தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் வந்திருந்தனர்.
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த விஜயகாந்த், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:
ஆந்திராவை பிரிப்பது போல் தமிழகத்திலும் மாநிலம் பிரிக்கப்படுமா?.
ஆந்திராவிலேயே இதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. இங்கு அதற்கான முடிவு வந்தபிறகு தமிழகம் பிரிப்பது பற்றி பின்னர் ஆலோசிக்கலாம்.
தலைவா சிக்கல்
தமிழகத்தில் விஜய் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது ஏன்? சினிமாவுக்கும், எனக்கும் இப்போது சம்பந்தம் இல்லை. நான் தற்போது அரசியலில் உள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.
சினிமா நடிகராக இருந்து நடிகர் சங்கத்தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். தலைவா விவகாரத்தில் எந்த குரலும் கொடுக்கவில்லை. இப்போது நான் சினிமாக்காரனே இல்லை என்று பதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment