Thursday, February 28, 2013

மீண்டும் முருகதாஸுடன் இணைகிறார் விஜய்.. ஆனால்..!

27-vijay-with-murugadoss-300மீண்டும் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைகிறார் விஜய். ஆனால் இந்தப் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என உறுதியாக முருகதாஸ் தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய படம் துப்பாக்கி. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைப் படைத்துவிட்டதாக அவர்களே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இருவரும் இணைந்து மீண்டும் படம் செய்யப் போவதாக செய்திகள் கிளம்பின. இதுகுறித்து இயக்குநர் முருகதாஸிடம் விசாரித்தபோது, “இருவரும் மீண்டும் இணையும் திட்டமிருக்கிறது. ஆனால் நிச்சயம் இது துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது,” என்றார். முருகதாஸ் இப்போது துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் இந்தியில் இயக்குகிறார். விஜய் தலைவா, ஜில்லா என இரு படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தங்கள் கைவசமுள்ள படங்களை முடித்ததும் புதிய படத்தைத் துவங்கப்போகிறார்களாம்.

Monday, February 25, 2013

அஜீத்தை விட்டுவிட்டு மீண்டும் விஜயிடம் சென்ற முருகதாஸ்

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் துப்பாக்கி இந்தி ரீமேக்கை முடித்துவிட்டு அஜீத்தை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. ஆனால் தற்போது விஜயை வைத்து படம் எடுக்கிறாராம். ஏ.ஆர். முருகதாஸ் விஜய், காஜல் அகர்வாலை வைத்து எடுத்த துப்பாக்கி படத்தை இந்தியில் பிஸ்டல் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்தியில் விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 50 கோடி சம்பளமாம். பிஸ்டல் படப்பிடிப்பு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிஸ்டலை முடித்த கையோடு முருகதாஸ் தமிழில் படம் இயக்குகிறார் என்று கூறப்பட்டது.
24-1361703560-murugadoss-ajith44-600

விஜய் படத்தில் மகத்


அஜித்தின் மங்காத்தாவில் பார் ஓனராக நடித்தவர் மகத். தயாநிதி அழகிரியின் நண்பரான இவர் தாப்ஸியுடனான காதலில் நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜுடன் மோதலில் ஈடுபட்டு செம அடி வாங்கியது தெரிந்திருக்கும். நடிப்பில் கிடைக்காத பெயரும் புகழும் இந்த காதல் அடிதடியில் மகத்துக்கு கிடைத்தது.
மங்காத்தாவுக்குப் பிறகு பேக் பென்ச் ஸ்டூடண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் தொடங்கயிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்தில் மகத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜில்லா படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நேசன் என்பவர் படத்தை இயக்குகிறார். விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தப் புதிய படத்தில் முக்கியமான வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய்யின் தம்பியாக நடிக்க மகத் ஒப்பந்தம் செய்ய்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
img1130224018_1_1

Thalaiva song

Naanum Unnodu

Tuesday, February 19, 2013

Vijay with KV Anand?

Director cinematographer KV Anand is reported to have met Ilayathalapathy Vijay recently, to discuss the possibility of a film together. Since a couple of months ago, this has been making buzz in the K-town. But when asked earlier, Anand refused to comment, saying "It is too early to talk about the cast. I am still working on the script". Recently, he posted online "I haven't signed my next film with any production company or any hero. I will move only after finishing the script". Neither the actor nor the director were available for comments. Ilayathalapathy is currently shooting for director Vijay's 'Thalaivaa'. His next project will be with RB Choudary's film with Nesan, on which he will begin work soon.

Wednesday, February 13, 2013

விஜய் – ஆடியோ நாயகன்

சொந்தப்பட விழாவுக்கே வராதவர் அ‌ஜீத் என்றால் சொந்த பந்தமில்லாவிட்டாலும் அழைத்தால் ஓடி வந்து அட்டெண்ட் செய்கிறவர் இளையதளபதி விஜய். இந்த நல்ல குணம் காரணமாக அவரின் தலைவா படப்பிடிப்பு இரண்டு நாட்கள் கட்டாகியிருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தலைவா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் வெளிநாடு செல்லவிருக்கிறது மொத்த டீமும். இப்படியொரு பிஸி ஷெட்யூ‌லில் பி.டிசெல்வகுமாரிடமிருந்து அழைப்பு. தனது ஒன்பதுல குரு படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்க வேண்டும் என்று. பி.டி.செல்வகுமார் விஜய்யின் முன்னாள் பிஆர்ஓ. அழைத்ததால் தட்ட முடியாது. ஓகே என்று சொல்லி விழாவுக்கு வந்துவிட்டார். இ‌‌ன்று முருகதாஸும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரிக்கும் வத்திக்குச்சி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. படத்தின் நாயகன் முருகதாஸின் தம்பி. விஜய்தான் கலந்து கொள்ள வேண்டும் என்பது முருகதாஸின் அன்பு கட்டளை. துப்பாக்கி என்ற சூப்பர்ஹிட் படத்தை தந்தவரின் எளிய ஆசை. அதையும் இ‌ன்று விஜய் நிறைவேற்‌றினார். ஆக, ஆடியோ விழாக்கள் காரணமாக தலைவா படத்தின் இரண்டு நாள் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.