Tuesday, October 15, 2013

விஜய் கேட்டதும் டேப் ரிக்கார்டருன் ஓடோடி வந்த இமான்.

விஜய்யின் ஜில்லா படத்திற்கு இசையமைப்பது குறித்து இமான் மனம் திறந்துள்ளார். 

விஜய் நடித்த தமிழன் படம் மூலம் கோலிவுட்டில் இருவர் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் பிரியங்கா சோப்ரா மற்றொருவர் இசையமைப்பாளர் டி. இமான். 

தமிழன் படத்திற்கு பிறகு இமான், விஜய் கூட்டணி பல காலம் சேரவே இல்லை. இந்நிலையில் தான் இந்த கூட்டணி ஜில்லாவில் சேர்ந்துள்ளது. இது குறித்து இமான் கூறுகையில்,

ஜில்லாவுக்கு வருகிறீர்களா? 


விஜய் சார் போன் செய்து நாம் ஜில்லாவில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றலாமா என்று கேட்டார் என்று இமான் தெரிவித்தார்.

வாய் விட்டு சிரித்த விஜய்

 அவர் கேட்ட மாத்திரத்தில் டேப் ரிக்கார்டருடன் விஜய்யை பார்க்க சென்றுவிட்டேன். என்னை பார்த்த உடன் விஜய் வாய் விட்டு சிரித்தார். தமிழன் படத்தின்போது இருந்த மாதிரியே இருக்கிறீர்கள், கொஞ்சமும் மாறவில்லை என்று விஜய் கூறினார் என்றார் இமான்.

சான்ஸ் கேட்கவில்லை


 தமிழன் படத்திற்கு பிறகு நான் விஜய்யிடம் வாய்ப்பு கேட்கவில்லை. நாங்கள் நிச்சயம் சந்திப்போம் என்று நம்பினேன். அது நடந்ததில் மகிழ்ச்சி என்று இமான் கூறினார்.

நடிக்க வருவீர்களா? 

இளம் இசையமைப்பாளர் நடிக்க வருகிறார்களே, நீங்களும் வருவீர்களா என்று கேட்டதற்கு, இமான் கூறுகையில், நல்ல இசையமைப்பாளர் என்ற அடையாளம் மட்டுமே எனக்கு வேண்டும். நான் இசையை விரும்புபவன். தொடர்ந்து நல்ல இசையை அளிக்க விரும்புகிறேன் என்றார்.

Thursday, October 10, 2013

ஜில்லாவில் அப்பா லால் தாதா, மகன் விஜய் போலீஸ்: இது எப்படி இருக்கு?

ஜில்லா படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாகவும், மோகன் லால் தாதாவாகவும் நடிக்கிறார்களாம். 

ஆர்.பி. சௌத்ரி தயாரிக்கும் படம் தான் ஜில்லா. துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், இத்தனை நாட்களாக படங்களில் இருந்து தள்ளி இருந்த பூர்ணிமா பாக்யராஜும் நடிக்கின்றனர். 

படத்தில் மோகன்லாலின் மகனாக விஜய் நடிக்கிறார்.

அப்பா தாதா, மகன் போலீஸ் 


ஜில்லாவில் மோகன் லால் தாதாவாக நடிக்கிறார். அவரது மகனாக வரும் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

கதை 

ஒரு தாதாவின் மகன் எப்படி போலீஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதையாம்.

முதல்பாதி கல, கல

படத்தின் முதல்பாதி காதல், காமெடி என்று கல, கலவென இருக்குமாம்.

2வது பாதி 

ஆக்ஷன் படத்தின் இரண்டாம் பாதி ஆக்ஷன் நிறைந்ததாகவும், பல திருப்பங்களைக் கொண்டதாகவும் இருக்குமாம்.

காஜலும் போலீஸ் தான் 

ஜில்லாவில் காஜலும் போலீஸாகத் தான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவா படத்திலும் விஜய்க்கு ஜோடியாக வந்த அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கிரி

 முன்னதாக விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த போக்கிரி படம் ஹிட்டானது. அப்போ ஜில்லா?



ரீமேக் படங்களில் நடிக்க இஷ்டமில்லை: விஜய்

Click Hereபவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அத்தாரின்டிகி தாரேதி தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க விஜய் மறுத்துவிட்டாராம். 

பவன் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படமான அத்தாரின்டிகி தாரேதி பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டுள்ளது. படம் கல்லா கட்டிய வேகத்தை பார்த்து அதை தமிழில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத்தை கோலிவுட்டைச் சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் அணுகினர். 

இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விஜய் ஆர்வமாக உள்ளதாகக் கூறப்பட்டது.

நடிக்க மறுத்த விஜய் 

அத்தாரின்டிகி தாரேதி தமிழ் ரீமேக்கில் நடிக்க விஜய்யை அணுகியுள்ளனர். ஆனால் அவரோ சாரி, நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

ரீமேக்கே வேண்டாம் 

இனி ரீமேக் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று விஜய் தெரிவித்தாராம்.

ரீமேக் தானே ராசி 

முன்னதாக விஜய் நடித்த படங்களில் ரீமேக் படங்கள் தானே அவருக்கு ஹிட் கொடுத்தன. இந்நிலையில் இந்த திடீர் முடிவு என்ன காரணம் விஜய்?

அப்போ யார்? 

விஜய் நடிக்க மறுத்ததை அடுத்து அந்த படத்தில் யார் நடித்து கல்லா கட்டப் போகிறார்களோ தெரியவில்லையே?

Wednesday, October 9, 2013

''Working with Ilayathalapathy Vijay really excites me''

Kajal Agarwal (aka) Kajal Aggarwal is currently busy opposite Karthi and Vijay
Kajal Agarwal continues to be a shining star down South and she has stormed the hearts of many youngsters thanks to her naughty charm and perfect figure. Up next for her in Tamil would be All in All Azhaguraja and Jilla, in which she is paired with the likes of Karthi and Vijay. This would be her second outing with these popular heroes. 
 
In AAA, she would be called Chitra Devi Priya and she has had a ball on the sets and literally used to die laughing on the sets everyday. She understood all the Tamil dialogues written by Director Rajesh in order to fully appreciate the comedy and feels that Santhanam and Karthi are equally crazy.
 
She feels Karthi has mastered his craft as an actor and thanks to their bonding in Naan Mahaan Alla back in 2010, their vibes in AAA were that much livelier. She is inspired by Karthi's quest for perfection while performing for his shots. 
 
In Jilla, she would be having an action-oriented role and is excited about reuniting with Vijay again after the blockbuster Thuppakki in 2012. The unit still has some portions left to shoot and they might visit Slovenia or Bulgaria to can a few songs.

What next for Vijay after Murugadoss in 2014?

Has Ilayathalapathy Vijay signed on for a film with Kavithalaya Productions?

There are some rumors floating around that Ilayathalapathy Vijay has signed on for another film with K.Balachander's Kavithalaya Productions, after he is done with his A.R.Murugadoss film in 2014. When we got in touch with sources close to Vijay, they rubbished it by saying that Vijay is solely focused on Jilla for now and the Murugadoss project after that.
 
Talks of his association with director Shankar and with Kavithalaya Productions, are just unsubstantiated rumors as of now.
 
The Murugadoss project will be funded by Ayngaran International and will feature the likes of Samantha and comedian Sathish alongside Vijay.
 
It must be noted that Vijay had done the successful Thirumalai for Kavithalaya Productions a decade back, and turned around his career big time.

Thursday, October 3, 2013

Thuppakki and two others represent Tamil Cinema in Russia

Thuppakki, Vettaiyadu Vilayadu and Aadukalam will be screened in Russia as part of their celebration

Joining India in celebrating 100 years of Indian Cinema will be Russia. The Eurasian country will host a grand film festival in December 2013 to celebrate the centenary of Indian Cinema in which land mark Indian films would be screened. Representing the Tamil industry will be three films, namely Kamal Haasan’s Vettaiyaadu Vilayaadu, directed by Gautham Menon, Dhanush’s Aadukalam, directed by Vetri Maaran and AR Murugadoss’ Thuppakki, starring Vijay.

It is also said that Kamal Haasan and Dhanush might in fact attend the grand festival along with other celebrities from the different Indian film industries.

Meanwhile, the 10th Film Festival of Tamil Nadu has kick started and it’s no surprise that the theme of this year would be 100 years of Indian Cinema. Director Vetri Maaran inaugurated the three day event.

ஷங்கர் பட ரேஞ்சில் ஜில்லாவில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி

விஜய்யின் ஜில்லா படத்தில் ஒரு சண்டை காட்சி ஷங்கரின் படம் போன்று பிரமாண்டமாக எடுக்கப்படுகிறதாம். 

விஜய், காஜர் அகர்வால் நடித்து வரும் படம் ஜில்லா. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் உள்ளார். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் படத்தில் ஒரு பிரமாண்டமான சண்டை காட்சியை படமாக்கி வருகிறார்களாம்.

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

பல கேமராக்கள் 

இந்த சண்டை காட்சியை படமாக்க பல கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறதாம்.

ஷங்கர் ரேஞ்ச்

 ஜில்லா பட சண்டை காட்சி ஷங்கர் பட ரேஞ்சுக்கு எடுக்கப்படுகிறதாம். வழக்கமாக ஷங்கர் படத்தில் தான் ஏகப்பட்ட கேமராக்கள் பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்படும்.

பல்கேரியாவுக்கு 

சண்டை காட்சி படமாக்கப்பட்ட உடன் படக்குழுவினர் அடுத்த மாதம் பல்கேரியா செல்கிறார்களாம். அங்கு இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.