நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருகிறார். அவர் விஜய்யுடன் முதன்முதலாக சேர்ந்து நடிக்கும் படம் இது தான்.
இந்நிலையில் அவர் ஜில்லா பட அனுபவம் பற்றி கூறுகையில்,
ஜில்லா படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியது. தற்போது சென்னையில் நடிக்கும் படப்பிடிப்பில் நானும், விஜய்யும் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கும், எனக்கும் ஏற்கனவே அறிமுகம் உள்ளது. நாங்கள் சில நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளோம். ஆனால் அதிகம் பேசியதில்லை.
விஜய் என் தம்பி போல உணர்கிறேன். மனிதநேயமிக்க அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது ஆச்சரியம் அல்ல. கேரளாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment