Wednesday, June 12, 2013

கோலிவுட்டில் விஜய் குரலுக்கு எவ்வளவு கிராக்கி தெரியுமா?

12-1371032930-thuppakki34-600இளைய தளபதி விஜய்க்கு படங்களில் பாட ஏராளமான வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். விஜய் நன்றாக பாடுவார் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் தன் படங்களில் தனக்காக பாடியதுடன் பிறருக்காவும் பாடியுள்ளார்.
அதிலும் குறிப்பாக சூர்யாவுக்காக அவர் பாடிய நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து தனலட்சுமி விரும்புச்சு பாடல் மிகவும் பிரபலமானது ஆகும்.

Monday, June 10, 2013

விஜய் என் தம்பி மாதிரி: மோகன்லால்

Vijay Has Lot Fans Kerala Mohanlal இளைய தளபதி விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார். 

நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருகிறார். அவர் விஜய்யுடன் முதன்முதலாக சேர்ந்து நடிக்கும் படம் இது தான். 

இந்நிலையில் அவர் ஜில்லா பட அனுபவம் பற்றி கூறுகையில், 

ஜில்லா படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியது. தற்போது சென்னையில் நடிக்கும் படப்பிடிப்பில் நானும், விஜய்யும் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கும், எனக்கும் ஏற்கனவே அறிமுகம் உள்ளது. நாங்கள் சில நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளோம். ஆனால் அதிகம் பேசியதில்லை. 

விஜய் என் தம்பி போல உணர்கிறேன். மனிதநேயமிக்க அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது ஆச்சரியம் அல்ல. கேரளாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்றார்.

Sunday, June 9, 2013

விஜய்யின் தலைவா பட ரிலீஸ் ஆகஸ்ட்டுக்கு தள்ளிப்போனது!

04-thalaiva--movuie-300துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் தலைவா. மதராசப்பட்டினம் விஜய் இயக்கியுள்ள இதன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து விட்டதால், அடுத்து நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதோடு, தலைவா படத்தின் இறுதிகட்டப்பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். ஆனால், டப்பிங், இசைக்கோர்ப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லையாம்.
அதனால், இம்மாத தொடக்கத்திலேயே ஆடியோவை ரிலீஸ் செய்து விட்டு, 22-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதியை ஜூன் 22-ந்தேதிக்கு மாற்றி விட்டனர். அதோடு, படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 9-ந்தேதிக்கு மாற்றியுள்ளனர். இதனால் இம்மாதம் தலைவா தியேட்டருக்கு வந்து விடும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Friday, June 7, 2013

விஜய் நலத்திட்ட விழா கடைசி நேரத்தில் ரத்து ஏன்?: பரபரப்பு தகவல்கள்

Why Did Vijay S Function Get Cancelled நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடக்கவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது.

 நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி நாளை சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

 இது குறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், 

வரும் 8ம் தேதி விஜய் ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கவிருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்றார்.

 இந்த விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் கூட நடந்து வந்தன. மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இந்த கல்லூரியில் விழா நடந்தால் விஜய் ரசிகர்கள் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கருதிய போலீசார் விழாவுக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

முதலில் சிறிய அளவில் விழா நடத்த திட்டமிட்டனர். பின்னர் மாநிலம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வந்து கலந்து கொள்ளும் பிரமாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டதால் தான் இத்தனை குளறுபடியாம். தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் திரண்டு வருவதால் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாம். அதனால் பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்து போலீசார் அனுமதி மறுத்துவிட்டார்களாம்.

 மேலும் நாளை அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனால் விஜய் விழாவுக்கு பாதுகாப்பு அளிப்பதில் குளறுபடி ஏற்படலாம் என்று கருதியும் போலீசார் அனுமதி மறுத்தனராம். மேலும் அரசியல் கட்சியின் தலையீட்டாலும் தான் இந்த விழா ரத்து செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

இளைய தளபதி விஜய்க்கு சூப்பர் ஜோடி யாரு?

நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜய் 20 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். 

விஜய்யின் முதல் கதாநாயகி கீர்த்தனா தொடங்கி ஜில்லா கதாநாயகி காஜல் அகர்வால் வரை பத்துக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். 

எந்த நடிகையுடன் அதிக அளவில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறதோ அந்த நடிகையுடன் அதிக அளவில் விஜய் தொடர்ந்து நடிப்பார். அந்த வகையில் அசினும், திரிஷாவும்தான் விஜய்க்கு சிறந்த ஜோடி என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். விஜய் உடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

விஜய் – அசின் 


அசினுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் போன்ற படங்களில் ஜோடி சேர்ந்தார் விஜய், இந்த ஜோடிதான் டாப் லிஸ்ட்டில் நம்பர் 1 என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 43 சதவிகிதம் ரசிகர்கள் அசின்தான் விஜய்க்கு ஏற்ற ஜோடி என்று கூறியுள்ளனர்.




விஜய் – திரிஷா

 கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என திரிஷா உடன் இணைந்து நடித்தார் விஜய். இந்த ஜோடி சூப்பர் ஹிட் என்பது பெரும்பாலான ரசிகர்களின் கணிப்பு.


விஜய் – ஷாலினி 

காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு என இரண்டு படங்களில் நடித்த இந்த ஜோடி 90களில் இளசுகளால் அதிகம் பேசப்பட்டது.



விஜய் – சிம்ரன் 

துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா என சிம்ரனுடன் ஜோடி சேர்ந்த விஜய் அப்போதைக்கு சூப்பர் ஹிட் என பேசப்பட்டார்.


விஜய் – ஜோதிகா 

குஷி, திருமலை, படங்களில் பப்ளி ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்தார். குஷி படத்தில் இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி என்று பேசப்பட்டது.


விஜய் – காஜல் அகர்வால் 

துப்பாக்கியில் முதன் முறையாக காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார் விஜய் இப்போது ஜில்லாவிலும் ஜோடி சேர்ந்துள்ளார். இதுவும் சூப்பர்தான் என்று பேசுகின்றனர் ரசிகர்கள்.



விஜய் – ஜெனிலியா

 சச்சின், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்த ஜெனிலியா, வேட்டைக்காரனில் நடித்த அனுஷ்கா, அழகிய தமிழ் மகனில் நடித்த ஸ்ரேயா, சுறா படத்தில் நடித்த தமன்னா என பல நாயகிகள் விஜய் உடன் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஏனோ அதற்குப் பிறகு அவர்களுடன் இணைந்து நடிக்க விஜய் விரும்பியதில்லை.




உலக சுற்றுச்சூழல் தினம் – மரக் கன்று நட்டார் விஜய்

06-vijay-worldenvironmentday-600உலக சுகதாதார தினத்தை முன்னிட்டு, சென்னையில் மரக் கன்று நட்டார் நடிகர் விஜய். ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையில் நேற்று பூமித் தாயைக் காப்போம் என்ற தலைப்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பமானது. ஒரு ஆண்டு நடக்கும் இந்த பிரச்சாரத்தின் முதன் நாளான நேற்று அதனை மரக் கன்று நட்டு தொடங்கி வைத்தார் நடிகர் விஜய்.
இதன் பிரான்ட் அம்பாசடராகவும் விஜய் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் நடத்தப்படும் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எக்ஸ்னோராவின் இளைஞர் பிரிவு வி கோ க்ரீன் எனும் பெயரில் சுற்றுச்சூழல் நிகழ்ச்சியை ஜூலை 3 முதல் 9-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. மாணவர்கள் உள்பட 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்.

Thursday, June 6, 2013

விஜய் சினிமா பயணம்: நாளைய தீர்ப்பு டூ தலைவா

இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் 39 வது பிறந்தநாளை இன்னும் சில தினங்களில் கொண்டாடப் போகிறார். சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த விஜய் சிறு வயது முதலே சினிமாவில் இருந்தாலும் குறிப்பிடத்தக்க படங்கள் மட்டுமே அவரை நடிகராக நிரூபித்தது. 

நாளைய தீர்ப்பில் தொடங்கிய பயணம் தலைவா, ஜில்லா என தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக 6 படங்கள் வரை நடித்த விஜய், கல்லூரி பருவ மாணவராக நடித்த நாளைய தீர்ப்பு தமிழக சினிமா ரசிகர்களிடையே பேச வைத்தது.

 தமிழ் சினிமாவில் முதலில் இருப்பை தக்க வைக்க எடுக்கப்பட்ட படங்கள் செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு போன்ற படங்கள் அதீத மசாலாத்தனங்கள் இருந்தன இதனாலேயே பெண் ரசிகைகள் விஜய்க்கு கிடைக்க சில நாட்கள் ஆனது.

 சில வருடங்களில் சுதாரித்த விஜய் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். இதில் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெற வைத்த படங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.




பூவே உனக்காக 

ராஜா மசாலாப்படங்களுக்கு இடையே விக்ரமன் இயக்கத்தில் ராஜாவாக நடித்த பூவே உனக்காக படம் சூப்பர் ஹிட் வெற்றி விஜய்யின் சினிமா பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.

லவ் டுடே 

காதல் என்று சுற்றிய இளைஞன் பொறுப்பான இளைஞனாக மாறி அட்வைஸ் செய்த படம் லவ் டூடே. இளைஞர்களை மட்டுமல்ல இளம் பெண்களையும் கவர்ந்தார் விஜய்.


ஒன்ஸ் மோ

ர் விடலைப் பருவக் குறும்புகள் கொண்ட விஜய் நடித்த ஒன்ஸ் மோர் ரசிகர்களை ரசிக்க வைத்தது.


காதலுக்கு மரியாதை

 காதலர்கள் மீது மரியாதை ஏற்படுத்திய படம் காதலுக்கு மரியாதை. ஜீவா என்று இளம் பெண்கள் உருகியிருக்கின்றனர். சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருது பெற்றார் விஜய்.


பிரியமுடன் வில்லன் 

எத்தனை நாள்தான் ஹீரோவாக நடிப்பது கொஞ்சம் வில்லத்தனம் செய்வோமே என்று விஜய் நடித்த பிரியமுடன் படத்தை வெற்றி பெற வைத்தனர் ரசிகர்கள்.

குஷி

இளசுகளை ரசிக்க வைத்த குஷி சிவா உற்சாகமாக, ஜாலியாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதுவரை இப்படி ஒரு விஜய் படத்தை பார்த்ததே இல்லை என்று பேசினர் ரசிகர்கள்.
திருமலை 

மென்மையான நாயகனாக இருந்த விஜய் ஆக்சன் அவதாரத்தில் வெற்றி பெற்ற படம் திருமலை.



சொல்லியடித்த கில்லி 

ஆக்சனுடன் காமெடியும் கலந்து நடித்த கில்லி சொல்லியடித்தது. விஜய் வெற்றிப் பாதையில் தனி ரூட் போட்டது.

போக்கிரி 

பெரிய வெற்றி ஏதாவது கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த விஜய்க்கு பிரபுதேவா இயக்கத்தில் அமைந்த படம்தான் போக்கிரி.

காவலன் 

அதிரடியில் இருந்து அமைதியான விஜய், நடிப்பில் தனி முத்திரை பதித்த படம் காவலன். அதன்பின்னர் நடித்த வேலாயுதமும் வெற்றிப் படமானது.



நண்பன் 

நண்பனில் தனி நடிப்பை வெளிப்படுத்திய விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார் என்றே கூறலாம். துப்பாக்கியில் ராணுவ வீரனாக நடித்தும் அசத்தினார் விஜய்.

தலைவா

 இப்போது நடித்துக் கொண்டிருக்கும், தலைவா, ஜில்லா பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும் கூட.