. 

குறிப்பு: 

கனடாவில் தலைவா படம் பார்த்த  
வாசகர் அனுப்பியுள்ள விமர்சனம் இது. படம் தமிழ்நாட்டில் ரிலீசான பிறகு நமது விமர்சனம் வெளியாகும்.



தலைவா ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீஸ் சோதனை

நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா" படம் வெளியாக உள்ள சென்னை மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா" படம் வரும் 9ஆம் தேதி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் 2000 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் காம்ப்ளக்ஸ் உள்ள ஐநாக்ஸ் தியேட்டருக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில், "தலைவா" படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் தியேட்டரில் குண்டு வெடிக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.

ரிசர்வேசன் நிறுத்தம் "

தலைவா" படத்துக்கு இன்று டிக்கெட் முன்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெடி குண்டு மிரட்டல் காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வெடிகுண்டு சோதனை

 இது குறித்து, தியேட்டர் மானேஜர் விக்னேஷ் மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், போலீஸார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை மேற்கொண்டனர்.

9 தியேட்டர்களுக்கு 

இதேபோல சென்னையில் தலைவா படம் ரிலீசாக உள்ள வண்ணாரப்பேட்டை மகாராணி, புரசைவாக்கம் அபிராமி மெகா மால், சத்யம், தேவி, மாயாஜால், பாரத், ஜி.வி.ஆர்., ஏ.ஜி.எஸ். ஆகிய தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.



நேரிலும் மிரட்டல்

 சில தியேட்டர்களுக்கு போன் மூலமும், சில தியேட்டர்களுக்கு காரில் வந்த சிலரும் மிரட்டல் விடுத்ததாக போலீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு 

வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள 9 தியேட்டர்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைவரின் கை பைகளும் சோதனை செய்யப்படுகின்றன. அதன்பின்னரே காம்ப்ளக்ஸ்க்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்களும், தியேட்டர் அதிபர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த தலைவா பேனர்கள் அகற்றம்

சென்னை முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் தலைவா பட பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகளை நேற்று முதல் போலீஸ் உதவியுடன் அகற்றி வருகின்றனர் மாநகராட்சி பணியாளர்கள். 

விஜய் நடிக்கும் தலைவா படம் இன்று ரம்ஜான் ஸ்பெஷலாக வரவிருந்தது. ஆனால் அரசியல் காரணங்களால் படம் வெளிவரவில்லை. படத்துக்கு இன்னும் வரிவிலக்குச் சான்றிதழ் கிடைக்கவில்லை. தியேட்டர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை என்பதால் யாரும் படத்தை வெளியிட விரும்பவில்லை.




 ஆனால் உலகில் வழக்கமாக தமிழ்ப் படங்கள் வெளியாகும் நாடுகளில் தலைவா வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தலைவா படத்துக்காக தனியார் இடங்களில் அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் பெரிய அளவில் கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இவற்றை வைக்க மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்







இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் தலை படம் தொடர்பான அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன. போலீஸ் துணையுடன் மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.


கொடநாட்டில் முதல்வரின் இணைச் செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம் - இயக்குநர் விஜய் பேட்டி

கொடநாட்டில் முதல்வரின் இணைச் செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம் - இயக்குநர் விஜய் பேட்டிதலைவா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் னழ முதல்வரிடம் மனு கொடுத்திருப்பதாக இயக்குநர் விஜய் தெரிவித்தார். 

நடிகர் விஜய், மற்றும் தலைவா படத்தின் இயக்குநர் விஜய் ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்காக நீலகிரி மாவட்டம் கொடநாடு சென்றனர். 

முன் அனுமதி பெறாமல் இருவரும் சென்றதால் முதல்வரைச் சந்திக்க இருவரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. உடன் எஸ்ஏ சந்திரசேகரனும் அவர்களின் மேனேஜர் பிடி செல்வகுமாரும் சென்றனர். 

முதல் செக்போஸ்டிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், முதல்வரின் இணைச்செயலரை மட்டுமே அவர்களால் சந்திக்க முடிந்தது. அவரிடம் தலைவா படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதற்காக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். 

பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் கிளம்பி கோவை வந்தனர். கோவை விமான நிலையத்தில் இயக்குநர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தலைவா' படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் இது தொடர்பாக முதல்வரைச் சந்தித்து புகார் மனு அளிக்க சென்றோம். மனுவை கோடநாட்டில் இருந்த முதல்வரின் இணைச்செயலரை சந்தித்து அளித்துவிட்டு திரும்பினோம். 

இன்று தலைவா படம் திட்டமிட்டபடி நிச்சயமாக வெளியிடப்படும் என்று நம்புகிறோம். ஏனெனில் வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களின் பொருளாதார பிரச்சினை இதில் அடங்கி உள்ளது. 

இதனால் நானும், நடிகர் விஜயும் கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். இந்த படத்தை தடையில்லாமல் திரையிடுவதற்கு தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இதற்காக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் மனு கொடுத்துள்ளோம்," என்றார்

‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ்

தலைவா' படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு சென்னை பெரு நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் சென்னை பெரு நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: 

மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்களின் மத்தியில் பிரபலமானவர் எஸ்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் எஸ்.எஸ்.கந்தசாமி சேட். அவர் சீதபற்பநல்லூர் கிராமத்தில் இருந்து சுதந்திரத்துக்கு முன்பதாகவே சிறு வயதில் தாராவிக்கு சென்றுவிட்டார்.‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ்
அங்கு அவர் தோல் பதனிடும் தொழிலை செய்து வந்தார். அதோடு அங்கிருந்த ஏழை- எளிய தமிழர்களுக்கு சமுதாய மற்றும் மத ரீதியான சேவைகளை செய்து வந்தார். 

எனவே தென் இந்திய ஆதிதிராவிட மாகஜன் சங் என்ற அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பதவிகளை வகித்து வந்தார். 

எஸ்.எஸ்.கே.க்கு எஸ்.கே.ராமசாமி, எஸ்.கே.பன்னீர்செல்வம், எஸ்.கே.அழகர்சாமி ஆகிய 3 மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் உண்டு. அவர்களில் பன்னீர்செல்வம் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டார். அழகர்சாமி மர்மமான முறையில் இறந்தார்.

எஸ்.கே.ராமசாமி பல்வேறு சமுதாய சேவைகளைச் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அங்குள்ள மக்களுக்காக கோவில்களை கட்டியுள்ளார். ஏழை மக்களுக்காக பள்ளிக்கூடம் கட்டியுள்ளார். மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார். 

தாராவியில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரான சீதபற்பநல்லூர் மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை எஸ்.கே.ராமசாமி செய்துள்ளார். 15.2.87 அன்று அவர் மரணமடைந்தார். அவர் செய்த சமுதாயத் தொண்டுகளுக்காக அவரை தாராவித் தலைவன் என்று மக்கள் அழைத்தனர். 

எஸ்.கே.ராமசாமியின் மகன்தான் நான். இந்த நிலையில் பத்திரிகை செய்தியை படித்தபோது, 

எனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை வரலாறைத்தான் ‘தலைவா' என்ற படத்தில் கதையாக வைத்திருப்பதாக தெரிய வந்தது. அதில், எனது தாத்தாவின் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜும், எனது தந்தையின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜயும் நடித்துள்ளனர். 

எனது தாத்தா மற்றும் தந்தை அணியும் வெள்ளை உடைபோல, தலைவா படத்தில் இவர்களும் உடை அணிந்து நடித்துள்ளனர். ஆனால் தந்தை சத்யராஜை கொலை செய்தவர்களை மகன் விஜய் தேடி கண்டுபிடித்து கொலை செய்வதுபோல் தலைவா கதை அமைக்கப்பட்டுள்ளது. எனது தந்தை அப்படியெல்லாம் யாரையும் கொலை செய்யவில்லை. எனது தாத்தாவும், தந்தையும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதுபோலவும், தாதா போலவும் ‘தலைவா' படத்தில் காட்டப்படுகிறது. இந்த படம் 9-ந் தேதி வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. ‘தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

 எனவே இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், வெளியீட்டாளர் மதன், இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

நோட்டீஸ்

 இந்த மனுவை சென்னை இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனுவுக்கு தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளர் 14-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார். 

தலைவா படத்தில் துளி கூட அரசியல் இல்லை! - விஜய்

நான் நடித்துள்ள தலைவா படம் அரசியல் படமே அல்ல, என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தலைவா படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது. படம் வருமா வராதா என்ற சூழலில் ஒரு தன்னிலை விளக்கமாக விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தலைவா படத்தில் துளி கூட அரசியல் இல்லை! - விஜய்
"தலைவா' படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்' ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல. 

யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று விஜய் கூறியுள்ளார். 

இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் தலைவா அரசியல் படம் அல்ல என்று அறிவித்துள்ளனர்.