Saturday, September 17, 2011

Vijay to shoot in Srinagar


Ilayathalapathy Vijay will shake his legs in the backdrop of picturesque locales of Srinagar for 'Velayudham', as the only one song which is left to be shot will be canned in the capital city of Jammu and Kashmir.
Select members of the cast and crew of 'Velayudham' will leave for Srinagar on September 17 to shoot the number 'Molachu moonu ilai vidala...'  They will be back within a week, sources in the know tell us.
What is more interesting about this particular song is that it would have both the heroines of the film - Genelia D'Souza and Hansika Motwani - sharing screen space with Vijay. It will be choreographed by a popular dance master.
Meanwhile, director 'Jayam' Raja is upbeat about the movie's prospects in the box-office. "Velayudham will be tailor-made for the fans of Vijay. How an ordinary man becomes a super hero is the one-line that can best describe the story," he says

Wednesday, September 14, 2011

ஒரு லட்சம் பேர்.. நோ ப்ராப்ளம் ! – ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும்


விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘வேலாயுதம்’. இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.
இப்படம் குறித்து ஜெயம் ராஜா ” விஜய் சார் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்தவர். என் பாதையும் அதுதான். குழந்தைகள் மற்றும் குடும்பதினரை நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள் கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் இறுக்கமும் வந்து விட்டன.

‘வேலாயுதம்’ தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாக இது இருக்கும்.
ஜெனிலியா, ஹன்சிகா என இரு நாயகிகளுக்குமே என்மேல் கடைசி வரை ஒரு சந்தேகம் இருந்தது. படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்கிற சந்தேகம் அது. படத்தில் இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. படம் வெளியான பிறகு வகையில் இருவரும் பேசப்படுவார்கள்.
நட்சத்திரங்களின் ஒத்துழைப்பைப் போல தொழில் நுட்ப கலைஞர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து இருக்கிறார்கள்.இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘வேட்டைக்காரன்’ பாடல்களைத் தாண்டி பேசப்பட வேண்டும் என்று கடுமையாக பாடுபட்டார். அதனால் தான் அவர் போட்டுக் காட்டிய 6 மெட்டுகளும் முதல் முறையிலேயே பிடித்துப் போய் பாடலாயின. அதனால்தான் ஆடியோ விற்பனையிலும் ‘வேலாயுதம்’ சாதனை படைத்தது.
தயாரிப்பாளர் ரவிசார் பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரை மேலே போவார். பாதாளம் தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கும் ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டது. ஏன் எதற்கு என்று கேட்கவில்லைல் ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும் கேரளாவில்… அசந்து போய் விட்டேன்.
இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பொள்ளாச்சி, சென்னை, கொச்சி, லடாக், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஒரிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம்.
தமிழ் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ” என்று தெரிவித்துள்ளார்

ஜெனிலியாவா-ஹன்சிகாவா? – வோலாயுதம் படப்பிடிப்பில் மோதல்!


விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘வேலாயுதம்’ படத்தில் ஜெனிலியா – ஹன்ஸிகா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த இருவருக்கும் யார் பெரிய நட்சத்திரம், யாருக்கு படத்தில் முக்கியத்துவம் என்ற மோதல் எழுந்தததாம்.
பின்னர் ஒருவழியாக இந்த மோதலைத் தீர்த்து வைத்தார்களாம்.
வேலாயுதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். படத்தின் சிறப்புகள் குறித்து இயக்குநர் ராஜா பேட்டியளித்து வருகிறார்.
படத்தின் இரு ஹீரோயின்களின் ஈகோ போட்டி குறித்து இயக்குநர் ராஜா கூறுகையில், “ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற ‘ஈகோ’ மனப்பான்மை இருந்தது உண்மைதான். ஆனால், அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள்.
உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு, வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும்போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான்.
ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், பிரச்சினை எதுவும் இல்லை.
படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது. உச்சக்கட்ட காட்சியை கேரள மாநிலம் கொச்சியில் 15 நாட்கள் நடத்தினோம்.
ரஜினிக்கு பாட்ஷா போல…
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘பாட்ஷா’வைப்போல், கமல்ஹாசனுக்கு ‘தசாவதாரம்’ போல், விஜய்க்கு `வேலாயுதம்’ படம் அமையும்,” என்றார் ராஜா.
அமைஞ்சா சரி!

ஏஆர் முருகதாஸ் - விஜய் படம்: தொடங்கியது போட்டோ ஷூட்

விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் முதல் முதலாக இயக்கும் புதிய படத்தில், மாடல் அழகி ஏஞ்சலா ஜான்ஸன் நடிக்கக் கூடும் என முன்பே நாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது அந்த செய்தி உறுதியாகியிருக்கிறது. விஜய்யின் ஜோடியாக ஏஞ்சலாவை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ். அதுமட்டுமல்ல, விஜய் - ஏஞ்சலாவை வைத்து ஒரு போட்டோ ஷூட்டையும் நடத்தி முடித்திருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்தான் இந்த போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார். இதன் மூலம் விஜய் படத்தில் முதல் முறையாக பணியாற்றுகிறார் சந்தோஷ் சிவன் என்பது ஒரு கூடுதல் தகவல்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று தெரிகிறது

Friday, September 9, 2011

நண்பன் படத்தில் விபத்து இலியானாவுக்கு எலும்பு முறிந்தது


நண்பன் படப்பிடிப்பு முடிந்தது. பூசணிக்காய் உடைத்துவிட்டார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. (இந்த காயை உடைத்துவிட்டால் அப்புறம் ஸ்டில் போட்டோ கூடIleana in Nanban எடுப்பதற்கு யோசிப்பார்கள் என்பதெல்லாம் சென்ட்டிமென்ட்) ஆனால் இன்று வந்திருக்கும் ஒரு தகவல், அட இன்னும் முடியலையா என்று கேட்க வைக்கிறது.
வேறொன்றுமில்லை. படப்பிடிப்பில் இலியானா கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதாம். டான்ஸ் மாஸ்டர் பராஹான் இலியானாவுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தாராம் இலியானா. அவசரம் அவசரமாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாம்.
அவரை நன்கு சோதித்த மருத்துவர்கள், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சொந்த ஊரான ஐதராபாத்துக்கு சென்றுவிட்டாராம் அவர்.
அப்ப பூசணிக்கா மேட்டர்?a

Vijay's Movie News




Wednesday, September 7, 2011

விஜய் ஜோடியாக கிங் பிஷர் அழகி!

நடிகர் விஜய்யின் 'வேலாயுதம்', மற்றும் 'நண்பன்' படங்களைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குபவர் சீமானா, ஏ.ஆர்.முருகதாஸா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது டைரக்டர் முருகதாஸ் இயக்கத்தில்தான் விஜய் நடிக்கப்போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனோடு விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில், விஜய்யின் ஜோடியாக பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி கிங்பிஷர் நிறுவனத்தில் மாடலான ஏஞ்சலா ஜான்சன் என்பவரை இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படம் வரும் அக்டோபர் மாதம் தனது ஷூட்டிங்கை துவங்க இருக்கிறதாம். இந்த ஏஞ்சலா ஜான்சன் பார்ப்பதற்கு ஒரு சாயலில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயைப் போல் இருப்பாராம். இவர் ஒரு ஹிந்திப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்