Tuesday, April 16, 2013

நடிகரல்ல, டோணி மாதிரி கிரிக்கெட் வீரராக விரும்பும் விஜய் மகன்

தனது மகன் சஞ்சய் கிரிக்கெட் வீரனாக ஆசைப்படுவதால் பயிற்சியாளர் வைத்து அதற்கான பயிற்சி அளிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட திரைத்துறையில் நடிகர்களின் வாரிசுகள் அதிக அளவில் அறிமுகமாகின்றனர். திரை நட்சத்திரங்களும் தங்கள் பிள்ளைகள் தங்களைப் போன்றே நடிகராக விரும்புகின்றனர். ஆனால் விஜய் இதில் இருந்து சற்று வித்தியாசமாக உள்ளார். தனது மகன் என்னவாக விரும்புகிறாரோ அதுவாக ஆகட்டும் என்கிறார் அவர்.


ஆடணும்னு ஆசைப்பாட்டான்

 தனது மகன் சஞ்சய் டான்ஸ் ஆட வேண்டும் என்று விரும்பியதால் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாட்டில் தன்னுடன் ஆட வைத்ததாக விஜய் தெரிவித்துள்ளார்.


கிரிக்கெட் வீரராக ஆசை

 விஜய் மகனுக்கு கிரிக்கெட் வீரராக ஆசை வந்துள்ளதாம். அதனால் பயிற்சியாளர் வைத்து தன் செல்ல மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்கிறார் விஜய்.

காலேஜ் கண்டிப்பா முடிக்கணும்

 சஞ்சய் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அவர் விரும்பும் துறையில் ஈடுபட அனுமதிக்கப் போவதாக விஜய் கூறினார்.


Wednesday, March 20, 2013

விஜய் படத்தில் காஜல் அகர்வாலின் தங்கை?

img1130320026_1_1நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் ஒரு நடிகை. தங்கைக்காக அக்கா காஜல் அகர்வால் வாய்ப்பு கேட்பதாக இன்டஸ்ட்‌ரிக்குள் வதந்தி உண்டு. இந்நிலையில் இப்படியொரு செய்தி, விஜய்யின் ‌ஜில்லா படத்தில் காஜல் அகர்வாலுடன் நிஷா அகர்வாலும் நடிக்கிறார்.
‌ஜில்லாவின் ஸ்டார்காஸ்ட்தான் முதலிலேயே ஆச்ச‌ரியமாகப் பேசப்பட்டது. மணிரத்னம், கமல் என்று ஜாம்பவான்கள் விரும்பி அழைத்தால் மட்டுமே கேரள எல்லையை தாண்டும் மோகன்லால் ‌ஜில்லாவில் ஒரு படம் மட்டுமே இயக்கியிருக்கும் நேசனின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது முதல் ஆச்ச‌ரியம்.
‌ஜில்லாவில் காஜல் அகர்வால் விஜய்யின் ஜோடி. பரோட்டா சூ‌ரி, தம்பி ராமையா போன்றவர்களும் உண்டு. மகத் விஜய்யின் தம்பியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
தற்போது காஜலின் தங்கை நிஷா அகர்வாலை மகத்தின் ஜோடியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. மேலும் விடிவி கணேஷ், கோவை சரளா ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமாக படாவதி ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறாராம்.
(காமெடி படமாக இருக்குமோ?)

Wednesday, March 13, 2013

ஜில்லா எனது செல்லப் பெயர் – விஜய் பேட்டி

img1130312027_1_1நேற்று ‌ஜில்லா படத்தின் பூஜை சூப்பர்குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. படத்தை குறித்த செய்திகளை ஆர்.பி.சௌத்‌ரி முறைப்படி அறிவித்தார். பிறகு பத்தி‌ரிகையாளர்களுக்கு படம் குறித்து பேட்டியளித்தார் விஜய்.
சினிமாவில் என்னை உருவாக்கிய முக்கியமான நிறுவனம் சூப்பர்குட் ஃபிலிம்ஸ். பூவே உனக்காக, லவ் டுடே, ஷாஜகான், துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி என்று அவர்கள் பேன‌ரில் நான் நடித்த எல்லாப் படங்களுமே சூப்பர்ஹிட். எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மோகன்லாலுடன் நடிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
வேலாயுதம் படத்தின் போதே அதில் அசோசியேட்டாக இருந்த நேசன் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். கதை பவர்ஃபுல்லாக இருந்தது. சேர்ந்து பணியாற்றுவோம் என்று அப்போதே சொல்லியிருந்தேன். சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மூலம் அது இப்போது நிறைவேறியிருக்கிறது.
‌ஜில்லா என்பது ஒரு பகுதியை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் இதில் எனது நண்பர்கள் என்னை செல்லமாக கூப்பிடும் பெயராக வருகிறது. மதுரை பேக்ராப்பில் உருவாகும் படம். ஆக்சன், சென்டிமெண்ட் எல்லாம் நிறைந்த கதை. எனக்கு இது இன்னொரு கில்லியாக அமையும் என்று நம்புகிறேன்.
நேசன் முருகா என்ற படத்தை ஏற்கனவே இயக்கியிருக்கிறார் என்பது முக்கியமானது.

Tuesday, March 12, 2013

I am happy to share the screen with Mohanlal: Ilayathalapathy Vijay

imagesProducer R B Chowdhary is producing a film titled Jilla which has Vijayin the lead role under the banner Super Good Films. Kajal Agarwal is pairing with Vijay. Malayalam super star Mohanlal is donning an important role in this film.
Poornima Bhagyaraj, Thambi Ramaiah, Parotta Soori and Mahat are also starring in this film. Nesan is directing this film. Nutty Natraj is handling the camera while Imman is composing the music.
The pooja of Jilla was held today morning at R B Chowdhary’s Super Good Films office located in T Nagar. Vijay who had participated in this function spoke to the media people. He said, ” I am immensely happy because I am going to share the screen with Mohanlal. I have already acted in Poove Unakkaga, Thulladha Manamum Thullum, Love Today and Thirupachi produced by R B Chowdhary. All of them were great success. Jilla will overtake all those films.Kajal Agarwal is the heroine of this film.”
Producer R B Chowdhary while speaking said, ” Jilla is the 25th film of Super Good Films. After Thirupachi we are joining hands once again with Vijay.” Actor Jiiva also attended this function

Monday, March 11, 2013

விஜயின் ஜில்லா ஹிட் ஆயிடுமோ...?!

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ஜில்லா படம் உறுதியாக ஹிட் ஆகிவிடும் போல் இருக்கிறது. விஜய் படங்களை எத்தனையோ தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளனர். ஆனால் விஜய்க்கும் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸுக்கும் ஒரு ராசி உள்ளது. அதாவது இளைய தளபதியும், சௌத்ரியும் சேர்ந்த படங்கள் எல்லாமே ஹிட் தான். அப்படி இருக்கையில் இந்த கூட்டணி தற்போது மீண்டும் சேர்ந்துள்ளது. நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜில்லா படத்தை தயாரிப்பது வேறு யாருமல்ல சூப்பர் குட் பிலிம்ஸ் தான். அப்படி என்றால் ஜில்லாவும் ஹிட் தானா என்று கேட்கத் தோன்றுகிறது?


சூப்பர் குட் பிலிம்ஸ், விஜய் இதுவரை சேர்ந்த படங்கள் அனைத்தும் ஹிட். அப்படி என்றால் ஜில்லாவும் ஹிட்டா?

பூவே உனக்காக விக்ரமன்
 இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக படம் ஹிட் என்று அனைவருக்கும் தெரியும். அதை தயாரித்தது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

துள்ளாத மனமும் துள்ளும்
 காதலை அழகாகச் சொன்ன துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய், சிம்ரன் அருமையாக நடித்திருந்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ்.

லவ் டுடே 
லவ் டுடே படத்தில் காதல் காதல் என்று காதலி பின்னால் சுற்றி தந்தையை இழந்த பிறகு வாழ்க்கையை புரிந்து கொள்வார் விஜய். இதை தயாரித்ததும் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குடம் பிலிம்ஸே.

ஷாஜகான் 
விஜய் காதலிக்கும் பெண் வேறு ஒருவரை காதலிக்கும் படமான ஷாஜகானை தயாரித்ததும் சூப்பர் குட் பிலிம்ஸ் தான்

திருப்பாச்சி 
திருப்பாச்சியில் தங்கையை சந்தோஷப்படுத்த அவளது தோழியின் முடியை நறுக்கி வரச் சென்று மாறாக தோழியின் தாயின் முடியை நறுக்கி வருவார் விஜய். அண்ணன்-தங்கை பாசத்தை சிலிரிக்கும்படி சொன்ன திருப்பாச்சியை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது
.


தல' ரசிகரை தன் படத்திற்கு பரிந்துரைத்த விஜய்

நான் 'தல' அஜீத் குமார் ரசிகன்டா என்று கூறும் பரோட்டா சூரியை தனது ஜில்லா படத்தில் எடுக்க பரிந்துரை செய்துள்ளார் விஜய். துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய், காஜல் அகர்வால் ஜோடி சேரும் படம் ஜில்லா. இதை நேசன் இயக்குகிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது. படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தில் விஜயுடன் முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கிறார். படத்தில் விஜய் தம்பியாக மகத் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் பூர்ணிமா பாக்யராஜ்.

வேலாயுதத்தில் விஜய்யுடன் கலக்கிய சூரி 

வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார் பரோட்டா சூரி. அவர்கள் காம்பினேஷன் நன்றாக ஒர்க்கவுட் ஆனது. விஜயால் அவரும், கிராம மக்களும் படும்பாட்டை அவர் கூறுவதே தனி அழகு தான்.

ஜில்லாவில் சூரி இருக்கட்டுமே...

 'தல' ரசிகரான சூரியை தனது ஜில்லா படத்தில் நடிக்க வைக்குமாறு விஜய்யே பரிந்துரை செய்துள்ளார். அவரது பரிந்துரையின் பேரில் தான் சூரியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விஜய்யின் ஜில்லா – இன்று தொடங்கியது

img1130311032_1_1விஜய் நடிக்கும் புதிய படம் ஜில்லா இன்று காலை சூப்பர்குட் பிலிம்ஸின் அலுவலகத்தில் பூஜையுடன் தொடங்கியது.
தலைவா படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து ஜில்லா என்ற படத்தில் நேசனின் இயக்கத்தில் நடிக்கிறார் என சில மாதங்கள் முன் செய்தி வெளியானது.
நேசன் முருகா என்ற படத்தை இயக்கியவர். அதிகம் அறிமுகம் இல்லாத இயக்குனர் என்பதால் ஜில்லா படம் வதந்தி என்றே பலரும் நம்பினர்.
இந்நிலையில் மோகன்லால் ஜில்லாவில் விஜய்யுடன் நடிப்பதை உறுதி செய்தார். படத்தை தயாரிப்பவர் விஜய்யை வைத்து பல வெற்றிப்படங்களை தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி.
இன்று காலை சென்னையிலுள்ள சூப்பர்குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஜில்லாவின் தொடக்க விழா நடந்தது. விஜய், பூர்ணிமா பாக்யராஜ் ஜித்தன் ரமேஷ், ஜீவா, இசையமைப்பாளர் டி.இமான். இயக்குனர் நேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஜில்லாவுக்கு ராஜிவன் ஒளிப்பதிவு செய்கிறார், டி.இமான் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வாலும் தம்பியாக மகத்தும் நடிக்க உள்ளனர்.