Monday, August 29, 2011

வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் விஜய்!

Velayudham Audio Release மதுரை: மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த வேலாயுதம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

விழாவில் நடிகர் விஜய் 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்ïட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான உதவிகளை வழங்கினார்.

பின்னர் நடிகர் விஜய் கூட்டத்தில் இருந்து ரசிகர்-ரசிகையை தேர்ந்தெடுத்து, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி வேலாயுதம் பட ஆடியோ சிட்யை வெளியிட, அதனை தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பேசினார்கள். விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வேலாயுதம் படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி: எஸ்.ஏ. சந்திரசேகரன் அறிவிப்பு

SA Chandrasekaran மதுரை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அதற்காக அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது விஜய் ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் போட்டியிடவில்லை.

இந்நிலையில், இது குறித்து நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். நேர்மையான ஆட்சி என்பதே மக்கள் இயக்கத்தின் நோக்கம்.

மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதை விஜய் ஏற்றுள்ளார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது.

எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அடிதட்டு மக்களும் சேவை செய்யவே மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது என்றார்.

நான் ஒரு முறை முடிவு செஞ்சா... - விஜய்


Vijayநான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது, என்றார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

அந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், "மற்ற ஊர்களுக்கும் மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட, அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல குணம் கொண்டவர்கள்.

பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை உள்ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது ஏலே ஏலே என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து இருக்கும்.

இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பாவும் பேசினார்கள். ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம் கொடுத்தது மதுரை மக்கள்தான்,"

Sunday, August 28, 2011

Velayutham MP3 free download


Velayutham - Vijay Antony

Velayutham - Vijay Antony

Velayutham Tamil Movie, Velayutham Songs Free Download Music By Vijay Antony - Velayutham

Featuring : Vijay, Genelia DSouza, and Hansika Motwani

Production : Oscar Ravichandran
Starring : Vijay, Genelia DSouza, and Hansika Motwani
Director : Raja M
Lyrics : Vaali, Pa. Vijay, Kabilan, Vijay Antony & Annamalai

Rathathin Rathamay - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Haricharan, Madhumitha

Molachu Moonu - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Prasanna, Supriya Joshi

Chillax - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Karthik, Charulatha Mani

Mayam Seidhayo - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Sangeetha Rajeshwaran

Sonna Puriyadhu - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Vijay Antony, Veera Shankar

Vela Vela - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Vijay Antony, Mark

Saturday, August 27, 2011

ஒரு லட்சம் ரசிகர்களின் முன்னிலையில் ‘வேலாயுதம்’ ஆடியோ ரிலீஸ்!

ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வேலாயுதம்’ படத்தின் பாடல் வெளியீடு, நாளை மதுரையில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் திரை உலகப் பிரபலங்கள் பங்கு கொள்ளவில்லை. மாறாக விஜயில் ஒரு லட்சம் ரசிகர்கள் பங்குகொள்ளப் போகிறார்களாம். அவர்களின் முன்னிலையில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெறுமாம்.
நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தின் மாநாடு மதுரை புதூர் மைதானத்தில் நாளை (28-ந்தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் விஜய் பங்கேற்று ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்குகிறார். இதே மாநாட்டில்தான் விஜய் நடித்த வேலாயுதம் படத்தின் பாடல் சி.டி.யும் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:
“விஜய் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரள்கிறார்கள்.
ரசிகர்கள் மாநாட்டில் வேலாயுதம் பாடல் சி.டி.யை வெளியிட அப்படத்தின் இயக்குனர் ராஜா விருப்பப்பட்டார். அதன்படி ரசிகர் மற்றும் ரசிகை மூலம் பாடல் சி.டி. வெளியிடப்படும். மாநாட்டிலேயே அந்த ரசிகர்-ரசிகைகளை தேர்வு செய்வோம்.” என்றார்.

‘வேலாயுதம்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைக்காது: விஜய்


விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மொத்வானி, சந்தானம், சரண்யா மோகன் ஆகிய நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
இப்படத்தை பற்றி விஜய்யிடம் கேட்டதில், அவர் கூறியதாவது
வேலாயுதம் படத்தின் கதை பற்றி இயக்குநர் ராஜா என்னிடம் சொல்ல வந்தபோது, படத்தின் கதையை கேட்ட எனக்கு மிகவும் பிடித்து போனது. அவர் சொன்ன கதை வலிமையாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக் கொண்டேன். படம் மிகவும் அழகாக வந்திருக்கிறது.
எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கணும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு ஆசை எனக்கும் இருந்தது. அப்படிப்பட்ட படம் தான் இந்த வேலாயுதம். ரசிகர்கள் எதிர்பார்க்கிற எல்லாமே இந்த படத்தில் இருக்கிறது. வேலாயுதத்தில் ஹீரோ செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்பவும் லாஜிக்காக இருக்கும்.
படத்தில் முக்கியமான விஷயம் என்று சொன்னால் அது ரயிலில் வரும் சண்டைக்காட்சி. இப்படிப்பட்ட சண்டை காட்சியில் நடிக்க எனக்கு ரொம்ப நாளாக ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் பைட் மாஸ்டர் டாம்டேல்மரை வரவழைத்து அக்காட்சியை படமாக்கினோம். ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த சண்டைக்காட்சி பிடிக்கும்.
இந்த படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அவரைப் பற்றிக் கண்டிப்பாக இங்கே கூறவேண்டும். அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எங்களோட காம்பினேஷன் எப்படி இருந்தது என்று வேட்டைக்காரன் படத்திலேயே அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதைவிட பல மடங்கு வேலாயுதத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் படத்தில் ஐந்தாறு பாட்டு இருந்தாலும் எல்லா பாடலிலும் மெலடி மிஸ் ஆகாது. குத்துப்பாட்டு, வெஸ்டர்ன், நாட்டுப்புற பாட்டு என எல்லாவற்றிலும் சுகமான அந்த இனிமை இருக்கும். அதுதான் நீண்டகாலத்திற்கு நிலைக்கும் என்ற எண்ணம் அவருக்கு உண்டு.
ரசிகர்களாகிய உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால், படத்தின் ஆடியோ வெளிவரும் முன்னே, இணையதளங்களில் வெளிவரலாம். தயவு செய்து யாரும் திருட்டி வி.சி.டி-யை ஆதரிக்க வேண்டாம். இது என்னுடைய படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் படத்துக்கும் தான்.
மொத்தத்தில் “வேலாயுதம்” படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை குறைக்காது, கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும்.

விஜய்யை இயக்கும் விஜய்!


'பில்லா-2' படத்தை அடுத்து அஜீத் நடிக்க இருக்கும் படத்தை இயக்குனர் விஜய் தான் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின. இல்லை.. இயக்குனர் விஜய் இயக்க நடிகர் விஜய் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இப்போது விஜய்-விஜய் கூட்டணி உறுதியாகியிருக்கிறது.

நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் 'நண்பன்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம், அடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'யோஹன்' ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். இப்படங்களை முடித்தபின் விஜய்-விஜய் கூட்டணியில் படம்  துவங்கும் என்கிறது படக்குழு.

'தெய்வத்திருமகள்' படத்தைத் தொடர்ந்து விக்ரம்-இயக்குனர் விஜய் மீண்டும் இணையும் படத்தை எடுக்க இருக்கிறார்கள். அதற்குப் பிறகு விஜய்யை இயக்குவார் விஜய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.  ஏற்கனவே இயக்குனர் விஜய்யின் முந்தைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்றாலும்,  நடிகர் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு இசையமைப்பதால் மிகந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஜிவி பிரகாஷ்.