Wednesday, September 11, 2013

அமைதிதான் என் ஆயுதம்… விஜய்

தலைவா பட பிரச்சினையின் போது நான் அமைதியாக இருந்ததுதான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். 

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சன்டிவியில் ‘தலைவா' சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 

இதில் நடிகர் விஜய், நாயகி அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விஜய் அண்ணா 


நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகைகள் அனைவருமே நடிகர் விஜயை அண்ணா என்றே கூப்பிட்டனர். உங்க சிரிப்பு பிடிக்கும், உங்க டான்ஸ் பிடிக்கும் என்று கூறியதோடு என்னென்ன பிடிக்கும், எதனால் பிடிக்கும் என்றும் கூறினர்.

அழுத ரசிகை 

விஜயை நேரடியாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் எதிர்பாரமல் சந்திக்க நேர்ந்தது ஒரு ரசிகைகக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. இதனால் அருகில் அழைத்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் விஜய்.


அமைதி ஏன்?

 தலைவா பட பிரச்சினையின் போது ஊடகங்களை சந்தித்து ஏன் பேசவில்லை என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு, அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினை எளிதாக தீரும் என்று நினைத்தேன். நான் வேகமாக பேசி, அதனால் என் ரசிகர்கள் வேகப்பட்டு பிரச்சினை பெரிதாகவேண்டாமே என்பதானாலேயே அமைதியாக இருந்ததாக கூறினார் விஜய். தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீசாக தாமதமானாலும் படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கின்றனர்.


என்ன ரேட்டிங்? 

தலைவா படத்திற்கு என்ன ரேட்டிங் கொடுப்பீர்கள் என்ற கேட்டதற்கு அதான் ரசிகர்கள், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவிட்டார்களே? நான் என்ன புதிதாக கொடுப்பது என்று பதிலுக்கு கேட்டார்.


ஜி.வி.பிரகாஷ் 

பெண் ரசிகைகள் அதிகம் கவலைப்பட்டது ஜி.பி.பிரகாஷ்க்கு இவ்ளோ சீக்கிரம் திருமணம் ஆகிவிட்டதே என்றுதான். உங்க குரல் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவ்ளோ சீக்கிரம் சைந்தவி அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களை என்று செல்லமாய் கோபப்பட்டனர்.


அமலாவின் கண்கள் 

நிகழ்ச்சியில் பேசிய அமலா அழகுத்தமிழில் ரசிகைகளின் கேள்விக்கு பதிலளித்தார். உங்களின் கண்கள் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு ரசிகை கூறியதற்கு அழகாய் வெட்கப்பட்டார். தான் நடித்த படங்களிலேயே தனக்கு பிடித்தது மைனாதான் என்றார் அமலா.

குட்டி ரசிகர்கள் 

இளம் ரசிகைகள் மட்டுமல்லாது குட்டி ரசிகைகள் கையில் ரோஜா கொடுத்து விஜயை வரவேற்ற போதும், விஜய் அண்ணா என்று அன்பாய் பதாகையை உயர்த்தி காட்டிய நேரத்திலும் நெகிழ்ந்துவிட்டார் விஜய்.

Monday, September 9, 2013

Vijay, Kajal and the Police Story

Thuppakki-Vijay-Kajal-Thuppakki-Movie-Stills-Photos

The old scoop delved into the details of Ilayathalapathy sporting khakhis for his upcoming flick with director Nesan. We later heard the grapevine abuzz about Kajal’s dream come true as a cop in ‘Jilla’. Now, we got it confirmed and the actress, in an effort not to divulge anything, simply shrugged and smiled when quizzed about this feed.
But how well accustomed is she to the role? Actually, not at all. But going from the basics, her already fit physique favoured her a great deal on this regard, as she did not have to sweat her pounds out for the trim look. Added to that, she has been part of a training programme for Independence Day parade, hosted by a Telugu channel, which has given her ample surface level knowledge on how the police force works and carries itself. Also, the actress has invested her time in watching and learning from many cop movies, to get her demeanour right. The actress us currently shooting in Palani for ‘All In All Azhagu Raja’ and will hop on to Khakhis, likely from next month.

Sunday, September 8, 2013

விஜயைத் தொடர்ந்து... மோகன்லாலுடன் இணையும் பரத்

விஜயைத் தொடர்ந்து... மோகன்லாலுடன் இணையும் பரத்ஹிந்தியில் ‘ஜாக்பாட்' படத்தைத் தொடர்ந்து, மலையாளத்தில் கோத்ரா என்ற படத்தில் நடிக்கிறார் பரத். இப்படத்தில் இவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடிக்க இருக்கிறார். 

இளைய தளாபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ஜில்லா படத்தில், அவருடன் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே நாமறிந்த விஷயம் தான். இந்நிலையில், கோத்ரா என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடிக்க இருக்கிறாராம் பரத். 

பரத் ஏற்கனவே மலையாள மக்களுக்கு அறிமுகமானவர் தான். அவர் நடிப்பில் வெளிவந்த ‘போர் த பீப்பிள்' படம் கேரளாவில் வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் கோபிகா பரத்தின் ஜோடியாக நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது மோகன்லாலுடன் நடித்து வரும் அனுபவம் குறித்து பரத் கூறுகையில், ‘இது ஒரு நல்ல அனுபவம். மோகன்லால் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் நடிக்கும் போது பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. இதன் மூலம் நடிப்புத் திறமையை இன்னும் மேம்படுத்திக் கொள்ள இயலும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Friday, September 6, 2013

விநாயகர் சதுர்த்தியில் விஜய்க்கு போட்டியாகும் விஜய்

விநாயகர் சதுர்த்தி தினத்தில் தமிழக தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக் கொண்டு விஜய் படங்களை ஒளிபரப்பாகின்றன. 

விஜய் டிவியில் துப்பாக்கி ஒளிபரப்பாக உள்ள நிலையில் கலைஞர் டிவியில் விஜய், திரிஷா நடித்த குருவி படம் ஒளிபரப்பாகிறது. 

ஜெயா டிவியில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா நடித்த வேலாயுதம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதே சமயம் சன் டிவியில் விஜய், அசின் நடித்த காவலன் படம் ஒளிபரப்பாகிறதாம்.

கலகலப்பு 


இந்த திரைப்படங்களைத் தவிர சன் டிவியில் கலகலப்பு, நான் ஈ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளதாக முன்னோட்டம் ஒளிபரப்பாகி வருகிறது.

தலைவா ஸ்பெசல் 

இதை தவிர விஜய், அமலாபால் பங்கேற்கும் ‘தலைவா' சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.

சந்தானம் கலக்கல் 

மேலும் கல்லூரி பேராசிரியராக சந்தானம் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.


கலைஞர் டிவியில் 

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கலைஞர் டிவியில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சியாக பட்டிமன்றம் ஒளிபரப்புகின்றனர். முன்னோட்டத்திலேயே நிறைய பஞ்ச் ஒளிபரப்பப்பட்டது. திரைப்படம் ரிலீசாக சென்சாரில் சர்டிபிகேட் வாங்கியது அந்தக்காலம். இப்போது கொடநாட்டில் சர்டிபிகேட் வாங்க வேண்டியிருக்கிறது என்றார் ஒரு பேச்சாளர். இதைத்தவிர ஜீ தமிழ், பாலிமர், உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன

Thursday, September 5, 2013

விஜய், ஜெயம் ரவிக்கு போன் மேல் போன் போடும் ஜெனிலியா

விஜய், ஜெயம் ரவிக்கு போன் மேல் போன் போடும் ஜெனிலியாதிருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலான ஜெனிலியா வாய்ப்பு கேட்டு தனக்கு பழக்கமான நடிகர்களுக்கு போன் போடுகிறாராம். 

ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் ஜெனிலியா. அடுத்த படத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து அவர் நடித்த ஜானே து யா ஜானே நா படம் சூப்பர் ஹிட்டானது. 

அவர் ஜெயம் ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் சூப்பர் ஹிட் படமானது. அதன் மூலம் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது. மறுபடியும் விஜய்யுடன் சேர்ந்து வேலாயுதம் படத்தில் நடித்தார். விஜய்க்கு ஜோடி இல்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கிடையே அவர் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். 

திருமணத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் அவர் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், பவன் கல்யாண், கோலிவுட்டில் விஜய், ஜெயம் ரவி ஆகியோருக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

விஜய்யின் ஜில்லாவில் 'அது' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர்

ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவீதம் கூட இருக்காது என்று இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார். 

விஜய்யின் தலைவா படம் பட்டபாட்டை பார்த்து ஜில்லாவில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி நீக்கிவிட்டார். மேலும் தனது படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களே கூடாது என்று கூறிவிட்டார்
.
விஜய்யின் ஜில்லாவில் 'அது' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர்

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் நேசன் கூறுகையில், 

ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவீதம் கூட இருக்காது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய திரைக்கதை அப்படியே தான் உள்ளது என்றார். 

ஜில்லா என்ற தலைப்பை விஜய்யிடம் நேசன் தெரிவித்ததுமே அவர் குஷியாகி இதுவே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம். முன்னதாக நேசன் விஜய்யின் வேலாயுதம் படத்தில் துணை இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்கும் சந்தானம்

சந்தானம் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கவிருக்கிறாராம். 

இன்றைய தேதியில் அதிகம் கிராக்கி உள்ள காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். சந்தானம் மீது கோலிவுட் ஹீரோக்கள் பலர் கடுப்பில் உள்ளார்களாம். நாம் ஒரு படத்தில் சில மாதங்கள் நடித்து வாங்கும் சம்பளத்தை மனிதர் 10 நாட்கள் நடித்து வாங்கிவிடுகிறாரே என்று ஹீரோக்கள் காட்டமாக உள்ளார்களாம். 

இப்பொழுது அவர்கள் வயிறு ரியும்படி சந்தானம் ஒன்றை செய்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை ரூ.2 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குகிறாராம். தற்போது கோலிவுட்டில் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது.
விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்கும் சந்தானம்

முன்பு பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஆர்டர் கொடுத்தபோது அதை ஓட்ட உங்களுக்கு தகுதி இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துவிட்டது. ஆனால் சந்தானம் தமிழக மக்களை சிரிக்க வைக்கிறார் என்ற தகுதியை வைத்து அவருக்கு காரை விற்கிறதாம். 

தமிழகத்தில் ரூ.2 கோடிக்கு கார் வாங்கும் ஒரே காமெடி நடிகர் சந்தானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.