Monday, August 26, 2013

டான்ஸ் ஹீரோக்கள் பட்டியலில் விஜய் பெயரை மறந்துவிட்டு, மழுப்பிய பிரபுதேவா

சிறப்பாக டான்ஸ் ஆடும் ஹீரோக்கள் யார், யார் என்று கேட்டபோது பிரபுதேவா விஜய்யின் பெயரை மட்டும் கூற மறந்துவிட்டார். இதையடுத்து ஒரு பஞ்ச் டயலாக்கை விட்டு மழுப்பிவிட்டார். 

ரீமேக் படங்களை எடுக்க வேண்டும் என்றால் கூப்பிடுங்கள் பிரபுவதேவாவை என்று பாலிவுட்டில் கூறுகிறார்களாம். மனிதர் அந்த அளவுக்கு ரீமேக் செய்வதில் கெட்டிக்காரராக உள்ளார். 

அவரது படங்களில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பேராவலாக உள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

டான்ஸ் ஹீரோ


 பிரபுதேவா தான் டான்ஸுக்கு பெயர் போனவர் அல்லவா. அதனால் அவரிடம் சிறப்பாக நடனமாடும் ஹீரோக்கள் யார், யார் என்று கொஞ்சம் கூறுங்களேன் என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.

விஜய்யை மறந்த பிரபு

சிறப்பாக டான்ஸ் ஆடும் ஹீரோக்கள் பட்டியலை கொடுத்த பிரபுவதேவா அதில் சிம்பு, தனுஷ் பெயரை எல்லாம் தெரிவித்தார் ஆனால் ஆட்ட நாயகன் விஜய்யின் பெயரைக் கூற மறந்துவிட்டார்.

மழுப்பல் 

விஜய்யின் பெயரை பிரபுதேவா மறந்ததால் அவரது ரசிகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் ரீமேக் மன்னனை கோபித்துக் கொண்டனர். இதையடுத்து பிரபுதேவா மழுப்பலான பதில் ஒன்றை அளித்துள்ளார்.


விஜய்க்கு எதுக்கு சர்டிபிகேட்? 

விஜய் எவ்வளவு அருமையான டான்ஸர் என்பது மக்களுக்கு தெரியும். நான் அவருக்கு சர்டிபிகேட் கொடுக்கத் தேவையில்லை. அந்த பேட்டியில் அவர் பெயரை எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை. அந்த பட்டியலில் விஜய்யின் பெயரை முதலிடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி சமாளித்தார் பிரபுதேவா.



படத்தை வாங்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுக்கிறார்: தலைவா படத் தயாரிப்பாளர் மீது புகார்

படத்தை வாங்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுக்கிறார்: தலைவா படத் தயாரிப்பாளர் மீது புகார்தலைவா படத் தயாரிப்பாளர் தன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக இயக்குனர் ரமேஷ் செல்வன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது இயக்குனர் ரமேஷ் செல்வன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,

நான் உளவுத்துறை, ஜனனம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது சத்யராஜ் கதாநாயகனாக வைத்து ‘கலவரம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து, தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை இரண்டு வாரங்களுக்கு முன் நேரில் அழைத்து பேசினார். அப்போது எங்களுடைய தலைவா படத்தின் பிரச்னையில் நாளை முடிவு தெரிந்துவிடும். தெரிந்ததும் தலைவா படத்தை உடனே வெளியிடுகிறோம். உங்களுடைய படம் கலவரம் வெளியிட்டால் எனது தலைவா படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது. 

எனவே நானே உங்களுடைய படத்தினை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன். ஒப்பந்தம் தயார் செய்து கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார். அதன்படி நேற்று ஒப்பந்தத்தோடு சந்திரபிரகாஷ் ஜெயினை சந்திக்க சென்றோம். அதற்கு அவர் எங்களை சந்திக்க மறுத்ததுடன், எங்களை தாழ்த்தியும் அவமானப்படுத்தியது மட்டுமில்லாது உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி படத்தை வாங்க மறுத்துவிட்டார். படத்தை வெளியிடாததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நானும் எனது தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் தற்கொலை செய்து செள்ளுவதை தவிர வேறு வழியில்லை. எனவே இந்த பிரச்னையில் போலீசார் தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சந்திரபிரகாஷ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Sunday, August 25, 2013

விஜய், முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி 2 வருதாங்கணா?

விஜய், ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் இணையும் படம் துப்பாக்கி இரண்டாம் பாகமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

விஜய் ஏ.ஆர். முருகதாஸின் துப்பாக்கி படத்தில் நடித்தார். இதையடுத்து இந்த கூட்டணி மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்றவிருக்கிறது. துப்பாக்கியை அடுத்து விஜய் தலைவா, ஜில்லா படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 

அதில் தலைவா படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 20ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆனது.

ஜில்லா

நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. துப்பாக்கியை அடுத்து இந்த படத்தில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

அதிரடி 

ஜில்லாவை முடித்த உடன் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிரடி என்று பெயர் வைத்ததாக தகவல்கள் வந்தன. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.


துப்பாக்கி 2? 

விஜய், முருகதாஸ் மீண்டும் சேர்ந்து பணியாற்றும் படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமில்லை என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமந்தா 

விஜய்க்கு ஜோடியாக முருகதாஸின் படத்தில் சமந்தா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை

அட, விஜய்க்கு கல்யாணமாகி 14 வருஷமாயிடுச்சா?

விஜய், சங்கீதா தம்பதி இன்று தங்களது 14வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். 

இளையதளபதி விஜய் தனது இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். அவரது பெற்றோர் அவரை டாக்டராக்க விரும்பினார்கள். ஆனால் அவர் நடிகராகிவிட்டார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். 

அவருக்கு தமிழகத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

25-8-1999 

விஜய் தனது ரசிகையான இலங்கை தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மணந்தார்.


ஜேசன் சஞ்சய் 

திருமணமான மறு ஆண்டு அதாவது 2000த்தில் விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜேசன் சஞ்சய் என்று பெயர் வைத்தனர்.


திவ்யா சாஷா

 2005ம் ஆண்டு விஜய்யின் மனைவி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். விஜய் தனது செல்ல மகளுக்கு திவ்யா சாஷா என்று பெயர் வைத்தார்.


வேட்டைக்காரன் 

வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலில் சில ஸ்டெப்ஸ் போட்டிருப்பார் ஜேசன் சஞ்சய்.

டோணி மாதிரி 

ஜேசனுக்கு கேப்டன் டோணி போன்று பெரிய கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்று ஆசையாம். அதனால் கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறாராம்.


மகளை காட்டவே இல்லையே 

விஜய் தனது மகனை படத்தில் ஆட வைத்தார், ஐபிஎல் போட்டிகளுக்கு அழைத்து வந்தார். ஆனால் மகளை மட்டும் இன்னும் காட்டவில்லையே.

14வது திருமண நாள் 

விஜய், சங்கீதா தம்பதி இன்று தங்களின் 14வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.

நீங்களும் வாழ்த்துங்களேன்

 இளையதளபதி விஜய்-சங்கீதா தம்பதிக்கு நீங்களும் வாழ்த்து தெரிவிக்கலாமே!

Saturday, August 24, 2013

விஜய் ட்விட்டரில் இல்லை... அந்த அறிக்கை எப்படி வந்ததென்றும் தெரியவில்லை! - விஜய் மேனேஜர்

விஜய் ட்விட்டரில் இல்லை... அந்த அறிக்கை எப்படி வந்ததென்றும் தெரியவில்லை! - விஜய் மேனேஜர்விஜய் ட்விட்டரில் இல்லை. அவர் பெயரில் வந்த அறிக்கை யார் வெளியிட்டதென்றும் தெரியவில்லை என்று விஜய்யின் மேலாளர் தெரிவித்துள்ளார். 

அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தை கலைப்பேன் என்றும் நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக அவர் பெயரில் ட்விட்டரில் அறிக்கை வந்துள்ளது. 

விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அவற்றை நிர்வகித்து வருபவர் எஸ்ஏ சந்திரசேகரன்தான். 

சமீபத்தில் மீனப்பாக்கம் விமான நிலையம் எதிரில் ரசிகர் மன்ற மாநாடு நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க செய்யப்பட்ட ஏற்பாடு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 

விஜய் பிறந்த நாள் விழாவைக் கூட வெளிப்படையாகக் கொண்டாடவில்லை. அதைத் தொடர்ந்து வந்த தலைவா படப் பிரச்சினையில் விஜய் கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். திரையுலகமும் அவருக்குக் கைக் கொடுக்கவில்லை. 

ஒரு வழியாக படம் வெளியான பிறகு, "நான் அரசியலில் ஈடுபடமாட்டேன்" என்ற விஜய் அறிக்கை வெளியானது. 

"எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை எழுத வேண்டாம். என் வேண்டுகோளையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைப்பேன். ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ வேறு யாரோ ரசிகர் மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுகுறித்து நேற்று விஜய்யின் மக்கள் தொடர்பாளர் மற்றும் மேனேஜர் பி.டி.செல்வகுமாரிடம் கேட்டபோது, எனக்குத் தெரியாதே என்று கூறிவிட்டார். இன்று மீண்டும் தொடர்பு கொண்டபோது, "விஜய் ட்விட்டரில் இல்லை. நானும் எந்த சமூக வலைத் தளத்திலும் இல்லை. விஜய் பெயரில் இந்தச் செய்தி எப்படி வெளியானதென்று தெரியவில்லை. யாரும் இதை நம்ப வேண்டாம்,' என்றார்.

Friday, August 23, 2013

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை... ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைப்பு - நடிகர் விஜய்

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை... ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைப்பு  - நடிகர் விஜய்எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. மீறி என் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தைக் கலைத்துவிடுவேன், என்று விஜய் அறிவித்துள்ளார். 

இனி ரசிகர் மன்ற விவகாரங்களில் தன் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் ஈடுபடமாட்டார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் தன் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதற்கென தனி கொடியையும் நயன்தாராவை வைத்து வெளியிட்டார். 

தொடர்ந்து ஆங்காங்கே நிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இலவசத் திருமண நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். 

திடீரென ஒரு நாள் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்துவிட்டு வந்து பிரஸ் மீட் வைத்து அறிவித்தார். ராகுல் காந்தியே தன்னை அழைத்ததாகக் கூறினார். ஆனால் ராகுல் காந்தியோ தான் யாரையும் அழைக்கவில்லை என்றும், அப்பாயின்ட்மென்ட் கேட்டு வந்ததால் விஜய்யைச் சந்தித்தேன் என்றும் கூறினார். 

தொடர்ந்து காவலன் படம் வெளியீட்டுக்கு அப்போதைய ஆளும்கட்சி திமுக முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறி பேட்டிகள் கொடுத்த விஜய், திடீரென ஒரு திருமணத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவைச் சந்தித்து வணக்கம் வைத்தார். தொடர்ந்து தேர்தலின்போது அதிமுகவை ஆதரிப்பதாகக் கூறினார். போயஸ் தோட்டத்துக்குப் போய் ஜெயலலிதாவை தன் தந்தையுடன் சந்தித்தார். 

அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே.எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நண்பன், துப்பாக்கி என இரு படங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகி, வசூலையும் கொடுத்தன. 

இந்த நேரத்தில் விஜய் பெரிய அளவில் அரசியலில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சுகள் கிளம்பின. அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் போகும் இடமெல்லாம் அப்படித்தான் பேசி வந்தார். ரசிகர் மன்ற விளம்பரங்களில் ஒரு பக்கம் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு புரட்சித் தலைவி அம்மா என்று குறிப்பிட்டிருந்த நிர்வாகிகள், அதற்கு எதிர்ப்பக்கம் எஸ் ஏ சந்திரசேகரன் படத்தைப் போட்டு புரட்சி இயக்குநர் அப்பா என குறிப்பிட்டிருந்தார்கள். 

இது அதிமுகவினரை மட்டுமல்ல, பார்த்த அனைவரையுமே முகம் சுழிக்க வைத்தது. நான் அண்ணாவைப் போன்றவன்.. என் மகன் எம்ஜிஆரைப் போன்ற ஆற்றல் மிக்கவன் என்று ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார் எஸ்ஏ சந்திரசேகரன். 

இந்த நேரத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தலைவா என்று தலைப்பிட்டு, அதற்குக் கீழே தலைமை ஏற்கும் நேரம் இது என ஆங்கில வாசகம் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் பாத்திரங்களில், விஜய்யின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு பெயர் அண்ணா. அண்ணாவுக்குப் பிறகு விஜய் தலைமை ஏற்க வருவதுபோல காட்சிகள் வசனங்கள் வைத்திருந்தனர். 

இந்தப் படம் வெளியாக பட்ட பாடுகள் எல்லாம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். 

இந்த நிலையில்தான் நேற்று விஜய் திடீரென்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், "அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. தயவுசெய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை போடவேண்டாம். 

அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மன்றங்களை கலைக்கக்கூட தயங்க மாட்டேன். 

இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ, வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிடமாட்டார்கள்". -

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு எப்போதும் www.vijeenthiran.blogspot.com


அடுத்தது 'அதிரடி' எல்லாம் இல்லீங்கணா: விஜய்

அடுத்தது 'அதிரடி' எல்லாம் இல்லீங்கணா: விஜய்ஜில்லா படத்தை அடுத்து தான் நடிக்கும் படத்தின் பெயர் அதிரடி இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார். 

விஜய்யின் தலைவா படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 20ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆனது. விஜய் தற்போது நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் சேர்ந்து ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். 

படத்தில் விஜய் மதுரைக்கார தம்பியாக வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிரடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இது குறித்து விஜய் கூறுகையில், 

நான் ஜில்லாவை முடித்துவிட்டு முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மை. ஆனால் படத்தின் தலைப்பு அதிரடி இல்லை. அது வெறும் வதந்தி தான். படத் தலைப்பை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.