Saturday, April 2, 2011

சேலத்தை தொடர்ந்து திருவிடைமருதூர்: விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு




நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவிடைமருதூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவரது பேனரை எரித்தனர்.

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இதனை திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தப் பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அழகாபுரம் பெரியபுதூர் காளியம்மன் கோவில் தெருவில் இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ரசிகர் மன்றத்தினர் சுமார் 25 பேர் 28.03.2011 அன்று மன்றம் முன்பு கூடினார்கள். அவர்கள் மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். எதிர்ப்பு கோஷமிட்டபடி தங்கள் உறுப்பினர் கார்டையும் தீவைத்து எரித்தனர். அதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.


இதேபோல் நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவிடைமருதூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவரது பேனரை எரித்தனர்.

இது குறித்து திருவிடைமருதூர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்நத பாலகுரு கூறும்போது, விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு நடிகராகத்தான் அவரை பார்த்தோம். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்து உள்ளார். ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ரசிகர் மன்றங்களை கலைக்குமாறு நாங்கள் வலியுறுத்துவோம் என்றனர். 

Friday, April 1, 2011

விஜயின் மக்கள் இயக்கம் கலைப்பு- டென்சனில் எஸ்.எ.


விஜயின் மக்கள் இயக்கம் கலைப்பு- டென்சனில் எஸ்.எ.சி

 என்னங்க சொல்றிங்க,
 அமாங்க,

என்னைக்கு விஜய் அரசியல் வர்றேன் சொன்னாரோ! அப்பே லே இருந்து பிரச்னை தான் விஜய்க்கு! 

அதற்க்கு முன்னோட்டமாக தனது மன்றங்களை! இயக்கமாக மாற்றினார், பின்னர் தன்னுடைய தந்தை -யை இயக்கத்தின்  தலைவராக்கினார். பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவும் அளித்தனர்...

என்னைக்கு அதரவு அளித்தரோ! ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஊரிலும் இயக்கம் கலைக்க பட்டுத்தான் இருக்கிறது..

நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அழகாபுரம் பெரியபுதூர் காளியம்மன் கோவில் தெருவில் இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ரசிகர் மன்றத்தினர் சுமார் 25 பேர் 28.03.2011 அன்று மன்றம் முன்பு கூடினார்கள். அவர்கள் மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். எதிர்ப்பு கோஷமிட்டபடி தங்கள் உறுப்பினர் கார்டையும் தீவைத்து எரித்தனர். அதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவிடைமருதூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவரது பேனரை எரித்தனர்.

இது குறித்து திருவிடைமருதூர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்நத பாலகுரு கூறும்போது, விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு நடிகராகத்தான் அவரை பார்த்தோம். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்து உள்ளார். ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ரசிகர் மன்றங்களை கலைக்குமாறு நாங்கள் வலியுறுத்துவோம் என்றனர்

மவனே நம்மல கவுதிருவான்களோ!

அய்யோ டென்ஷன்! 'தல' வலிக்குதே!
இனி தான்  ஆரம்பம்!
நடிக்கறேவன்-லாம் நாடால நினைச்சா!....
அதோகதிதான்.......................

விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்




விஜய், சத்யராஜ், இலியானா போன்றோருடன் பணிபுரிவது புதிய அனுபவமாக இருக்கிறது என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தை அடுத்து, இந்தியில் ஹிட்டான ‘3இடியட்ஸ்’ படத்தை ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். இதில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் டேராடூனில் நடந்து முடிந்துள்ளது. இதுபற்றி தனது வலைப்பதிவில் ஷங்கர் எழுதியிருப்பதாவது: ‘நண்பன்’ படத்தின் இரண்டாம் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. கல்லூரி தொடர்பான காட்சிகள் அனைத்தையும் டேராடூனில் எடுத்துள்ளோம். விஷுவலாக இந்த காட்சிகள் மிரட்டும். இந்தப் படத்தில், விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த் போன்றோருடன் பணிபுரிவது புதிய அனுபவமாக இருக்கிறது. விஜய்,சத்யராஜ் காம்பினேஷன் பிரஷ்சாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். நண்பர்களாக நடிக்கும் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரின் கெமிஸ்ட்ரி,பிசிக்ஸ் எல்லாம் கேமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, பின்னாலும் சூப்பராக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. அனைவரும் அவரவர் கேரக்டரோடு ஒன்றியிருக்கிறார்கள். ‘எந்திரன்’ படத்தில் இருந்து அனைத்து விதத்திலும்‘நண்பன்’ மாறுபட்டு இருக்கும். இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்

விஜயின் 'பொன்னியின்செல்வனில் இசையமைப்பாளர் உறுதிசெய்யப்பட்டார்




ராவணன் படத்தை தொ‌டர்ந்து டைரக்டர் மணிரத்னம் அடுத்து இயக்கும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டைரக்டர் மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்க உள்ளார். கல்கியின் நாவலை மையமாக வைத்து உருவாக போகும் இப்படத்தில் விஜய், விஷால், ஆர்யா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம்.

இத‌னிடையே இப்படத்திற்கு யார் இசையமைப்பார் என்ற கேள்வி எழுந்தது? வழக்கம் போல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மணிரத்னம் தன்னுடைய பழைய ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவை இசையமைக்க திட்டமிட்டு இருந்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும், இளையராஜாவும் சேர்ந்து இசையமைக்க போவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள

ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!




அதிமுகவின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது தனது மகன் விஜய்யையும்,  அதிமுக 
பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் அமரவைக்க  ஏற்பாடு செய்துள்ளார்.

தான் இயக்கிவரும் ‘’சட்டப்படி குற்றம்’’ படம் முடியும் தருவாயில் இருப்பதால் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்.  இந்த விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பாடல் கேசட்டை வெளியிடுமாறு ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படம் 
ஆளும்கட்சிக்கு எதிரான பல விவகாரங்களை தாங்கி வருவதாலும்,  தேர்தல் நேரம் என்பதாலும் ஜெயலலிதா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

ஜெயலலிதா வெளியிட நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் 
கேட்டுக்கொண்டுள்ளாராம்.

இந்த விழாவிற்கு தமிழகம் முழவதிலும் உள்ள விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா உள்பட பிற மாநிலங்களிலும் உள்ள விஜய் ரசிகர்களை திரட்ட திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
மேலும்,  அதிமுக கூட்டணி கட்சி தொண்டர்களையும் திரட்டி மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.   

இது தேர்தல் பிரச்சார மாநாடாக அமையும் என்பதால் ஜெயலலிதாவும் இந்த விழா மீது தனிக்கவனம் வைத்திருக்கிறாராம்.

விஜய் மாநாடு – விஜயகாந்த் – சீமான் ஆதரவு :



natpu
வருகின்ற பிப்ரவரி மாதம் 6-ம் தேதி திருச்சியில் நடிகர் விஜய் தன் ரசிகர்களைக் கொண்டு பெரும் மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறார். இது தொடர்பாக விஜயின் தந்தை S.A.  சந்திரசேகர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவரான விஜயகாந்தை சந்தித்துப் பேசி “நீங்கள் அவசியம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்” என்று கேட்க, கேப்டனும் “என் ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் கேப்டன், “விஜய் அரசியலில் இறங்கப் போவது குறித்து போன வருடமே என்னிடம் மீடியாக்கள் கேட்டனர். கண்டிப்பா விஜய் கட்சி ஆரம்பிக்கணும். அப்போதுதான் பெரிய தலைவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட சுயநலவாதிகளா இருக்காங்க என்பதை விஜய் கண்கூடா தெரிஞ்சுக்க முடியும்” என்றேன். ஆகையால் உங்கள் மாநாட்டுக்கு natpuகண்டிப்பா என் ஆதரவு உண்டு. நான் மாநாட்டில் கலந்துக்கிறத பத்தி வெளியில் சொல்ல வேண்டாம் என கேப்டன் கூறியிருக்கிறார். இதே போல S.A.  சந்திரசேகர், சீமானையும் அழைக்க அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். விஜய் மாநாட்டில் விஜயகாந்தும், சீமானும் மேடை ஏறுவதால் அரசியல் களம் சூடாகிறது.

விஜய் பக்கம் திரும்பும் பெரிய இயக்குனர்கள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இளைய தளபதி விஜய்க்கு இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த அவரது படமான் காவலன் ஹிட்டானது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விஜய், ஷங்கர் மற்றும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது என்று கூறினார். இதனையடுத்து அவர் எதர்பார்த்தபடி ஷங்கரின் 'நண்பன்' படத்தில் நடிக்கிறார் விஜய், தொடர்ந்து ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய், - விக்ரம் மற்றும்- விஷாலலுடன் (வி3!) இணைந்து நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது, இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது