விஜய்- ஜிவி பிரகாஷ் குமாரின் முதல் காம்பினேஷனில் உருவாகியுள்ள தலைவா படப் பாடல்கள் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியாகின்றன.
அதற்கு முன் அனைத்துப் பாடல்களின் சாம்பிள் துணுக்குகளை டீஸராக வெளியிட்டுள்ளனர், பாடல்களின் உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனம். அமேசான் இணைய தளத்தில் கேட்கக் கிடைக்கும் இந்த சாம்பிள் பாடல்கள் குறித்து ஒரு பார்வை...

6 பாடல்கள்..
இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் நா முத்துகுமார் எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமா்ர் இசையமைத்துள்ளார்
.

வாங்கண்ணா வணக்கங்கண்ணா...
இந்த ஆறு பாடல்களில் கேட்டதும் பிடித்துப் போகும் பாடல், விஜய் - சந்தானம் பாடியுள்ள வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. மை சாங்க நீ கேளுங்கண்ணா... பாடல்தான். முதல் முறை கேட்கும்போதே நினைவில் நிற்கிறது. இந்தப் பாடல்தான் இணையதங்களில் வெளியாகிவிட்டதாக சில தினங்களுக்கு முன் தலைவா குழுவினர் போலீசில் புகார் செய்திருந்தனர்.

தமிழ்ப் பசங்க...
தமிழோடுதானே என் சங்கீதங்க... என்று ஆரம்பிக்கிறது இந்த தமிழ்ப் பசங்க பாட்டு. பென்னி தயாள், ஷீஸே பாடியுள்ளனர். சுமாராக இருக்கிறது

யார் இந்த சாலை ஓரம்...
ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் பாடியுள்ள டூயட் பாட்டு, யார் இந்த சாலை ஓரம். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இசையில் புதுமை என்று எதுவுமில்லை.

சொல் சொல்...
கொஞ்சம் வேகமான ரொமான்டிக் பாட்டு இந்த சொல் சொல்.... விஜய் பிரகாஷ், அபஸ் ஜோத்புர்கர், மேகா பாடியுள்ளனர். முதல் முறை கேட்கும்போது பெரிதாக கவரவில்லை. முழுப் பாடலும் வெளியான பிறகுதான் தெரியும்.

தி எக்ஸ்டஸி ஆஃப் டான்ஸ்
இது தீம் மியூசிக் மாதிரி வருகிறது. சென்னை சிம்பொனியுடன் இணைந்து கிரண் பாடியுள்ளார். ஆனால் ஏற்கெனவே புன்னகை மன்னன், 7 ஜி ரெயின்போ காலனி படங்களில் கேட்ட தீம் மியூசிக் மாதிரிதான் இருக்கிறது.

தலைவா தலைவா
இதுதான் டைட்டில் பாட்டு மாதிரி தெரிகிறது. வழக்கம் போல ஆக்ஷன் ஹீரோவுக்கான ஒரு ரெடிமேட் பாடல். ஹரிசரண், பூஜா, ஜியா வுல் அக் பாடியுள்ளனர். ஹே ராமில் வரும் 'ராம் ராம்...' பாடலை நினைவூட்டுகிறது அந்த பீட்.

No comments:
Post a Comment