விஜய் நடித்த தலைவா திரைப்படம் நிச்சயம் இன்று வெளியாகும் என்று நம்பிக்கையோடு தியேட்டர் முன்பு திரண்ட ரசிகர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கிட்சிப்பாளையம் பகுதியில் உள்ள பிக் சினிமா தியேட்டரில் விஜய் நடித்த தலைவா படம் இன்றைக்கு ரிலீசாக இருந்தது. படத்தின் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி காலை 7.15 மணிக்கு என்பதால் அதிகாலை 5 மணியில் இருந்து திரள தொடங்கினர் ரசிர்கள். ஆனால் ஏழரை மணியளவில் 'படம் திரையிடப்படவில்லை காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. பணம் திருப்பி தரப்படுகிறது ' என்ற அறிவிப்பு பலகையை திரையரங்கம் முன் மாட்டினர்.
இதனால் கொந்தளித்த ரசிகர்கள் கூச்சலிட அங்கே வந்த கிட்சிப்பாளையம் காவல்நிலைய காக்கிகள் அவர்களை களைந்து போகும்படி கூறினார். ஆனால் ரசிகர்கள் செவி சாய்க்காததால் கையில் பைப் தடி கொண்டு விரட்டினர். இதனிடையே தின நாளிதழில் இன்று படம் ரிலீஸ் என விளம்பரம் வர திரும்பிய ரசிகர்கள் மீண்டும் திரையரங்கம் முன் குவிந்தனர்.
பாலபிஷேகம்
வீட்டில் பால் வாங்க வைத்திருந்த பணத்தைக்கூட எடுத்துக் கொண்டு வந்த ரசிகர்கள் பேனருக்கு பால் ஊற்றியும், எலுமிச்சை பழ மாலையும் போட்டு ரசிக விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

மழை கூட வருதே
அதிகாலையில் இருந்தே லேசான மழை பொழிந்து கொண்டு இருக்க அதை பொருட்படுத்தாமல் எப்படியும் படம் திரையிடப்பட்டுவிடும் என்று கால் கடுக்க நின்றுகொண்டு இருந்தனர் ரசிகர்கள். ஆனால் படம்தான் வெளியானதாக தெரியவில்லை.

அரசுக்கு எதிராக முழக்கம்
தமிழக அரசு பாதுகாப்பு தராததால் தான் படம் வெளிவரவில்லை என ஆளும் கட்சிக்கு எதிரான கண்டன கோசங்களையும் ரசிகர்கள் எழுப்பினர்.
திருப்பூரில் தடியடி
திருப்பூர் சீனிவாசன் திரையரங்கில் தலைவா திரைப்படம் இன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து திரையரங்கு முன்பாக இன்று அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் கூடினர்.

எப்போ வெளியாகும்?
வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் தலைவா படம் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் படம் எப்போது ரிலீசாகும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. அதனால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:
Post a Comment