எவ்வளவோ முயற்சி செய்தும் தலைவா படம் வெளியாகவில்லை. நாளைக்குள் வெளியாக வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தினசரி ஒரு பேட்டி, பிரஸ் மீட் வைத்து வருகின்றனர்.
அரசு இதில் தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என தெளிவுபடுத்திவிட்டது. போலீசாரோ இது தங்கள் வேலையல்ல என்றும், சினிமாத் துறையினர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றும் கூறிவிட்டது.
வெளியிட வேண்டிய தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். விஜய் படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களுக்குப் பழி வாங்கவே தியேட்டர்காரர்கள் இப்படிச் செய்வதாகவும் பேச்சு நிலவுகிறது.
இந்த நிலையில், தலைவா படத்தை வெளியிட முதல்வர் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்யும் அவரது குழுவினரும் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய், தயாரிப்பாளர், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் தலைவா படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
சத்யராஜ், அமலாபால், சந்தானம் ஆகியோரிடம் பேசி இதற்கு சம்மதம் வாங்கியுள்ளாராம் இயக்குநர் விஜய். அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வேன் என்று உறுதி அளித்துள்ளாராம் படத்தின் நாயகன் விஜய். எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ளப் போகிறார்களாம்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் vijeenthiran.blogspot.com
No comments:
Post a Comment