இசையமைப்பாளர்கள் அனைவருமே இப்போது திரையில் தோன்ற அல்லது நடனமாட ஆரம்பித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா கூட ஒரு படத்தில் முழுப் பாடலுக்கும் தோன்றுகிறார். அவர் மகன் யுவன் சங்கர் ராஜாவை நிறைய படங்களில் பாடலுக்கு நடனமாட வைக்கின்றனர் இயக்குநர்கள்.
ஏ ஆர் ரஹ்மான் ஏற்கெனவே தனி இசை வீடியோவே வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடனமும் இடம்பெற்றுள்ளது. அடுத்து இமானும் அதே போல ஒரு பாடலுக்கு தோன்றுகிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிக்கிறார்.
விஜய் ஆன்டனியோ முழுப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் பட்டியலில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாரும் இணைகிறார். விஜய் நடிக்கும் தலைவா படத்தில், ஒரு பாடலுக்கு அவருடன் இணைந்து ஆடுகிறார். சமீபத்தில் இணையதளங்களில் லீக்கான 'வாங்கண்ணா...' என்ற பாடலுக்குத்தான் இருவரும் ஆடுகிறார்களாம்.
தலைவா பட ஆடியோ, விஜய்யின் பிறந்த நாளான 22-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக வெளியாகிறது.
No comments:
Post a Comment