Thursday, September 5, 2013

விஜய்யின் ஜில்லாவில் 'அது' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர்

ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவீதம் கூட இருக்காது என்று இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார். 

விஜய்யின் தலைவா படம் பட்டபாட்டை பார்த்து ஜில்லாவில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி நீக்கிவிட்டார். மேலும் தனது படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களே கூடாது என்று கூறிவிட்டார்
.
விஜய்யின் ஜில்லாவில் 'அது' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர்

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் நேசன் கூறுகையில், 

ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவீதம் கூட இருக்காது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய திரைக்கதை அப்படியே தான் உள்ளது என்றார். 

ஜில்லா என்ற தலைப்பை விஜய்யிடம் நேசன் தெரிவித்ததுமே அவர் குஷியாகி இதுவே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம். முன்னதாக நேசன் விஜய்யின் வேலாயுதம் படத்தில் துணை இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்கும் சந்தானம்

சந்தானம் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கவிருக்கிறாராம். 

இன்றைய தேதியில் அதிகம் கிராக்கி உள்ள காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். சந்தானம் மீது கோலிவுட் ஹீரோக்கள் பலர் கடுப்பில் உள்ளார்களாம். நாம் ஒரு படத்தில் சில மாதங்கள் நடித்து வாங்கும் சம்பளத்தை மனிதர் 10 நாட்கள் நடித்து வாங்கிவிடுகிறாரே என்று ஹீரோக்கள் காட்டமாக உள்ளார்களாம். 

இப்பொழுது அவர்கள் வயிறு ரியும்படி சந்தானம் ஒன்றை செய்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை ரூ.2 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குகிறாராம். தற்போது கோலிவுட்டில் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது.
விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்கும் சந்தானம்

முன்பு பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஆர்டர் கொடுத்தபோது அதை ஓட்ட உங்களுக்கு தகுதி இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துவிட்டது. ஆனால் சந்தானம் தமிழக மக்களை சிரிக்க வைக்கிறார் என்ற தகுதியை வைத்து அவருக்கு காரை விற்கிறதாம். 

தமிழகத்தில் ரூ.2 கோடிக்கு கார் வாங்கும் ஒரே காமெடி நடிகர் சந்தானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்காக உதவி இயக்குநரின் கதையைச் சுட்டாரா ஏஆர் முருகதாஸ்?

விஜய்க்காக உதவி இயக்குநரின் கதையைச் சுட்டாரா ஏஆர் முருகதாஸ்?விஜய்யை வைத்து ஏற்கெனவே இயக்கிய துப்பாக்கி மற்றும் அடுத்து இயக்கப் போகும் படத்துக்கான கதையை தன் உதவி இயக்குநரிடமிருந்தே சுட்டுவிட்டார் ஏ ஆர் முருகதாஸ் என்ற பரபர குற்றச்சாட்டு கோலிவுட்டில் உலாவருகிறது. 

விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் சமீபத்தில் எடுத்த துப்பாக்கி, அவரது உதவி இயக்குநர் ஒருவரின் கதையாம். தான் முதல் முறையாக இயக்கும் படத்தின் கதை இதுதான் என்று அந்த உதவி இயக்குநர் முருகதாசிடம் கூறியிருந்தாராம். 

ஆனால் அவரால் சொன்னபடி படம் இயக்க முடியாமல் போக, அந்தக் கதைத்தான் துப்பாக்கியாக சுட்டாராம் ஏஆர் முருகதாஸ்.

அடுத்து ஆஸ்கர் பிலிம்சுக்காக விஜய்யை வைத்து புதுப்படம் இயக்கப் போகிறார் முருகதாஸ். இந்தப் படத்துக்கு கதை தேடிக் கொண்டிருந்தபோது.. இன்னொரு உதவி இயக்குநர் வந்திருக்கிறார். 'அண்ணே இது நான் இயக்கும் முதல் படக் கதை' என முருகதாசிடம் சீன் வாரியாக சொல்ல, 'அடடே அருமையா இருக்கேப்பா' என சொல்லி அனுப்பி வைத்தாராம். அடுத்த ஒரு மாதத்தில் விஜய் படத்தின் கதை, 

திரைக்கதையை தயார் செய்யும் வேலையில் மும்முரமாகிவிட்டார் முருகதாஸ். அதை தனது புதிய உதிவியாளர்களுடன் டிஸ்கஸ் செய்திருக்கிறார். அவர்களில் ஒரு பழைய உதவியாளருக்கு நெருங்கிய நண்பர். அவர் போய், "உன் கதையைத்தான் அடுத்து விஜய் படத்துக்கு சுட்டுவிட்டார் நம்ம டைரக்டர்," என்று போட்டுக் கொடுக்க, கடுப்பாகிப் போன பழைய உதவி, முருகதாஸிடம் நியாயம் கேட்டிக்கிறார்.

. "அதுவாப்பா... நீ கதை சொல்லிட்டே. ஆனா படம் பண்ற மாதிரி தெரியல. அதான் நாம வச்சிக்கலாம், உன் பெயரைப் போட்டுடலாம்னு நெனச்சேன்," என சமாளித்து அனுப்பினாராம் முருகதாஸ். 

இப்போது புதுக் கதையை ரெடி பண்ணுவதில் பிஸியாக இருக்கிறாராம் முருகதாஸ், உதவியாளர்களை கடுமையாக திட்டியபடி! 

உடனடி செய்திகளுக்கு எப்போதும் vijeenthiran.blogspot.com

Wednesday, September 4, 2013

தலைவா பிரச்சினை... விஜய் அரசியல்.. முக ஸ்டாலின் கமெண்ட்ஸ்!

விஸ்வரூபம், தலைவா படப் பிரச்சினைகள் மற்றும் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தப் பட பிரச்சினைகளுக்கு முதல்வரின் ஈகோதான் காரணம் என்றும் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் அவர் கருத்து தெரிவித்துளளார்.

விஸ்வரூபம், தலைவா சிக்கல்கள்... 

ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "விஸ்வரூபம்', 'தலைவா' பட சிக்கல் குறித்த கேள்விக்கு, "கலைத் துறையில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவுக்கு எதிராக ஜெயலலிதா இருப்பார் என்று நான் கருதவில்லை," என்று கூறியிருந்தார்.

தன்னை மிஞ்சி யாரும்... 

தொடர்ந்து அவர் கூறுகையில், "ஆனால், 'விஸ்வரூபம்' எடுப்பவர்களையும், 'தலைவராக'க் கருதிக்கொள்பவர்களையும் அடங்கிப் போகச் செய்ய வேண்டும்; தலைவணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கையாண்ட 'அஸ்திரம்' அது. 'எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பலன் அடைகிறார்கள். நீ மட்டும் பணியாதிருப்பதால், உனக்கு அது என்ன லாபமா?' என்று ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனிடம் கேட்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. தன்னை மிஞ்சி யாரும் அரசியல் நடத்தக் கூடாது என்று நினைக்கும் ஜெயலலிதா, இப்படிச் செயல்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை!'' என்று கருத்து கூறியுள்ளார்

விஜய் அரசியல் 

''நடிகர் விஜய், அரசியலில் ஈடுபட்டால் வரவேற்பீர்களா?'' என்ற மற்றொரு கேள்விக்கு, "நடிகர்கள் மட்டுமல்ல, வேறு எந்தத் துறையில் இருப்பவர்களும் பொதுப்பணியில் நாட்டம் கொண்டு அரசியலுக்கு வரலாம். வரவேற்போம்.இது ஜனநாயக நாடு; இன்னின்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லைக்கோடு போட முடியாது!,'' என்றும் அவர் கூறியுள்ளார்


மரியான் 

சமீபத்தில் தான் பார்த்ததில் படித்த படம் தனுஷ் நடித்த மரியான் என்றும் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

வீரம் பொங்கலுக்கு ஆனால் விஜய்யின் ஜில்லா இல்லை

வீரம் பொங்கலுக்கு ஆனால் விஜய்யின் ஜில்லா இல்லைவிஜய்யின் ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸாகாதாம். 

நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அஜீத்தின் வீரம் பொங்கல் அன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜில்லாவின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளதாம். 

அஜீத், விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸானால் திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கலாகிவிடும் என்பதால் ஜில்லா ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜில்லா பட வேலைகளை பொங்கலுக்குள் முடிப்பது கடினம் என்பதால் தான் இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது. 

ஜில்லா பொங்கலுக்கு பிறகு ஒரு தேதியில் வெளியிடப்படுமாம். ஜில்லாவின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 9ம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. அதே தினத்தில் கோச்சடையான் டீஸரும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தீபாவளியும், பொங்கலும் அஜீத் ரசிகர்களுக்கு குஷியான பண்டிகைகளாகிவிட்டது.


Sunday, September 1, 2013

'ஜில்லா'வில் விஜய் ரொம்பவே ஹேன்ட்சமாக வருகிறாராம்

'ஜில்லா'வில் விஜய் ரொம்பவே ஹேன்ட்சமாக வருகிறாராம்ஜில்லா படத்தில் விஜய் மிகவும் அழகாக இருப்பாராம். 

ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் ஜில்லா. தலைவா பிரச்சனைகளால் கவலையில் இருந்த விஜய் தற்போது தான் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். 

இந்நிலையில் ஜில்லா படம் வெற்றியடைய நடிகர் ஜீவா பழனி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார். ஜில்லாவில் விஜய் நீங்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு மிகவும் அழகாக இருப்பார் என்று கூறப்படுகிறது. 

மதுரைக்காரனாக கெத்தாக வரும் விஜய்யின் ஜில்லா தற்போதே அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக படத்தில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் நீக்கிவிட்டார். மேலும் தன் படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களோ, யாரையாவது தாக்கிப் பேசும் வசனங்களோ இருக்கவே கூடாது என்று அவர் கறாராக தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகதாஸ் படத்தில் விஜய்க்கு ஜோடி நஸ்ரியா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். 

கேரளாவில் இருந்து வந்துள்ள நஸ்ரியா கோலிவுட்டில் படுவேகமாக வளர்ந்து வருகிறார். அம்மணி கால்ஷீட்டை சொதப்பியும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது. அதுவும் சும்மா இல்லை அனைத்தும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள். 

நஸ்ரியாவின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகள் ஆடிப் போயுள்ளார்களாம்.

நையாண்டி 


தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் நஸ்ரியா தான்.



ஜீவா 

நீ நல்லா வருவடா என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நஸ்ரியா.
கார்த்தி


 அட்டகத்தி ரஞ்சித் கார்த்தியை வைத்து ஒரு படம் எடுக்கிறார். இந்த படத்தில் கார்த்தியுடன் நஸ்ரியா ஜோடி சேர்ந்துள்ளார்.

அடுத்து விஜய்? 

விஜய் ஜில்லா படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிக்குமாறு நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.