Thursday, September 12, 2013

அரசியல் பிரவேசமா? –விஜய் பதில்



நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதும் இது வலுப்பெற்றது. விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என பேசினார்கள். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களையும் விஜய் சந்தித்தார். பொதுக் கூட்டங்களிலும் பேசினார்.
ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். கிராமங்கள் வரை மக்கள் இயக்கத்துக்கு கிளை அணிகளும் உருவாக்கப்பட்டன. கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே வெளிப்படையாக தனது அரசியல் முடிவை அறிவித்து பிரசாரங்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. அரசியல் முடிவு பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்காமலேயே இருந்தார்.
`தலைவா’ படம் மூலம் தனது அரசியல் கருத்துக்களை பகிரங்கப் படுத்துவார் என பேச்சு நிலவியது. அப்படம் திட்ட மிட்டபடி ரிலீசாகாமல் சர்ச்சைகளிலும் சிக்கியது. அதிலும் விஜய்யின் தெளிவான அரசியல் முடிவுகள் எதுவும் இல்லை. விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற விஜய்யிடம் நீங்கள் விரைவில் அரசியலுக்கு வருவீர்களா? தலைவா படத்திலும் அதைத்தான் சொல்லி இருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் `தலைவா’ படத்தில் அரசியல் பற்றி எதுவும் சொல்லவில்லை. நீங்களாகத் தான் அப்படி நினைத்து இருக்கிறீர்கள். எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று எங்கேயும் சொன்னதே இல்லை.
நான் அரசியல்வாதி இல்லை. எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தும் நான் இல்லை. நான் ஒரு நடிகன், என் முழு கவனமும் சினிமாவில் மட்டுமே இருக்கிறது என்றார்.

Wednesday, September 11, 2013

தலைவா, ஜில்லா சேட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன்: அஜீத், சூர்யா, கார்த்தியில் விஜய்தான் நம்பர் 1!

விஜய் நடித்த ஜில்லா திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பெரிய தொகை கொடுத்து சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஜய் படத்தின் ரெகார்ட்டை விஜய் படமே முறியடித்துள்ளதாம். ஜில்லா திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ரூ.18 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம் சன் டிவி. 

சேட்டிலைட் உரிம விற்பனையில் விஜய் நடித்த திரைப்படங்கள் தான் நம்பர் 1 என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


குழந்தைகளின் அண்ணா 

ரஜினிக்கு பிறகு குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் நடிகராக உள்ளார் விஜய். எனவே டிவியில் விஜய் நடித்த படங்களை ஒளிபரப்பினால் குட்டீஸ்கள் அதிகம் பார்க்க விரும்புவார்கள்.

சேட்டிலைட் உரிமம் 

விஜய் நடித்த படங்களின் சேட்டிலைட் உரிமைத்தை வாங்க சேனல்களிடையே தனி போட்டியே நிலவுகிறது. அஜீத், சூர்யா படங்களை விட விஜய்யின் படம்தான் அதிக விலைக்கு விற்பனையாகிறதாம்.

தலைவா 

தலைவா படத்தை ரூ. 15 கோடி கொடுத்து சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

ஜில்லாவுக்கு அதிகம் 

அதே சமயம் விஜய் நடித்து வெளிவர உள்ள ஜில்லா திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி ரூ.18 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.

விஜய் நம்பர் 1

 ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவன அதிபர் கே.ஈ.ஞானவேல் ராஜா நான்கு பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் சாட்டிலைட் வியாபாரம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதில் விஜய்க்கு தான் முதல் இடம் என்று கூறியுள்ளார்.


தல அஜீத் 

அஜீத் நடித்து திரைக்கு வர உள்ள வீரம் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமம் ரூ.13 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.

சூர்யா, கார்த்தி 


இதற்கு அடுத்த இடத்தில் சூர்யா, கார்த்தி நடித்த படங்கள் விற்பனையாகியுள்ளன. மேலும் கார்த்தி நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா' மற்றும் ‘பிரியாணி' படங்கள் தலா 11 ½ கோடிக்கு விலை போய்யுள்ளதாகவும் கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.






அமைதிதான் என் ஆயுதம்… விஜய்

தலைவா பட பிரச்சினையின் போது நான் அமைதியாக இருந்ததுதான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். 

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சன்டிவியில் ‘தலைவா' சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 

இதில் நடிகர் விஜய், நாயகி அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விஜய் அண்ணா 


நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகைகள் அனைவருமே நடிகர் விஜயை அண்ணா என்றே கூப்பிட்டனர். உங்க சிரிப்பு பிடிக்கும், உங்க டான்ஸ் பிடிக்கும் என்று கூறியதோடு என்னென்ன பிடிக்கும், எதனால் பிடிக்கும் என்றும் கூறினர்.

அழுத ரசிகை 

விஜயை நேரடியாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் எதிர்பாரமல் சந்திக்க நேர்ந்தது ஒரு ரசிகைகக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. இதனால் அருகில் அழைத்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் விஜய்.


அமைதி ஏன்?

 தலைவா பட பிரச்சினையின் போது ஊடகங்களை சந்தித்து ஏன் பேசவில்லை என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு, அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினை எளிதாக தீரும் என்று நினைத்தேன். நான் வேகமாக பேசி, அதனால் என் ரசிகர்கள் வேகப்பட்டு பிரச்சினை பெரிதாகவேண்டாமே என்பதானாலேயே அமைதியாக இருந்ததாக கூறினார் விஜய். தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீசாக தாமதமானாலும் படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கின்றனர்.


என்ன ரேட்டிங்? 

தலைவா படத்திற்கு என்ன ரேட்டிங் கொடுப்பீர்கள் என்ற கேட்டதற்கு அதான் ரசிகர்கள், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவிட்டார்களே? நான் என்ன புதிதாக கொடுப்பது என்று பதிலுக்கு கேட்டார்.


ஜி.வி.பிரகாஷ் 

பெண் ரசிகைகள் அதிகம் கவலைப்பட்டது ஜி.பி.பிரகாஷ்க்கு இவ்ளோ சீக்கிரம் திருமணம் ஆகிவிட்டதே என்றுதான். உங்க குரல் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவ்ளோ சீக்கிரம் சைந்தவி அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களை என்று செல்லமாய் கோபப்பட்டனர்.


அமலாவின் கண்கள் 

நிகழ்ச்சியில் பேசிய அமலா அழகுத்தமிழில் ரசிகைகளின் கேள்விக்கு பதிலளித்தார். உங்களின் கண்கள் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு ரசிகை கூறியதற்கு அழகாய் வெட்கப்பட்டார். தான் நடித்த படங்களிலேயே தனக்கு பிடித்தது மைனாதான் என்றார் அமலா.

குட்டி ரசிகர்கள் 

இளம் ரசிகைகள் மட்டுமல்லாது குட்டி ரசிகைகள் கையில் ரோஜா கொடுத்து விஜயை வரவேற்ற போதும், விஜய் அண்ணா என்று அன்பாய் பதாகையை உயர்த்தி காட்டிய நேரத்திலும் நெகிழ்ந்துவிட்டார் விஜய்.

Monday, September 9, 2013

Vijay, Kajal and the Police Story

Thuppakki-Vijay-Kajal-Thuppakki-Movie-Stills-Photos

The old scoop delved into the details of Ilayathalapathy sporting khakhis for his upcoming flick with director Nesan. We later heard the grapevine abuzz about Kajal’s dream come true as a cop in ‘Jilla’. Now, we got it confirmed and the actress, in an effort not to divulge anything, simply shrugged and smiled when quizzed about this feed.
But how well accustomed is she to the role? Actually, not at all. But going from the basics, her already fit physique favoured her a great deal on this regard, as she did not have to sweat her pounds out for the trim look. Added to that, she has been part of a training programme for Independence Day parade, hosted by a Telugu channel, which has given her ample surface level knowledge on how the police force works and carries itself. Also, the actress has invested her time in watching and learning from many cop movies, to get her demeanour right. The actress us currently shooting in Palani for ‘All In All Azhagu Raja’ and will hop on to Khakhis, likely from next month.

Sunday, September 8, 2013

விஜயைத் தொடர்ந்து... மோகன்லாலுடன் இணையும் பரத்

விஜயைத் தொடர்ந்து... மோகன்லாலுடன் இணையும் பரத்ஹிந்தியில் ‘ஜாக்பாட்' படத்தைத் தொடர்ந்து, மலையாளத்தில் கோத்ரா என்ற படத்தில் நடிக்கிறார் பரத். இப்படத்தில் இவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடிக்க இருக்கிறார். 

இளைய தளாபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ஜில்லா படத்தில், அவருடன் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே நாமறிந்த விஷயம் தான். இந்நிலையில், கோத்ரா என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடிக்க இருக்கிறாராம் பரத். 

பரத் ஏற்கனவே மலையாள மக்களுக்கு அறிமுகமானவர் தான். அவர் நடிப்பில் வெளிவந்த ‘போர் த பீப்பிள்' படம் கேரளாவில் வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் கோபிகா பரத்தின் ஜோடியாக நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது மோகன்லாலுடன் நடித்து வரும் அனுபவம் குறித்து பரத் கூறுகையில், ‘இது ஒரு நல்ல அனுபவம். மோகன்லால் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் நடிக்கும் போது பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. இதன் மூலம் நடிப்புத் திறமையை இன்னும் மேம்படுத்திக் கொள்ள இயலும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Friday, September 6, 2013

விநாயகர் சதுர்த்தியில் விஜய்க்கு போட்டியாகும் விஜய்

விநாயகர் சதுர்த்தி தினத்தில் தமிழக தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக் கொண்டு விஜய் படங்களை ஒளிபரப்பாகின்றன. 

விஜய் டிவியில் துப்பாக்கி ஒளிபரப்பாக உள்ள நிலையில் கலைஞர் டிவியில் விஜய், திரிஷா நடித்த குருவி படம் ஒளிபரப்பாகிறது. 

ஜெயா டிவியில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா நடித்த வேலாயுதம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதே சமயம் சன் டிவியில் விஜய், அசின் நடித்த காவலன் படம் ஒளிபரப்பாகிறதாம்.

கலகலப்பு 


இந்த திரைப்படங்களைத் தவிர சன் டிவியில் கலகலப்பு, நான் ஈ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளதாக முன்னோட்டம் ஒளிபரப்பாகி வருகிறது.

தலைவா ஸ்பெசல் 

இதை தவிர விஜய், அமலாபால் பங்கேற்கும் ‘தலைவா' சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.

சந்தானம் கலக்கல் 

மேலும் கல்லூரி பேராசிரியராக சந்தானம் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.


கலைஞர் டிவியில் 

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கலைஞர் டிவியில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சியாக பட்டிமன்றம் ஒளிபரப்புகின்றனர். முன்னோட்டத்திலேயே நிறைய பஞ்ச் ஒளிபரப்பப்பட்டது. திரைப்படம் ரிலீசாக சென்சாரில் சர்டிபிகேட் வாங்கியது அந்தக்காலம். இப்போது கொடநாட்டில் சர்டிபிகேட் வாங்க வேண்டியிருக்கிறது என்றார் ஒரு பேச்சாளர். இதைத்தவிர ஜீ தமிழ், பாலிமர், உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன

Thursday, September 5, 2013

விஜய், ஜெயம் ரவிக்கு போன் மேல் போன் போடும் ஜெனிலியா

விஜய், ஜெயம் ரவிக்கு போன் மேல் போன் போடும் ஜெனிலியாதிருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலான ஜெனிலியா வாய்ப்பு கேட்டு தனக்கு பழக்கமான நடிகர்களுக்கு போன் போடுகிறாராம். 

ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் ஜெனிலியா. அடுத்த படத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து அவர் நடித்த ஜானே து யா ஜானே நா படம் சூப்பர் ஹிட்டானது. 

அவர் ஜெயம் ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் சூப்பர் ஹிட் படமானது. அதன் மூலம் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது. மறுபடியும் விஜய்யுடன் சேர்ந்து வேலாயுதம் படத்தில் நடித்தார். விஜய்க்கு ஜோடி இல்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கிடையே அவர் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். 

திருமணத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் அவர் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், பவன் கல்யாண், கோலிவுட்டில் விஜய், ஜெயம் ரவி ஆகியோருக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.