விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளிவரவிருக்கும் தலைவா படத்துக்கு தடை கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் அசோக்நகரைச் சேர்ந்த பி.முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனு:
என்னிடம் ஏ.எல்.உதயா கடந்த மே 11-ந்தேதி ரூ.21 லட்சம் கடன் கேட்டார். விஜய் நடிக்கும் தலைவா என்ற படத்தில் நடிப்பதாகவும், சம்பளம் கிடைத்ததும் கடனை திருப்பித் தந்துவிடுவதாகவும் உத்தரவாதம் கொடுத்திருந்தார்.

அதற்கான கடிதத்தை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சந்திரபிரகாஷ், டைரக்டர் ஏ.எல்.விஜய் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். அவர்களும் உதயாவின் வார்த்தைக்கு உறுதி அளித்தனர். இவர்களின் உறுதிமொழியை நம்பி, பணத்தை கொடுத்தேன்.
இந்த நிலையில் ஆகஸ்டில் தலைவா படம் ரிலீஸ் ஆவதாக பத்திரிகை செய்தி படித்தேன். இதுகுறித்து கேட்டபோது உதயா கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை. கடனை திருப்பித் தரவில்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment