Showing posts with label காவலன். Show all posts
Showing posts with label காவலன். Show all posts

Saturday, July 16, 2011

கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?

Vijay and Kalanidhi Maaranகாவலன் பட விவகாரம் தொடர்பாக சன் குழும தலைவர் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரின் மீது புகார் தர தயாராகிறார் நடிகர் விஜய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக சன் டிவி மற்றும் சன் பிக்சர்ஸுக்கு நெருக்கமாக காட்டிக் கொண்ட பெரும்பாலான சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இப்போது அப்படியே நேர் எதிராகத் திரும்பியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களில் நடித்த விஜய், காவலன் படத்தின் போது அதே சன் பிக்சர்ஸுக்கு எதிராக மாறினார்.

இந்த காவலன் படத்தை வெளியிட தொடர்ந்து சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் தடைகளை ஏற்படுத்தியதால் உரிய தேதியில் வெளியாகாமல் 3 நாள் கழித்து படம் வெளியானதாம்.

இதனால் பல கோடி வசூல் இழப்பு ஏற்பட்டதாகவும் இதற்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம் என்றும் கூறி விஜய்யே நேரடியாக கலாநிதி மாறன், சக்சேனா, அய்யப்பன் மீது புகார் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. 

ஏற்கெனவே 4 வழக்குகளில் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலாநிதி மாறன் மீது 2 மோசடி, மிரட்டல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வரும் ஜூலை 26-ம் தேதி போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகிறார்.

இந்த நிலையில் விஜய்யும் புகார் தரவிருப்பது, சன் குழுமத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

அதேநேரம் சுறா பட நஷ்டத்தை ஈடுகட்டுமாறு விஜய்க்கு எதிராக முன்பு போர்க்கொடி தூக்கிய அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் இப்போது அமைதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 14, 2011

முதல் முறையிலேயே முத்திரை பதித்த‌ விஜய்


vijay-kavalan-14-06-11
சீனாவின் ஷங்காய் நகரில், ஷாங்காய் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் 11ம் தேதி விஜய் அசின் நடித்த காவலன் படம், ஆங்கில மற்றும் சீன மொழி சப் டைட்டிலுடன் திரையிடப்பட்டது. இப்படத்தை சீன ரசிகர்கள் மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். அதுவும் படத்தின் ஆரம்ப காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தவர்கள். கடைசி 20 நிமிட உருக்கமான காட்சிகளில் அழுதே விட்டார்களாம். இது பற்றி விஜய் கூறும்போது "இப்படி ஒரு வரவேற்பை சீன ரசிகர்கள் காவலன் படத்திற்கு தருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கூறியுள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாவில் விஜய் கலந்து கொள்வது இதுவே முதல் முறை, முதல் முறையிலேயே முத்திரை பதித்துவிட்டார் இளையதளபதி விஜய்.

சீனர்களை அழவைத்த இளையதளபதி


vijay-shanghai-film-festival-14-06-11
சீனாவின் ஷங்காய் நகரில், ஷாங்காய் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் 11ம் தேதி விஜய் அசின் நடித்த காவலன் படம், ஆங்கில மற்றும் சீன மொழி சப் டைட்டிலுடன் திரையிடப்பட்டது. இப்படத்தை சீன ரசிகர்கள் மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். அதுவும் படத்தின் ஆரம்ப காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தவர்கள். கடைசி 20 நிமிட உருக்கமான காட்சிகளில் அழுதே விட்டார்களாம். இது பற்றி விஜய் கூறும்போது "இப்படி ஒரு வரவேற்பை சீன ரசிகர்கள் காவலன் படத்திற்கு தருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கூறியுள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாவில் விஜய் கலந்து கொள்வது இதுவே முதல் முறை, முதல் முறையிலேயே முத்திரை பதித்துவிட்டார் இளையதளபதி விஜய்.

Monday, June 13, 2011

காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு


ஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் விஜய் கூறினார்.

ஷாங்காய் திரைப்பட விழா சீனாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் நடித்த காவலன் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில - சீன மொழி சப்-டைட்டிலுடன் காவலன் திரையிடப்பட்டது.

சீன மொழியைச் சார்ந்த அனைவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததுடன் காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என்று கூறினார் விஜய்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கினர். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடிந்ததும் அவர்கள் மத்தியில் விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம்.

நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.

ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். (பலத்த கைதட்டல்) நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்," என்றார்.

விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை வழங்கினார்.

Friday, June 10, 2011

விருது வாங்க கிளம்புகிறார் விஜய்


avijay-kavalan-11-06-11
சங்காய் ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்காக விஜய் இன்னும் சில நாட்களில் சீனா செல்லவிருக்கிறார். இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவலில் காவலன் திரைப்படம் கலந்து கொள்கிறது. சங்காய் திரைப்பட விழாவில் விஜய்க்கு விருது வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல்  காவலன் திரைப்படம் திரையிடும் போது அங்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று விஜய் நினைப்பதாக, விஜய்யின் நெருக்கிய வட்டாரங்கள் தெரிவிகின்றன.

சங்காய் திரைப்பட விழா ஜூன் 11ம் தேதி தொடங்கி ஜூன் 19ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இரண்டொரு தினங்களில் சீனா செல்கிறார் விஜய்


இன்னும் சில தினங்களில் சீனா கிளம்புகிறார் நடிகர் விஜய். ஏதேனும் படப்பிடிப்பா என்றால் அதுதான் இல்லை. விஜய் படங்கள் எதற்கும் இதுவரைக்கும் அமையாத அந்தஸ்தின் காரணமாக உருவானதுதான் இந்த பயணம்.
காவலன் படம் முதலில் மலையாளத்தில் தயாரானது. அங்கு அப்படத்தின் பெயர் பாடிகாட். அப்புறம்தான் தமிழில் காவலன் என்றானது. பிறகு ரெடி என்ற பெயரில் இந்தியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. அப்படியே தெலுங்கு கன்னடம் என்று சட்டையை மாற்றிக் கொள்ளவும் தயாராகிவிட்டது.
இதற்கிடையில் சீனாவில் நடைபெறும் ஷாங்காய் திரைப்பட விழாவில் காவலன் திரைப்படமும் கலந்து கொள்ளவிருக்கிறது. படம் திரையிடப்படுகிற அந்த நேரத்தில் அங்கிருந்தால் சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்கிறாராம் விஜய். அதுமட்டுமல்ல, இவருக்கு விருதும் காத்திருக்கிறது.
இப்படியெல்லாம் உலகம் இப்படத்தை பெருமைப்படுத்திக் கொண்டிருக்க, உள்ளூரில் ஒரே அடிதடி சப்தம். எல்லாம் இந்த காவலன் தொடர்பான பண விவகாரம்தான். இப்படத்தின் தயாரிப்பாளர் ரொமெஷ்பாபு தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பத்தின் மீது காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.

Wednesday, June 8, 2011

விஜய்யின் காவலன் பட தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்!



பிரபல படத் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை மாநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் விஜய் நடித்த காவலன் படத்தைத் தயாரித்த ரொமேஷ் பாபு.
சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர் ரோமேஷ் பாபு. சமீபத்தில், நடிகர் விஜய் நடித்து வெளிவந்த, காவலன் படத்தை இவர்தான் தயாரித்தார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார்.
அப்போது அவருடைய வக்கீல் ரவிராஜ பாண்டியன் கூறியதாவது:
காவலன் படத்தை பெரும் பொருட்செலவில் ரொமேஷ் பாபு தயாரித்தார். அப்போது, விநியோகஸ்தர் என்ற பெயரில் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஷக்தி சிதம்பரம், எங்களை அணுகினார். அதன் பின், காவலன் படத்திற்கு தானே தயாரிப்பாளர் என்று கூறி பலரிடம் ஒப்பந்தம் போட்டுள்ள தகவல் எங்களுக்கு கிடைத்தது. இது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கு முடிவில், காவலன் படத்திற்கு தயாரிப்பாளர் ரொமேஷ் பாபு மட்டுமே என்றும், இதில், ஷக்தி சிதம்பரம் தலையிடக் கூடாது என்றும், ஷக்தி சிதம்பரத்திடம் ஒப்பந்தம் போட்டு பணம் கொடுத்தவர்கள், தனிப்பட்ட முறையில் அவரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோர்ட் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, படத்திற்கான சிக்கல் விலகி, வெளிவந்தது.
படத்திற்கான சாட்டிலைட் உரிமத்தை ரொமேஷ்குமார், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 5.5 கோடி ரூபாய்க்கு கொடுத்தார். அதில், 2.75 கோடி ரூபாயை அந்த நிறுவனம் கொடுத்துவிட்டது. மீதமுள்ள 2.75 கோடி ரூபாய்க்கு கடந்த நான்கு மாதங்களாக சாக்கு போக்கு சொல்லி வருகிறது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி, ஷக்தி சிதம்பரம் மற்றும் இரண்டு பேர், ரொமேஷ் குமாரின் வீட்டிற்கு வந்தனர்.
வீட்டில் இருந்த வயதான பெற்றோரிடம், ‘உன் மகன், அந்த டிவி நிறுவனத்திற்கு செல்லக் கூடாது. டிவி நிறுவனத்தினரை பார்த்தால் உன் மகன் போட்டோவில் தான் இருப்பான். என் பலம் என்ன? எனக்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்று உன் மகனுக்கு தெரியவில்லை. என் மீதோ, டிவி நிறுவனம் மீதோ புகார் கொடுத்தால், உன் மகன் இல்லாமல் போய்விடுவான். அவனுக்கு மூன்று நாள் கெடு,’ என்று மிரட்டிச் சென்றுள்ளனர்.தொடர்ந்து, நேற்று ( நேற்று முன்தினம்) காலை ரொமேஷுக்கு போன் செய்து, ‘இன்னும் இரண்டு நாட்களில் பணம் எனக்கு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டு ஓடிவிடு. இல்லையென்றால் அவ்வளவுதான்’ என்று மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, நாங்கள் கமிஷனரிடம் புகார் அளித்தோம். கமிஷனர், இந்த புகாரை சென்னை மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்,” என்றார் ரவிராஜ பாண்டியன்.

Saturday, May 7, 2011

ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட காவலன் தேர்வு


விஜய் நடித்த காவலன் திரைப்படம், சீனாவின் ஷாங்காய் உலகப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சித்திக் இயக்கத்தில் விஜய் - அசின் நடித்த காவலன் படம் பொங்கலுக்கு ரிலீஸானது. இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது சீனவின் முக்கிய நகரமான ஷாங்காயில் நடக்கும் 14வது உலகப் பட விழாவில் பனோரமா பிரிவில் தேர்வு பெற்றுள்ளது.

இந்த விழாவில் உலகம் முழுவதும் 80 நாடுகளில் இருந்து 2500 படங்கள் இதில் கலந்து கொள்கின்றன. இதில் முதன்முறையாக தென்னிந்தியாவிலிருந்து காவலன் படம் மட்டுமே தேர்வு பெற்றுளளது என விஜய்யின் பிஆர்ஓ பிடி செல்வகுமார் கூறினார்.

ஆஸ்கர் விருது பெற்ற 'ரெய்ன் மேன்' பட இயக்குநர் பேரி லெவின்சன் தலைமையில் அமைக்கப்பட்ட இயக்குநர்கள் குழுதான் இந்த விழாவுக்குரிய படங்களைத் தேர்வு செய்தது.

வரும் ஜுன் 11 முதல் 19 வரை விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க விஜய்யை அழைக்கப்பட்டுள்ளார், என இந்த விழாவிற்கு படங்களை தேர்வு செய்து அனுப்பும் ஒருங்கிணைப்பாளர் ரேக்ஸ் தெரிவித்தார் .

Kaavalan goes international


The 14th Shanghai international film festival selects Kavalan in their panorama section.
The Shanghai International Film Festival (SIFF), founded in 1993, is China’s only A-category international film festival accredited by the FIAPF.
The FIAPF stands for International Federation of Film Producers Associations based in Paris, created in 1933, is an organization composed with 31 member associations from 25 of the leading audiovisual production countries. FIAPF is also in charge of supervising international film festivals, including some of the world's most important ones.
In International panorama section:
The SIFF receives nearly 2,500 annual submissions from well over 80 countries and areas over the past several years and the total festival submission number still maintains fast growing. Among more than 200 selected international films of high quality, all Panorama programs are strongly presented by a variety of commercial blockbusters, art-house films, indies, box-office top rankers and award-winning films by master filmmakers - to nurse multi-leveled consumption concept for local Chinese market.
In recent years, International Panorama draws high attention by prestigious film directors and stars with their new works. Premiers and red carpets, talents and crew Q&As with audience and press conferences not only raise possibility for local market entrance but also greatly helps to boost future box office for theatrical release.
Mr. Barry Levinson won the 1988 Best Director Oscar for Rain Man, starring Dustin Hoffman and Tom Cruise. This film brought him the Academy Awards Best Picture and Best Director, and the Best Picture Award at the Berlin International Film Festival.
The 14th SIFF will kick off on June 11 and Barry Levinson together with other six international judges will attend the opening. Besides, Levinson's classic works will be shown in the Tribute to Masters section where our Tamil film Kaavalan  (Body guard) will also be showcased.
SIFF has issued an invitation to actor Vijay as guest of honor. The exact date of screening will be announced soon.

Monday, April 25, 2011

காவலன் நூறாவது நாள் வெற்றிவிழாவை கொண்டாடுகிறது



விஜய் நடிப்பில் பல எதிர்ப்புகளை தாண்டி பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் காவலன்.இது விஜயின் 51 வது படமாகும்.இதில் விஜய் அஸின் வடிவேலு நிழல்கள் ரவி ரோஜா மித்ரா ராஜ்கிரன் என பல நட்சத்திரப்பட்டாளமே நடித்தனர்.இத்திரைப்படம் வெளியாகிய போதும் அதிகளவான தியேட்டர்கள் கிடைக்கவில்லை.விஜயின் முந்தைய படமான சுறா அடைந்த தோல்வியால் தியேட்டர் உரிமையாளர்கள் காட்டிய எதிர்ப்பும் ஏனைய படங்களின் வருகையும் தியேட்டர் பற்றாக்குறைக்கு காரணமாயின.எனினும் படம் வெளியான பின்பு படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடிக்கவே பின்பு பல தியேட்டர்கள் இதில் இணைந்து கொண்டன.இப்படம் ஜெனவரி 15 ம் திகதி தமிழர்களின் பொங்கல் பண்டிகை ஸ்பெசலாக வந்து இன்று ஏப்ரல் 24 ம் திகதி காவலன் நூறாவது நாள் வெற்றிவிழாவை கொண்டாடுகிறது.காவலன் நூறாவது நாளை எட்டிய போதும் காவலன் ஆறு தியேட்டர்களில் இன்றும் ஓடுகிறது என்பது ஒரு சந்தோசமான செய்தியாகும்.நூறாவது நாளை கொண்டாடும் காவலன் திரைப்படத்திற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.நூறாவது நாள் கொண்டாட்டத்திற்காக அதிகளவான விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து சத்தியம் சினிமாவில் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.இப்பட வெற்றி விழா விரைவில் கொண்டாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது

Friday, April 22, 2011

Kaavalan Record Breaking success- 100 days


Kaavalan starring Vijay and Asin have been receiving tremendous audience response, world over..

A remake of Malayalam Blockbuster, Bodyguard, actor Vijay has portrayed a fine performance in the film- which is in the lines of his earlier films Love Today,Kadhalakku Mariyathai ..Asin has joined with Vijay for the third time, in this out-and-out entertainer..

Peppy music is scored by Vidyasagar, while Vadivelu has handled humor.. Rajkiran,Mithra Kurien,Roja, Nizhalgal Ravi have done prominent roles..

Vijay fans are rejoicing after this film hit the 100-day mark. They also applauded this feat achieved by the director and the actor!!

A Century Mark For 'Kaavalan'


While most of the previous films of Ilayathalapathy Vijay bombed in box office, his Pongal release ‘Kaavalan’ has become a turning point in his career now. With the film getting back the ever-cherishing cool boy image of Vijay after a very long time, the film became a massive hit as the family audiences started loving the film.

The film has successfully crossed 100 days and Vijay wholeheartedly thanks his fans for making it a good hit.

Now the actor has bunch of most promising projects like ‘Velayudham’, ‘Nanban’ and Manirathnam’s ‘Ponniyin Selvan’.

Tuesday, April 5, 2011

காவலனுக்கு வாழ்த்துச் சொன்ன அஜித்


Posted by Assouma Belhaj on 8:49 AM in , | 0 கருத்துரைகள்

தொடர்ந்து நான்கு படங்களின் தோல்விகள் என்றால் விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுக்கு நெருக்கடி இல்லாமல் எப்படி இருக்கும்?


இதனால்தான் தனது அடுத்தடுத்த மூன்று படங்களை ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்தே தீருவது என்ற முடிவுடன் இயக்குனர்களையும், கதைகளையும் மிகக் கவனமாக தனது அப்பா எஸ்.ஏ.சியுடன் தேர்ந்தெடுத்தெடுத்து காய்களை நகர்த்தி வருகிறார் விஜய்.


அதில் முதலாவது வெற்றியாக அமையப்போவதுதான் காவலன். மலையாளத்தில் சித்திக் இயக்கிய பாடிகார்ட் படத்தை, விஜய்க்கு எவ்வித எக்ஸ்ட்ரா சேர்க்கைகளும் இல்லாமல் கதைக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறார் சித்திக்.


விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் அதேநேரம், குடும்பத்துடன் பார்க்கும் படமாகவும் காவலைனை உருவாக்கியிருக்கிறார்கள். தோல்விகளில் இருந்து விஜய் மீண்டு எழும் முதல் படமாக காவலன் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டதால்தான் விஜயின் காவலனை ரிலிஸ் ஆகவிடாமல் தடுக்க பல வகையிலும் சதிகள் செய்வதாக சொல்லியிருக்கிறார் விஜய்.


இப்போது காவலன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகி விட்ட நிலையில். திருச்சி, தஞ்சை மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும், சுறா படத்தின் நஷ்டத்தை கொடுக்கா விட்டால் காவலனை எங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கொடி தூக்கினார்கள்.


இப்போது திருச்சி மாவட்ட உரிமையோடு செங்கல்பட்டு, வடவார்காடு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட விநியோக உரிமையையும் நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம் விற்று விட்டதால் காவலனுக்கு எழுந்த திருச்சி பிரச்சனையும் தீர்ந்து விட்டதில் கோலாகலமாக காவலன் வெளியீட்டுக்கு தயாராகி விட்டார்கள்.


இதற்கிடையில் பாடிகார்ட் மலையாளப்படத்தின் ரீமேக்தான் காவலன் என்று தெரிந்தும் மீண்டும் அதை வரவேற்க்க தயாராகி விட்டார்கள் மலையாள ரசிகர்கள்.


இன்னொரு பக்கம் இதுவரை மலையாளப்படங்கள், மலையாள நடிகர், நடிகையர், தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கிவரும் கேரளத்தின் நம்பர் 1 தொலைக் காட்சியான ஏசியாநேட்,


முதல் முறையாக சிறந்த தமிழ்நடிகர் என்ற விருது வகைமையை புதிதாக உருவாக்கி முதல் விருதை விஜய்க்கு வழங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட அஜித், இது எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத கௌரவம் என்று நேற்று பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் இருந்தபடியே விஜய்க்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னுங்க விஜய்!

Sunday, April 3, 2011

இந்த வருட வசூலில் இலங்கையில் காவலன் முதலிடம்


காவலன் படம் இலங்கையிலும் 10 வாரமாக ஓடுகிறது.விஜய் நடித்து வெளிவந்த காவலன் திரைப்படம் இந்த வருடத்தின் வசூலில் முதலிடத்தில் உள்ளது.அத்துடன் இந்த வருடம் வெளியாகிய படங்களில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெயரும் காவலனுக்கே கிடைத்துள்ளது.அதிகளவான தியேட்டர்களில் வெளியிட்டாலும் 63 நாளை தாண்டி காவலன் ஓடுவது சாதனையே.இலங்கையில் எல்லா படங்களும் திரையிடப்படுவதில்லை.அப்படி திரையிட்டாலும் எல்லாப்ப்டமும் 25 நாளை இலங்கையில் கடப்பது இல்லை.விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் வசூலில் வெற்றி பெற்று 50 நாளை தாண்டி ஓடியது.எனினும் குருவியும் மனோகரா திரையரங்கில் 68 நாள் ஓடி வெற்றி பெற்றது.அழகிய தமிழ் மகன் 40 நாட்களை தாண்டியும் சுறா 30 நாட்களை தாண்டியும் வேட்டைக்காரன் 40  நாட்களை தாண்டியும் வில்லு 50 வது நாளை தாண்டியும் இலங்கையில் ஓடியது.இப்பொழுது இப்படம் 10 வது வாரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.காவலனுடன் வெளியாகிய படங்கள் அதன் பின் வெளிவந்த படங்கள் இலங்கையில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இலங்கையில் காவலன் 10 வது வெற்றிவாரமாக சினிசிட்டி 1 2 3 இலும் ராஜாவிலும் ஓடிக்கொண்டிருகிறது. காவலன் 75 வது நாளை நோக்கி வெற்றி நடைபோடுகிறது.

சட்டப்படி குற்றம் - இன்னொரு காவலன்?


காவலன் படத்துக்கு எதிர்கொண்ட அனைத்துப் பிரச்சனைகளையும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்னொருமுறை சந்திக்க வேண்டிய நிலைமை. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ‌ப்பெருந்தகை.

சட்டப்படி குற்றத்தில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக சில கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் ஆத‌ரித்தும், சிலரை விமர்சித்தும் காட்சி வைத்திருக்கிறார்கள் என இவர்தான் தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தார்.

னால் படத்தை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள் விநியோகஸ்தர்கள். பணம் கொடுத்த பிறகு கடைசி நிமிடத்தில் படம் வெளிவராமல் போனால்...? மேலும், இதையே காரணம் காட்டி படத்தின் பேரமும் பேசலாம். 


இதை எதிர்பார்க்காத எஸ்.ஏ.சி. 25ஆம் தேதி படத்தை வெளியிட வேண்டும் என்ற முடிவுடன் திரையரங்கு உ‌ரிமையாளர்களை நேரடியாக சந்தித்து பேசுவது என முடிவெடுத்துள்ளாராம்.

காவலன் மூலம் பிரபலமான நடிகை


"காவலன்" படத்தின் மூலம் பிரபலமான நடிகை மித்ராவுக்கு இப்போது தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். அதன்விளைவு சென்னையிலேயே தங்க முடிவெடுத்து இருக்கிறார் மித்ரா.
மலையாளத்தில் வெளியான "பாடிகார்ட்" படத்தின் தமிழ் ரீ-மேக்காக பொங்கலுக்கு வெளியான படம் "காவலன்". இப்படத்தில் விஜய்க்கு அடுத்து பெரிதும் பேசப்பட்ட கேரக்டர் மித்ராவின் கேரக்டர் தான். காவலனில் மதுவாக சிறிய கேரக்டரில் வந்தாலும் நடிப்பில் பட்டயை கிளப்பி அசினையே பின்னுக்கு தள்ளிவிட்டார். இதன் விளைவாக காவலன் படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். அதனால் சென்னையிலேயே தங்கிவிடலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார் மித்ரா.
இதுகுறித்து மித்ரா கூறியதாவது, காவலன் படத்தில் நடிக்குமாறு டைரக்டர் சித்திக் என்னை அணுகியபோது உடன் ஒப்புக்கொண்டேன். காவலன் படத்தின் கேரக்டருக்கும், பாடிகார்ட் படத்தின் கேரக்டருக்கும் நிறைய வித்யாசம் இல்லை என்றாலும், தமிழக ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மலையாளத்தில் கிடைக்கவில்லை. காவலனில் என்னுடைய நடிப்பை பார்த்து நிறைய பேர் பாராட்டினார்கள். மலையாளத்தை காட்டிலும் தமிழில் சூப்பராக நடித்திருப்பதாக பலரும் கூறினர். காவலன் பட நடிப்பை பார்த்து தமிழில் நிறைய படவாய்ப்புகள் வருகிறது. தற்போது டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இப்படத்தில் நாயகியாக தீக்ஷா செத் நடிக்கிறார். படத்தில் எனக்கு துணை நடிகை ரோல் என்றாலும் மிக அழுத்தமான கேரக்டர் தான். இப்படத்தில் மாடர்ன் கேர்ளாக நடிக்கிறேன். சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது.
என்னை பொறுத்த வரை நடிப்பதற்கு மொழி ஒன்றும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே எனக்கு தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும். பிறர் பேசுவதை புரிந்து கொள்ள முடியும். அதேசமயம் ஓரளவிற்கு பேசவும் தெரியும். தமிழில் நிறைய படவாய்ப்புகள் தேடி வருகின்றன. இதனால் இங்கேயே தங்கி நடிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சிறை மீண்ட காவலனின் கதை


''மதுரையில் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்’ படம் ரிலீஸானால் நான் புடவை

கட்டிக்கொள்கிறேன்...'' என்று தி.மு.க. தளபதி, மாவீரன் மதுரை முத்து சவால் விட்டார். படம் ரிலீஸ் ஆனது. மாபெரும் வெற்றியும் பெற்றது. முத்துவின் சபதம் தோற்றது. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம்... அவரது விலாசம் தேடி பண்டல் பண்டலாய் புடவைப் பொட்டலங்கள் குவிந்தன! ஆனால், பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் புகழ்பரப்பும் அ.தி.மு.க. தளபதியாக அதே முத்து உலா வந்ததை ஆச்சர்யமாகப் பார்த்து அதிசயித்தது மதுரை. அன்றைய தி.மு.க. ஆட்சி, எம்.ஜி.ஆர். படத்துக்குக் கொடுத்த நெருக்கடியில் கிஞ்சிற்றும் குறையாமல் இன்றைக்கும் விஜய்யின் 'காவலன்’ படத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. ஆனால், போட்டத் தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து உலாவந்து விட்டான், 'காவலன்’! கடந்த 13-ம் தேதி இரவு வரை விழிபிதுங்கி நின்ற விஜய் தரப்பு நம்மிடம் கூறியது இனி...

பிரச்னையின் பிதாமகன்!

''முதலில் 'காவலன்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை மட்டும் 5 கோடிக்கு ஐங்கரன் மூவீஸ் கருணா கேட்டார். அப்போதே கொடுத்திருந்தால், இத்தனை வில்லங்கம் வந்திருக்காது. 50 லட்சம் அதிகம் தருவதாகச் சொன்னார் என்பதற்காக சிங்கப்பூர் சரவணனுக்கு அந்த உரிமையைக் கொடுத்தார்கள். இது ஏழரையை வலியத் தேடி மாட்டிக் கொண்ட கதையைப் போல ஆனது. சரவணன் சினிமா தொழிலுக்குப் புதுசு. விஜய் படம் வெளிவரவே கூடாது என்று வரிந்துகட்டிக் கொண்டு பெரிய இடத்து குரூப் குரூரமாகச் செயல்பட்டது. அவர்கள் விரித்த வலையில் சுலபமாகச் சிக்கிக்கொண்டார் சரவணன். ஆகமொத்தம், பிரச்னையின் பிதாமகனே சிங்கப்பூர் சரவணன்தான்!'' என்று விஜய் தரப்பு சொல்ல ஆரம்பித்திருக்கிறது!

ஒன்றுதிரண்ட 9 வழக்குகள்!

பொங்கலுக்கு 'காவலன்’ வெளிவராது என்று எதிர்த் தரப்பினர் உறுதியாக நம்பினர். ஆனால், வெளிவந்தே தீரவேண்டும் என்பதில் வெறியாக இருந்தார், விஜய். அதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்க... இதனைப் பார்த்துக் கோபமான எதிர்த்தரப்புதான் பல்வேறு வழக்குகளை பாய்ச்சியதாக விஜய் தரப்பு சந்தேகப்படுகிறது. இரண்டு மூன்று நாட்களுக்குள் எத்தனையோ அதிரடி திருப்பங்கள் நடக்க, கடந்த 11-ம் தேதி அன்று மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் ஒன்பது வழக்குகள் இந்தப்படத்துக்கு எதிராக குவிந்தன. படப் பெட்டி எப்போது வருமென்று தியேட்டர் அதிபர்கள் பி.பி. எகிறும் அளவுக்கு போன் செய்ய விநியோகஸ்தர்கள் விழிபிதுங்கி நின்றனர்.

13-ம் தேதி மாலை, ' 15 கோடி பணம் கட்டவேண்டும்’ என்று உத்தரவு போட்டது, சென்னை உயர் நீதிமன்றம். கூடவே 'முழுப்பணத்தையும் செட்டில் செய்த பிறகே படப் பெட்டியைத் தரவேண்டும்...’ என்று லேப்புக்கு லெட்டர் கொடுத்தது.

எல்லாம் மேலிடத்து பிரஷர்!

பொதுவாக லேப்புக்கு 10 கோடி தரவேண்டும் என்றால், முதலில் 2 கோடி தருவார்கள். பின்னர் படப் பெட்டி எடுக்க... விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர்களிடம் பணம் பெற்றுக் கடனை அடைப்பார்கள். இதுதான் சினிமா நடைமுறை. ஆனால், அரசியல் நெருக்கடி காரணமாக மொத்தமாக செட்டில் செய்யச் சொன்னார்கள். செங்கல்பட்டைச் சேர்ந்த நெகட்டிவ் ஃபைனான்ஸியர் ஒருவர் முழுப் பணத்தையும் கேட்டு நெருக்கடி கொடுத்தார். 'நல்லா பழகின உங்களுக்கு எங்க மேல நம்பிக்கை இல்லையா... இப்படி பல்டி அடிக்கிறீங்களே, நியாயமா?’ என்று அவரிடம் கேட்டதும், ' எல்லாம் மேலிடத்து பிரஷர்...’ என்று இப்போது ஸாரி சொல்கிறார்.

கொந்தளித்த ரசிகர்கள்!

வழக்கமாக விஜய் படம் வெளிவரும் ஒரு வாரத்துக்கு முன்பே கட்-அவுட், போஸ்டர் என திமிலோகப்படுத்துவது அவரது ரசிகர்களின் பழக்கம். ரிலீஸ் தேதி குளறுபடியால் பல ஊர்களில் தியேட்டர் அதிபர்கள் போஸ்டரே ஒட்டவில்லை. இதனால், 'விஜய் படம் வெளிவராதோ...?’ என்று நிலைகுலைந்து போனார்கள் விஜய் ரசிகர்கள். அதன் ரியாக்ஷனாகத் தங்களது கொந்தளிப்பைக் காட்டத் துவங்கினர். திருச்சியில் இருக்கும் ரசிகர்கள் விஜய் படம் வெளிவருவதில் குழப்பம் நீடித்ததைத் தொடர்ந்து, ரகளையில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். பவானியில் இருக்கும் விஜய் ரசிகர் ஒருவர் தியேட்டர் வாசலில் தீக்குளிக்க முயல... பதறிப்போன ரசிகர்கள் பத்திரமாக மீட்டு, படம் பார்க்கும்வரை கூடவே இருந்தனர். திருநெல்வேலியில் இருக்கும் ரசிகர்கள் 25 பேர் 'காவலன்’ ரிலீஸுக்காக மொட்டை போட்டு ஆன்மிக வேண்டுதல் செய்தனர். வேலூரில் காலை 5 மணிக்கே தியேட்டரை முற்றுகையிட்ட ரசிகர்கள், 12 மணிக்கு படப்பெட்டி வந்தபிறகு படம் பார்த்துவிட்டுத்தான் திரும்பினர். இதற்கு முன்புவந்த விஜய்யின் சில படங்கள் சரியாக போகாததால், சோர்ந்து போயிருந்த விஜய் ரசிகர்களைக் 'காவலனி’ன் வருகை துள்ளிக்குதிக்க வைத்தது!

இந்தப் படம் வெளியிட முடியாமல் கடந்த இரண்டு நாட்களாக கண்துஞ்சாது தவித்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனை தொடர்புகொண்டபோது, நம்மிடம் மனம்திறந்து பேசினார். ''எங்களை அழிக்க நினைப்பவர்கள் அவர்கள் அறியாமலே எங்களை வளர்க்கிறார்கள் என்று சொன்னார் அறிஞர் அண்ணா. 'பேனரில் உன்முகம் எத்தனை முறை கிழிக்கப்படுகிறதோ, அத்தனை அடி உயரத்துக்கு நீயும், உன் கொள்கையும் உயருகிறது’ என்று சொன்னார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.! 'எதிர்ப்பு இல்லையென்றால் ஒரு இயக்கம் வளராது. நாம் எதிர்ப்பிலே வளர்ந்தவர்கள்...’ என்று அதற்கு விளக்கம் சொன்னார், கலைஞர்.

தி.மு.க-வில் இருந்து தூக்கி எறியப்பட்டதும் அ.தி.மு.க-வைத் தொடங்கி அசுரவேகத்தில் வளர்ந்து, ஆட்சியையும் பிடித்தார், புரட்சித் தலைவர் எம்ஜி.ஆர்.

அமரர் எம்.ஜி.ஆர். மறைந்தபோது, சவ ஊர்வல வேனில் ஏற முயன்ற பெண்மணியைக் கீழே தள்ளிவிட்டுப் பிற்காலத்தில் புரட்சித் தலைவியாக உயர்த்தினார்கள் எதிரிகள். கல்யாண மண்டபத்தை இடித்ததன் மூலம் இன்றைக்கு தே.மு.தி.க. கட்சிக்கு மக்கள் செல்வாக்கு மளமளவென்று வளர்ந்தது. தானுண்டு, தன் வேலையுண்டு என்று சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்த என் மகன் விஜய்யை கையைப் பிடித்து இழுத்துவந்து முழுநேர அரசியல்வாதியாக மாற்றப் போகிறார்கள் இவர்கள்! தானாய் வளர்ந்துவரும் 'விஜய் மக்கள் இயக்கம்’ மீது தடிகொண்டு தாக்கி விஸ்வரூபம் எடுக்க வைத்ததற்கு நன்றி! கோடம்பாக்கத்தில் எத்தனையோ படம் ரிலீஸாகிறது! அதில் ஒன்று 'காவலன்’. அது வெளிவரக்கூடாது என்பதில் அவர்களுக்கு என்ன அக்கறை? அதுதான் புரியவில்லை! 'காவலன்’ திரையிடுவதற்காக ஒப்புக்கொண்ட தியேட்டர்களில் திடீரென கெடுபிடிகள் செய்து வேறு சில படங்களை வெளியிட்டது ஏன்? எந்த காரணத்தை முன்னிட்டும் 'காவலன்’ ரிலீஸ் ஆகக்கூடாது என்று சிலர் திட்டம் தீட்டியதாகச் சொல்கிறார்களே, அதன் பின்னணி என்ன?

சென்னையில் மட்டுமல்ல.... தமிழ்நாடு முழுக்கப் படத்துக்காக ரசிகர்கள் வைத்த பேனரை எல்லாம் காவல்துறையினரே கழற்றிக்கொண்டு போனதாக எங்களுக்கு செய்தி வந்தது. அவர்களை தூண்டிவிட்ட உந்துசக்தி எது? மக்கள் செல்வாக்குள்ள ஒரு நடிகனுக்கு எதற்கு இத்தனை தடைகள்? தமிழ்நாட்டில் ஒரு தமிழன் வளரக் கூடாதா? தமிழகம் என்ன ஒரு குறிப்பிட்ட மனிதர்களின் மொத்தச் சொத்தா? இங்கே இன்னொரு தமிழன் சிறு வீடுகட்டி வாழக்கூடாதா? தமிழர்கள் என்ன சுதந்திர நாட்டின் அடிமைகளா?

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது கலைஞரை ஒரு போராட்டத்துக்காக சிறைப் பிடித்தார். அப்போது கலைஞருக்காக நான்தான் தோள் கொடுத்தேன்.... அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நீதிக்கு அளிக்கப்பட்ட தண்டனையாக நினைத்து 'நீதிக்குத் தண்டனை’ என்ற படத்தையே தயாரித்து, இயக்கினேன்... அது எல்லாம் மறந்துபோய் விட்டதா? அந்தப் படம் வெளியானபோது, எம்.ஜி.ஆர் என்னை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்தார். அங்கு போகிற என்னிடம் கலைஞர் சொல்லி அனுப்பிய வார்த்தைகள் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது! சபை நாகரிகம் கருதி அதை இப்போது சொல்ல விரும்பவில்லை.!

அதற்குப் பிறகும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் 'சட்டம் ஒரு விளையாட்டு’ எனும் படத்தை எடுத்தேன். 'இது எங்கள் நீதி’ படம் ரிலீஸானபோது, கலைஞர் முதலமைச்சர்! அப்போது எல்லாம் பாசத்தோடு பழகியிருக்கிறேன். ஒரு படம் எடுத்தவர்கள் எல்லாம் ஆயிரத்தெட்டு சலுகைகளைப் பெறுகிறார்கள். அவர் கதை, வசனத்தில் மூன்று படம் எடுத்தும் ஒரு உதவிகூட நான் கேட்டது இல்லை... அந்தளவுக்கு தன்மானமுள்ள தமிழனான என் மகனுக்கு இத்தனை நெருக்கடியா? தடைக்கற்களா? கலைஞர் மீது வைத்த பாசத்துக்குக் கிடைத்த தண்டனையா?!

ஒரு திரைப்படக் கலைஞனாக நாங்கள் மட்டுமில்லை... எங்களைப்போல் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டுள்ளோம். சினிமா என்கிற சாதனம் கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமாகி விட்டது! இந்த வேதனையைத் தாங்கிக்கொண்டு மேடைகளில் போலித்தனமாக பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள் பலர்! உண்மைகளை அப்பட்டமாக உடைத்துப் போடுவதால் என்மீது கோபப்படலாம். அந்தக் கோபத்தின் வெளிப்பாடு வன்முறையாகக்கூட இருக்கலாம்! ஆனால், நான் சாவுக்குப் பயந்தவனல்ல! அப்படி பயந்து இருந்தால்... எம்.ஜி.ஆரை எதிர்த்து கலைஞருக்குக் கைகொடுத்து இருக்கமாட்டேன்!'' என்றார் ஆவேசமாக.

அதே சூட்டோடு, நடிகர் விஜய்யிடமும் பேசினோம். ''14-ம் தேதி வெளியாக வேண்டிய படத்துக்கு ஏகப்பட்டத் தடைகள் வந்தது. 15-ம் தேதிதான் படப் பெட்டியே வெளியூர்களுக்குப் போனது. பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களை எல்லாம் நான் சென்னைக்கு அழைத்தேன். நஷ்டம் எவ்வளவு என்று கேட்டேன். 3 கோடி என்றார்கள். உடனே அதற்கான செக்கை கொடுத்தேன். 'காவலன்’ படத்தால் எனக்கு இழப்பு 3 கோடி... இது பரவாயில்லை. ஆனால், நினைத்த மாதிரி என் படத்த ரிலீஸ் செய்த திருப்தி இப்போது இருக்கிறது, அதுபோதும் எனக்கு. எனக்கு என்னுடைய ரசிகர்கள்தான் முக்கியம். பொங்கல் தினத்தன்று அவர்கள் ஏமாறக்கூடாது. எப்போதும் என்னை வாழ வைக்கும் அந்த தெய்வங்களை நான் கைவிடமாட்டேன். அவர்களது அன்புதான் இந்தத் தடைகளை உடைத்தது. இந்தப் படை இருக்கும் போது எனக்கு என்ன கவலை?'' ரத்தினச் சுருக்கமாக முடித்தார் விஜய்.

சிறை மீண்ட 'காவலனி’ன் கதையே இப்படி இருக்கிறது என்றால், அடுத்து வரப்போகும் 'வேலாயுதம்’ யாரை கூர் பார்க்கப் போகிறானோ?!

அண்ணன் விஜய் பாதையில்.......


காவலன் படத்தின் மிக பெரிய வெற்றி, சிலருக்கு கண்டிப்பாக வருத்தத்தை தந்திருக்கும்.. 6 படம் தோல்வி இவன் இனிமே எதுக்கும் உதவ மாட்டான்,இவன் இனி ஜெயிக்க மாட்டான் என்று எண்ணியவர்களுக்கு விஜய் கொடுத்த சாவு மணி தான் காவலன்.. எத்தனையோ தடைகள் எத்தனையோ சூழ்ச்சிகள் இருந்தாலும் ஏதும் நம்ம தளபதி முன்னாடி சாம்பலா போச்சு.
சுறா படத்தை வெளியிட்டு சம்பாரிச்சவர் வேறொருவர், அதற்க்கு நஷ்ட்ட ஈடு கட்டுறது நம்மவர்.. விஜய்யின் வளர்ச்சி,,நாம் அவர் மேல் வச்ச பாசம் சிலருக்கு பொறாமையாக இருக்கிறது..

இந்த அரசு(D.M.K) மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஜய்யின் நிலைமை என்ன?

சிந்திபீர் ரசிகர்களே,, நாம் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை இனி திரையில் பார்க்க முடியாது அவர் நடிக்க மாட்டார் என்று நினைக்கிறோம்.

ஆனால் D.M.K ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமை ஏற்படலாம் என்பதற்கு உதாரணம் தான் இந்த காவலன் தடைகளும்,விஜய் 3-IDIOTS இல் இருந்து நீக்க பட்டதும்.. இதனை மனதில் வைத்துகொண்டு வரும் தேர்தலை விஜய்யின் பக்கம் கொண்டுவருவது உங்கள் கடமை.

விஜய் அரசியலுக்கு வருவதை நாம் விரும்பவில்லை.,ஆனால் விஜய்யை பாதிக்காத விஜய்யின் வெற்றியை தடுக்காத ஒரு அரசு அமைய வேண்டும்..

உண்மையான விஜய் ரசிகன் இத்தனை தடைகள் விஜயைக்கு தரப்பட்ட வேதனைகளை பார்த்து நிச்சயம் கோப படுவான்..
உங்கள் கோபம் உண்மையானது,, கண்டிப்பாக விஜய் கை காட்டும் அரசு அமையும்,அதற்க்கு நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்..

நாம் D.M.K விற்கு எதிரிகள் அல்ல., அதில் இருக்கும் சில விசமிகளுக்கு மட்டும் தான்..

அண்ணன் விஜய் எந்த பாதையிலும் முன்னால் சென்றால்.
அதற்க்கு தடை சொல்லாமல் நாம் அவர் பின்னால் நிற்ப்போம் உறுதுணையாக.