இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"தலைவா" என்ற தமிழ்ப் படம் வெளியாவதை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, தமிழக காவல் துறை தள்ளி வைத்துள்ளதாக ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்செய்தி உண்மையல்ல என்றும் இந்தப் படம் வெளியாவதை தள்ளி வைக்குமாறு தமிழக காவல்துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இத்திரைப்படம் வெளியிடப்படுவதில் ஏற்பட்டிருக்கக் கூடிய தாமதம் எதிலும் காவல்துறைக்கு பங்கு இல்லை. படம் வெளியிடப்படுவது பற்றிய முடிவுகள் திரைப்படத் துறையைச் சார்ந்தவை," என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அப்படீன்னா... இதெல்லாம் யாரோட வேலையா இருக்கும்!?
No comments:
Post a Comment