Thursday, August 8, 2013

தலைவா படத்தில் துளி கூட அரசியல் இல்லை! - விஜய்

நான் நடித்துள்ள தலைவா படம் அரசியல் படமே அல்ல, என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தலைவா படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது. படம் வருமா வராதா என்ற சூழலில் ஒரு தன்னிலை விளக்கமாக விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தலைவா படத்தில் துளி கூட அரசியல் இல்லை! - விஜய்
"தலைவா' படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்' ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல. 

யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று விஜய் கூறியுள்ளார். 

இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் தலைவா அரசியல் படம் அல்ல என்று அறிவித்துள்ளனர்.

Wednesday, August 7, 2013

விஜய்யை மீண்டும் இயக்க விரும்புகிறேன்! - பிரபு தேவா

இப்போது இந்திப் படங்களில் பிஸியாக இருந்தாலும், அடுத்து விஜய்யை வைத்து தமிழில் இயக்க விரும்புகிறேன், என்று கூறியுள்ளார் இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா. 

சென்னையில் நேற்று களவாடிய பொழுதுகள் படத்தின் பத்திரிகையைளர் சந்திப்பு நடந்தது. 

இதில் படத்தின் ஹீரோவான பிரபு தேவா, இயக்குநர் தங்கர் பச்சான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எப்போதோ தொடங்கப்பட்ட இந்தப் படம் குறித்து நீண்ட நேரம் பேசினர்.

மறுபடியும் வருவீகளா பிரபு 


மும்பையிலேயே பெரும்பாலும் தங்கிவிட்ட பிரபு தேவா மீண்டும் தமிழ் சினிமாவை இயக்குவாரா? என்று கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.
அதெல்லாம் பெயரலை... 

அதற்கு பதிலளித்த பிரபுதேவா கூறுகையில், "நான் மும்பைக்கு குடிபெயர்ந்துவிட்டதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. எனது சினிமா படவேலைகள் மும்பையில் இருப்பதால் அதிக நாட்கள் அங்கு தங்குகிறேன்.


என் வீடு சென்னைதான் பாஸ்


 ஆனாலும் சென்னைதான் என் வீடு. என் இரு மகன்கள் சென்னையில் உள்ளனர். இருவரும் அவர்களின் அம்மாவுடன் வசிக்கிறார்கள்

ஓய்வு கிடைக்கும்போதெல்லாம்

எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னை வந்து குழந்தைகளைப் பார்க்கிறேன். அவர்களுக்கும் நேரம் கிடைக்கும் போது மும்பை வருகிறார்கள்.

விஜய்யுடன் மறுபடியும் ... 

தமிழில் மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுக்க விருப்பம் உள்ளது. அதற்கான வாய்ப்புகள் அமையும் போது முயற்சியில் இறங்குவேன்," என்றார்

ஒரு சூப்பர் டூப்பர்.. ஒரு டுபாக்கூர் 

விஜய்யை வைத்து போக்கிரி என்ற சூப்பர் ஹிட் படமும், வில்லு என்ற சூப்பர் ப்ளாப் படமும் கொடுத்தவர் பிரபு தேவா. போக்கிரியின் இந்தி ரீமேக்கில் பிரபு தேவாவுக்காக ஒரு நடனமும் ஆடிக் கொடுத்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது



'தலைவா' டிக்கெட் முன்பதிவை திடீர் என்று நிறுத்திய சென்னை தியேட்டர்கள்

சென்னை தியேட்டர்களில் தலைவா படத்திற்கான டிக்கெட் முன்பதிவு திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது. 

விஜய்யின் தலைவா படம் ரம்ஜான் பண்டிகை தினமான நாளை மறுநாள் உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. விஜய் ரசிகர்கள் தலைவா படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.'தலைவா' டிக்கெட் முன்பதிவை திடீர் என்று நிறுத்திய சென்னை தியேட்டர்கள்
இந்நிலையில் சென்னை நகரில் உள்ள தியேட்டர்கள் தலைவா பட டிக்கெட் முன்பதிவை திடீர் என்று இன்று நிறுத்தியுள்ளன. இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த பிரச்சனைக்கான காரணம் விரைவில் தெரிய வரும். தலைவா தமிழகத்தில் மட்டும் 978 ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது என்று தகவல் கிடைத்துள்ளது

விஜய்யின் 'தலைவா'வுக்கு சாதமாகிய ஆந்திர அரசியல்

தெலுங்கானா பிரச்சனை தொடர்பாக ஆந்திராவில் நடந்து வரும் போராட்டங்களால் விஜய்யின் தலைவா படத்திற்கு அதிக ஸ்கிரீன்கள் கிடைக்க உள்ளது. 

ஆந்திர பிரதேசத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கானா மக்கள் காங்கிரஸின் முடிவை கொண்டாடுகையில் பிறர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பவன் கல்யாண் 

பவன் கல்யாண் நடித்துள்ள அத்தாரின்டிகி தாரேதி படம் வரும் 9ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் ஆந்திராவில் நடக்கும் போராட்டங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

அண்ணா

விஜய்யின் தலைவா படம் அண்ணா என்ற பெயரில் வரும் 9ம் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. பவன் கல்யாண் படமும், விஜய்யின் படமும் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிக ஸ்கிரீன்களில்

 தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் தலைவா ரிலீஸ் ஆகிறது. ஆனால் ஆந்திராவில் பவன் கல்யாண் படத்தால் தலைவாவுக்கு அதிக ஸ்கிரீன்கள் கிடைக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்நிலையில் பவன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் தலைவாவுக்கு அங்கும் அதிக ஸ்கிரீன்கள் கிடைக்க உள்ளது.
விஜய்க்கு நல்லதாப் போச்சு 

பவன் கல்யாண் படம் தள்ளிப் போனது விஜய்யின் தலைவாவுக்கு ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. தலைவாவின் பிரமாண்ட ரிலீஸுக்காக காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு இனிய செய்தி ஆகும்.
தலைவா... அட என்னதான் கொடுத்தாங்க சென்சார்ல?


Thalaiva Melody

Saturday, August 3, 2013

தலைவா படத்துக்கு தடை கோரி வழக்கு- இன்று விசாரணை

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளிவரவிருக்கும் தலைவா படத்துக்கு தடை கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் அசோக்நகரைச் சேர்ந்த பி.முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனு:

என்னிடம் ஏ.எல்.உதயா கடந்த மே 11-ந்தேதி ரூ.21 லட்சம் கடன் கேட்டார். விஜய் நடிக்கும் தலைவா என்ற படத்தில் நடிப்பதாகவும், சம்பளம் கிடைத்ததும் கடனை திருப்பித் தந்துவிடுவதாகவும் உத்தரவாதம் கொடுத்திருந்தார்.
தலைவா - யுஏவை நீக்குமா ரிவைசிங் கமிட்டி?
அதற்கான கடிதத்தை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சந்திரபிரகாஷ், டைரக்டர் ஏ.எல்.விஜய் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். அவர்களும் உதயாவின் வார்த்தைக்கு உறுதி அளித்தனர். இவர்களின் உறுதிமொழியை நம்பி, பணத்தை கொடுத்தேன்.
இந்த நிலையில் ஆகஸ்டில் தலைவா படம் ரிலீஸ் ஆவதாக பத்திரிகை செய்தி படித்தேன். இதுகுறித்து கேட்டபோது உதயா கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை. கடனை திருப்பித் தரவில்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Friday, August 2, 2013

தலைவா... அட என்னதான் கொடுத்தாங்க சென்சார்ல?

யுஏ சான்றிதழை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்குப் போய் சில கட்களுடன் யு சான்று பெற்றது தலைவா படம் என்று வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் படத்தின் பிஆர்ஓ. 

அந்தப் படம் என்ன சான்றிதழ் பெற்றது என்பதை நாங்களாக சொல்லும் வரை காத்திருக்கவும் என்றும் அவர் கூறியுள்ளார். 

விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது. விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
தலைவா... அட என்னதான் கொடுத்தாங்க சென்சார்ல?
இந்தப் படத்துக்கு சென்சாரில் யுஏ சான்று தரப்பட்டது. இதனால் அரசின் வரிச்சலுகைகள் கிடைக்காது என்பதால் படத்துக்கு யு சான்று கோரி ரிவைசிங் கமிட்டிக்கு போனார் தயாரிப்பாளர். 

அதன்படி நேற்று முன்தினம் இந்தப் படத்தைபப் பார்த்தது ரிவைசிங் கமிட்டி. படசத்தில் சில இடங்களில் மட்டும் சிறிய அளவில் காட்சிகளுக்கு கட் கொடுத்து, யு சான்று தந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

 ஆனால் இதனை படத்தின் பிஆர்ஓ நிகில் முருகன் மறுத்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டரில், ' தலைவா சென்சார் சான்று குறித்து வந்த வதந்திகளை நம்ப வேண்டாம். அதுகுறித்து விரைவில் அப்டேட் செய்யப்படும்," என்று ட்விட்டரில் கூறியுள்ளார். படம் பார்த்து முடிந்ததும் எப்படியும் ஏதோ ஒரு சான்றிதழ் கொடுத்திருப்பார்களே...!