Wednesday, September 18, 2013

குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி

குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி
முதல்வர் கலந்து கொள்ளும் சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டாலும் பிரச்சினை... கலந்து கொள்ளாவிட்டாலும் பிரச்சினை. எதுக்கு வம்பு என்று இமயமலைக்கு பறந்துவிட்டாராம் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரன். 

தலைவா படப் பிரச்சினையில் பெரிய அவமானத்துக்கு உள்ளானார்கள், விஜய்யும் அவர் தந்தையும். 

கொடநாடு தேடி வந்தபோதும் விஜய்யைச் சந்திக்க முடியாதென்று திருப்பி அனுப்பி விட்டார் ஜெயலலிதா. 

அந்தப் பிரச்சினைக்குப் பிறகு இப்போது சினிமா நூற்றாண்டு விழாவுக்கு வருகிறார் முதல்வர். சொல்லப் போனால் இந்த முறை பதவி ஏற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. 

இந்த நிகழ்ச்சியில் யார் யாரை அழைக்கலாம் அழைக்கக் கூடாது என பெரிய பட்டியலே தயாரித்துள்ளார்களாம். 

இதில் தனக்கும் அழைப்பு வருமா... வந்தாலும் அதை நம்பிப் போகலாமா என்றெல்லாம் விஜய்க்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். 

அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் விழாவில் கலந்து கொள்வது சரியாக வராது என்று கருதிய எஸ்ஏ சந்திரசேகரன், இரண்டு நாட்கள் முன்கூட்டியே இமயமலைக்குப் பறந்துவிட்டார். சினிமா 100 நிகழ்ச்சிகள் முடிந்து 5 நாட்கள் கழித்தே அவர் சென்னை திரும்புகிறார். 

விஜய் சென்னையில்தான் இருக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்று சொல்லவும் வழியில்லை. காரணம் 1 வாரம் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இப்போது விஜய் வேண்டுவதெல்லாம், நமக்கு அழைப்பிதழ் வராமலிருக்க வேண்டுமே என்றுதானாம்!


Monday, September 16, 2013

Thalaivaa Total Box Office Collections

Thalaivaa Total Box Office Collections


Ilayathalapthy Vijay’s Thalaivaa has made total box office collection of more than 150 crores, from its world wide collections. The movie was released world wide on August 9th expected Tamil Nadu and in Tamil Nadu it was released only on August 20.
Thalaivaa total box office collections from Chennai alone stands at 6.5 crores. On its opening day Thalaivaa collected Rs 16 crores from world wide collections and on day 2 it collected 13 crores. Thalaivaa has made very good collections in overseas as well.
As per the latest reports and Wikipedia sources Thalaivaa total box office collections stands at Rs 195 crores till date. Directed by A.L Vijay, Thalaivaa feature Vijay and Amala Paul in lead roles.

Vijay’s Thalaivaa has successfully 25 Days of its run at Tamil Nadu box office

Thalaivaa Completes 25 Days


Vijay’s Thalaivaa has successfully 25 Days of its run at Tamil Nadu box office. Thalaivaa featured Vijay and Amala Paul in lead roles.

Sunday, September 15, 2013

மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: ‘ஜில்லா’ படப்பிடிப்பு நிறுத்தம்

c1f8c2fa-3dff-4e6d-a209-5187e74973de_S_secvpf‘தலைவா’ சர்ச்சைகளைத் தாண்டி விஜய் தற்போது ‘ஜில்லா’ படத்தில் ஜாலி மூடில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ரவி மரியா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடத்த முடிவெடுத்தனர். இங்கு மோகன்லாலும், ரவி மரியாவும் மோதும் காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்.
இந்நிலையில், மோகன்லாலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் இப்படப்பிடிப்பை சற்று தள்ளி வைத்துள்ளனர். அவர் குணமாகி வந்ததும் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆனால், இயக்குனரோ கிடைத்த கால்ஷீட்டுகளை சும்மா விடக்கூடாது என்பதற்காக, இந்த நேரத்தில் சென்னையில் விஜய் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக சென்னையில் முகாமிட்டு இதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளாராம்.

போச்சே, போச்சே விஜய் படம் போச்சே: புலம்பும் நஸ்ரியா. சமந்தா ஒப்பந்தம்

விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியதை நினைத்து நஸ்ரியா புலம்புகிறாராம். 

நஸ்ரியா நசீம் கோலிவுட்டில் வந்த வேகத்தில் பிரபலமும் ஆனார், காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். அவர் ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்காஹ் மற்றும் ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் நடிக்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. 

ஆனால் இதை நஸ்ரியா மறுத்துவிட்டார். தற்போது அவர் தனுஷுடன் நையாண்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்தியுடனும் ஜோடி சேர்கிறார்.

முருகதாஸ் 

ராஜா ராணி படத்தை தயாரித்துள்ள ஏ.ஆர். முருகதாஸ் தான் அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க நஸ்ரியாவை கேட்டிருந்தாராம். அடடா விஜய் படம் கிடைக்கிறதே என்ற சந்தோஷத்தில் இருந்தார் நஸ்ரியா.

கமுக்கமாக முடித்த சமந்தா 

விஜய்யை வைத்து முருகதாஸ் படம் இயக்கும் செய்தியை அறிந்த சமந்தா சம்பந்தப்பட்டவர்களை சத்தமில்லாமல் தொடர்பு கொண்டு அந்த படத்தின் ஹீரோயின் வாய்ப்பை பெற்றுவிட்டார்.

பெரிய நடிகை 

நஸ்ரியா வளர்ந்து வரும் நடிகை. ஆனால் சமந்தா முன்னணி நடிகை. மேலும் தெலுங்கில் அவரது மார்க்கெட் சூப்பராக உள்ளதால் படத்தை ஆந்திரக் கரையோரமும் விற்றுவிடலாம் என்று நினைத்த முருகதாஸ் சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்
.


போச்சே, போச்சே 

விஜய்யுடன் ஜோடி சேரப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த நஸ்ரியாவுக்கு சமந்தா கமுக்கமாக வாய்ப்பை பெற்றது அதிர்ச்சி அளித்துள்ளதாம். இப்படி விஜய் பட வாய்ப்பு கை நழுவிவிட்டதே என்று புலம்புகிறாராம் நஸ்ரியா.

கோடிகளில் புழங்கும் விஜய் படங்களின் வியாபாரம்!

விஜய் படங்களின் வியாபாரம் கோடிகளில் நடந்து வருகிறது. அப்படி என்றால் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவாரா? 

கோலிவுட் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக குட்டீஸ்களின் மனம் கவர்ந்த நாயகன் யார் என்றால் அது விஜய் தான். நண்டு, சுண்டுகளும், கல்லூரி மாணவ, மாணவிகளும் விஜய்யை தங்கள் சொந்த அண்ணனாகவே நினைக்கின்றனர்.

 நடுவில் சில காலம் விஜய்யின் படங்கள் அவரது ரசிகர்களே பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. இதையடுத்து நண்பன் படத்தில் இருந்து விஜய்க்கு நல்ல காலம் மீண்டும் துவங்கியது. அவரது படங்களின் சாட்டிலைட் உரிமங்கள் மட்டும் பல கோடிக்கு போய்க் கொண்டிருக்கிறது.

நண்பன், துப்பாக்கி


 ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 12 கோடிக்கு போனது. இதே போல துப்பாக்கி படத்தின் சாட்டிலைட் உரிமமும் பல கோடிக்கு போனது. மேலும் இந்த இரண்டு படங்களுமே வசூலை அள்ளிக் குவித்தன. 

தலைவா 

தலைவா படத்திற்கு பிரச்சனை வந்ததும் வந்தது படத்தின் எதிர்பார்ப்பு கண்டமேனிக்கு எகிறிவிட்டது. இதையடுத்து தலைவா படம் மட்டும் ஓடவில்லை அதன் சாட்டிலை உரிமம் கூட ரூ.15 கோடிக்கு போனது. வாங்கியது வேறு யாருமில்லை சன் டிவி தான்.

ஜில்லா 

நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் ஜில்லா படத்தின் சாட்டிலை உரிமம் ரூ.18 கோடிக்கு போயுள்ளது. இது தவிர விஜய்யின் சம்பளமும் ரூ.15 கோடி ஆகியுள்ளது.

அடுத்த சூப்பர் ஸ்டாரா?

 விஜய்யின் படங்கள் தொடர்ந்து கல்லா கட்டி வருகின்றன. அவரது படத்தின் சாட்டிலைட் உரிமங்களும் பிற நடிகர்களின் படங்களை விட அதிக விலைக்கு போகிறது. அப்படி என்றால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?