Tuesday, May 10, 2011

பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது ஏன்...? பரபரப்பு தகவல்கள்


பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயற்சி மேற்கொண்டிருந்தார். இதற்காக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் (ஜெயமோகனின் 7வது உலகம் தான் பாலாவின் நான் கடவுள் படம்) பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுத ஒத்துக் கொண்டு, ஞாபகங்கள் கொண்ட கதையை, சில கற்பனை பாத்திரங்கள் சேர்த்து 3 மணி நேர கதையாக்கும் வகையில் வசனங்கள் எழுதி முடித்திருந்தார். 

இதன் கதை நட்சத்திரங்களாக, தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு, நம் இளைய தளபதி விஜய், பார்த்திபன், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா உள்ளிட்ட பிரபலங்கள் தேர்வு செய்த நிலையில், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் வகையில் அத்தனை ஏற்பாடுகளும் முடக்கி விடப்பட்ட நிலையில், இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் மணிக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமான ஒருவர் மூலம், ராணாவுக்கும், பொன்னியின் செல்வன் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விபட்ட மணி, சூப்பர் நடி‌கரை சந்தித்து இருக்கிறார்.(பொன்னியின் செல்வன் தமிழக அரசின் பொது உடைமை ஆக்கப்பட்ட கதை. யார் வேண்டுமானாலும் கதையை ப‌யன்படுத்தலாம்) 

இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதையில் உள்ள சில முக்கியமான திருப்பங்களும், சம்பவங்களும், ராணாவில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்தது இயக்குநர் மணிக்கு. இதனால் ராணா ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மணி சார் இயக்கத்தில் படம் வெளி வர குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஆகும் என்பதாலும் பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டுள்ளது. படம் கைவிடப்பட்டது குறித்து, ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு தேர்வு செய்த நட்சத்திரங்களை வைத்து அடுத்து படம் இயக்குவதற்காக முயற்சியில் இருக்கிறார் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் ட்ராப்... அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது!


மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் துவங்கியதாக அறிவித்தது நமது இணையதளம். அதன் பிறகு அந்தப் படம் தொடர்பாக மணிரத்னம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் அறிவித்து வந்தோம். இந்தப் படத்துக்காக மைசூர் லலிதமகாலை அவர் பார்வையிட்டது வரை தொடர்ச்சியாக செய்திகளைத் தந்திருந்தோம்.

ஆனால் சில பல காரணங்களால் பொன்னியின் செல்வன் கைவிடப்படும் சூழல் எழுந்தது. அது குறித்த செய்தியையும் நமது இணையதளம் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.


இதோ, நாம் சொன்ன செய்தியை மணிரத்னமே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆம்... பொன்னியின் செல்வன் முயற்சி கைவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக அட்வான்ஸ் தரப்பட்டு, கால்ஷீட் பெறப்பட்ட விஜய் உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் படம் கைவிடப்பட்டது என்ற தகவலை மணிரத்னமே அனுப்பியுள்ளார்.

பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட நாவலைப் படமாக்குவதில் உள்ள நடைமுறை சிரமங்கள், அதற்காகும் பெரும் நிதியை தர நிறுவனங்கள் முன்வராத நிலை மற்றும் இந்தப் படத்துக்கான வியாபாரம் குறித்த நிச்சயமற்ற நிலை.. போன்றவை காரணமாகவே மணிரத்னம் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். மேலும் படத்தைத் தயாரிக்கவிருந்த பிரபல சேனலுக்கும் படத்தின் நாயகன் விஜய்க்கும் ஒத்துப் போகாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் முயற்சியை கைவிட்டாலும், அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து தளபதி ரேஞ்சுக்கு பக்கா ஆக்ஷன் படம் தரும் திட்டமும் உள்ளதாம் மணிரத்னத்துக்கு. இந்த முயற்சியாவது கை கூடட்டும்!

'போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்': விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்


சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா நிபுணர் குழுவால் போர்க்குற்றவாளி என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜபக்சேவை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதமிருந்தனர் விஜய்யின் ரசிகர்கள்.

சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழர்களை கொன்று குவித்து கொடிய போர்க்குற்றங்களைச் செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும், அவர் மீது சர்வதேச கோர்ட்டில் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று இப்போராட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு சேலம் மாவட்ட இளைய தளபதி விஜய் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் தமிழன்.ஆ.பார்த்திப தலைமை தாங்கினார். 

சேலம் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். அடுத்த கட்ட போராட்டத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.

Sunday, May 8, 2011

விஜய்யின் வேலாயுதமும், ஆஸ்காரின் தயக்கமும்!

“வேலாயுதம்” திரைப்படம் எழுபது சதவிகிதம், எண்பது சதவிகிதம் முடிந்து விட்டது என கூறப்பட்டு வந்தாலும் ஐம்பது சதவிகிதம் படப்பிடிப்பு தான் பூரணமாக முடிந்திருக்கிறதாம்.
மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயங்கி வருகிறாராம். காரணம், தேர்தல் முடிவுக்குப்பின் தி.மு.க., பெரிய அளவில் தொ‌ல்லைகள் வரும்! ஒருவேளை படத்தை ரிலீஸ் பண்ணக்கூட முடியாமல் போகலாம். எனவே வீணாக முதலீடு செய்வானேன்…? என யோசிக்கிறதாம் ஆஸ்கார் தரப்பு.
ஒருவேளை தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் விஜய் தரப்பு இறங்கி வந்து சமாதானம் செய்து கொண்டால் மீதி படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்பது, தயாரிப்பு தரப்பின் தற்போதைய நிலையாம். இதனால் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் இருப்பது இயக்குநர் “ஜெயம்” ராஜா தான் என்பது தான் பாவம்!

Saturday, May 7, 2011

Vijay Gets a 14 Crore Salary for Nanban


விஜய் - இப்போ ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஹீரோ


விஜய் படம் உலகின் முக்கிய சர்வதேச படவிழாக்களில் ஒன்றான ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் திரையிட உத்தியோக பூர்வமாக தேர்வாகியிருக்கிறது.

உலகம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்து ஐநூறு படங்கள் தேர்வுக்கு கலந்து கொண்ட 14-வது ஷங்காய் சர்வதேசபட விழாவில் இந்தியாவில் இருந்து மொத்தம் 16 படங்கள் கலந்து கொண்டிருகின்றன.

சித்திக் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் காவலன் படமும் கலந்து கொண்டு தேர்வாகியிருகிறது. இந்த படவிழாவில் பங்கேற்க அரச விருந்தினர்களாக வரும்படி படத்தின் இயக்குனர், நாயகன், நாயகி ஆகிய முன்று பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருகிறதாம். ஒரு வழியாக ஒரு நல்ல கதையம்சம் உள்ள படத்தி விஜய் நடித்தற்கு ஒரு பலன் கிடைத்திருகிறது.

இது நண்பன் படத்திற்கும் வாய்க்கும் இல்லையோ, விஜய் நடிக்கபோகும் பகலவன் படத்துக்கு கண்டிப்பாக வாய்க்கும் என்கிறார்கள். காரணம் பகலவன் அப்படியொரு உலகளாவிய கதை என்கிறார்கள். தற்போது விஜய் நண்பன் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்புக்காக இலியானாவுடன் நெதர்லாந்து தேசத்துக்கு பறந்திருகிறார். தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் விஜய் சென்னையில் இருக்க மாட்டார்.

FIR on ‘Velayudham’ songs


We have interesting details about three ‘scintillating songs’ in ‘Velayudham’, Ilaya Thalapathi Vijay’s forthcoming film, directed by ‘Jayam’ Raja and produced by Aascar Films V Ravichandran.

“A song whose starting lines are Sonna puriadhu….sollukkul adangadhu… was shot recently on a grand set. It will be the introduction song of Vijay in Velayudham,” sources in the unit tell us.

“While the lyrics speak about the bond the Ilaya Thalapathi shares with his fans, Vijay Antony’s music has provided the much-needed pep a Vijay intro songs needs. It will be a colourful song,” they say.

“The other number that was recently picturised was a duet,” they say and add: “the song Mayakkiputta ennai mayakkiputta shot on Vijay and Hansika Motwani will be remembered for a long time by (music) lovers.”



Another rocking song "Manjanathi Marathu Katta....Konjam Neram Vadi Kitta...." , sung by vijay antony.