Monday, April 25, 2011

விஜய்,சூர்யா,அஜீத்,கார்த்தி,விக்ரம் இவர்களில், யார் நம்பர் ஒன்..?


பூவே உனக்காக,காதலுக்கு மரியாதை..,என விஜய்க்கு டாப் ஹிட் கொடுத்த இந்த படங்கள்தான் விஜய்க்கு தமிழ்சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை கொடுத்தது என்றால் மிகையில்லை..காதல் படங்களால் வளர்ந்த விஜய் ஆக்‌ஷன் அதகளத்துக்கு மாறினார்.மாறிய படம் திருமலை...



திருமலை சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள்..அது விஜய் சினிமா வாழ்க்கையில் உண்மை ஆயிற்று...திருமலை விஜய் க்கு ஆக்‌ஷனும் வரும்...நடனத்துடன் சண்டையும் போடத்தெரியும்..என மக்களுக்கு உணர்த்தியது....ஆனா அதையே தொங்கிய விஜய் ஆக்‌ஷன் சினிமாக்களாக தொடர்ந்து நடித்து,ரஜினியின் வசூலை முறியடித்து,ரஜினி யை தோற்கடித்து சூப்பர் ஸ்டார் ஆகிவிடவேண்டும் என பேராசைப்பட்டார்..ரஜினி தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி,நிரந்தர தமிழ் சினிமாவின் முதல்வர் என சந்திரமுகி,வசூலில் ரசிகர்கள் நிரூபித்தனர்...சந்திரமுகிக்கு போட்டியாக விஜய்யும்,அவர் தந்தையும் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்ட சச்சின் படம்,என்னப்பா படம் முழுக்க ஒரே புகை புகையா சீன் எடுத்திருக்கானுங்க..என்ற விமர்சனத்துடன் ஃப்ளாப் ஆனது...

வெகு வேகமாக வளர்ந்த விஜய்க்கு மற்றொரு பெரிய திருப்பம் கொடுத்த படம் என்றால்.,கில்லி .இயக்குனர் தரணியின் பரபர திரைக்கதையில்,வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் தட்டியெறிந்த படம்...தெலுங்கு ஒக்கடுவை உருவி அப்படியே எடுத்திருந்தாலும்,தெலுங்கு mageshbabu அளவுக்கு விஜய ஆக்‌ஷன் காட்டாவிட்டாலும்,கதை நன்றாக இருந்ததும்,படம் பரபரப்பாக இருந்ததும்,முக்கியமாக அப்படிபோடு பாட்டு சிறுசுகள் முதல் பெருசுக வரை எப்போதும் முண்ணுமுணுக்க செய்ததாலும் மாஸ் ஹிட்.

 விஜய் சினிமா வாழ்வில் மறக்க முடியாத ,ஆக்‌ஷன் படம் கொடுத்தவர்களில் இயக்குனர் பேரரசுக்கு முக்கிய பங்கு உண்டு...
அண்ணன்,தங்கை பாசத்தை கொட்டி எடுக்கப்பட்ட ,அதே சமயம்  விதம் விதமான பல வில்லன்களை வேட்டையாடும் வேடத்தில் விஜய் கலக்கியிருக்கும் படம்தான் திருப்பாட்சி..

முதல்பாதி கிராமத்திலும்,இரண்டாம் பாதி நகரத்திலுமாக படம் வேகமெடுக்கும்..முதல் பாதி பாசம்..இரண்டாம் பாதி ஆக்‌ஷன்.... பட்டி தொட்டியெங்கும் வசூல் அள்ளியது...


சிவகாசி,அடேயப்பா படம் முழுக்க பட்டாசு மாதிரி வெடிக்கும்...திரைக்கதை...பிரகாஷ்ராஜ் அண்ணனாகவும்,விஜய் தம்பியாகவும் நடித்திருப்பார்கள்..சும்மா இருவரும் செம கலக்கு கலக்கியிருப்பார்கள்...முழுக்க பட்டாசு வெடிப்பது போல வெடித்து தூள் கிளப்பினார்..அட..என்னத்த சொல்வேனுங்க..வடுமாங்கா ஊறுதுங்க..என அசின் கனவுக்கன்னியாக தமிழ் இளைஞர்கள் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தார்.இதுவும் வசூலில் பின்னியெடுத்தது...இந்த இரண்டு படங்களும் கொடுத்த வெற்றியை விஜய்யால் அடுத்தடுத்து காப்பாற்றிகொள்ள முடியவில்லை.

இப்படி வேகமாக மேலே ஏறுவதும்,கீழே இறங்குவதுமாக இருக்கும் நேரத்தில் ,அடுத்தடுத்து ஆதி,குருவி,என மக்கள் மனதில் நஞ்சை விதைத்தார் விஜய்...இதன் கொடூரங்கள் தாங்க முடியாமல் மக்கள் அவருக்கு ஃப்ளாப் கொடுத்தும் அவர் அசரவில்லை..அடுத்தும் சுறா என்ற படத்தை கொடுத்து மக்களை கொத்து கொத்தாக கடிக்க வைத்தார்...இதன் கொடூரம் இன்னும் மோசமாக இருந்தது...மொட்டைமாடியில் இருந்து ரயிலுக்கு பறக்கும் அந்த காட்சியை பார்த்துவிட்டு,ஜாக்கிஷானே இனி என் படங்கள் ஓடாது என தேம்பினார் என்றால் பாருங்கள்....

அதன்பிறகு காவலன்....ஆக்சன் படங்கள் தோல்வி அடைவதால் ,சரி ஒரு மாறுதலுக்கு ஆக்சனும் இல்லாமல் காமெடியும் இல்லாமல் காதலும் இல்லாமல் ,ஒரு மாதிரி வந்த படம்...படம் வெற்றி என்றாலும் எதிர்பார்த்த வெற்றி அல்ல...


சூர்யா நந்தா படத்தில் பாலா வின் பட்டை தீட்டலுக்கு பிறகுதான் அவரது கிராஃப் ஏறத்தொடங்கியது...நந்தாவே அவரை ஆக்‌ஷன் பாதைக்கு அருமையான ரூட் போட்டு கொடுத்துவிட்டதால் சூர்யா கலக்க ஆரம்பித்துவிட்டார்.

நந்தாவுக்கு முன் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார்,ஃப்ரெண்ட்ஸ் படங்கள் வெற்றிபெற்ராலும் அவை சூர்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் என சொல்ல முடியாது....


பூவெல்லாம் கேட்டுப்பார் ஜோதிகா ஃபார்மில் இருந்த நேரம்...ஜோதிகா அளவுக்கு சூர்யா பிரபலம் இல்லை..ஆனாலும் இந்த ஜோடி கெமிஸ்ட்ரி ..இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது....மக்கள் மனதை கவர்ந்தது..இவர்கள் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.

நந்தாவுக்கு பின் சூர்யா வுக்கு பிரேக் கொடுத்த படம் என்றால் அது ,மவுனம் பேசியதேதான்....காதலுக்கு புது பெயிண்ட் அடிச்ச மாதிரி...அருமையான கதை,திரைக்கதை....இதுதான் பருத்திவீரன் இயக்குனர் கம் நடிகர் அமீரின் முதல் படம்..இதில்தான் திரிஷாவுக்கும் பிரேக் கிடைத்தது....

சூர்யாவின் நிதானமான நடிப்பு,அருமையான வசனங்கள் மக்களின் வரவேற்பை பெற்றது....
அதன்பின் பெரும் வரவேற்பும் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி செய்த படம் என்றால் காக்க காக்க.

தமிழ் போலீஸ் ஸ்டோரி....என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக சூர்யா மிரட்டியிருப்பார்..அருமையான ஒளிப்பதிவு..தங்க சிலையாக ஜோதிகா,பரபர திரைக்கதை,சூப்பர் வசனங்கள்,.பெரிதும் புகழப்பட்ட எடிட்டிங் என படம் மெஹா ஹிட்...இதன் மூலம் சூர்யா தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர் வரிசைக்கு பிரமோசன் ஆனார்...

நண்பன் பட பாடலில் இதுவரை யாரும் கையாளாத புதுமை










இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் இலியானா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் நண்பன்.
இப்படத்தின் பாடல்கள் குறித்து பாடலாசிரியர் கார்க்கி தனது டிவிட்டர் இணையத்தில் ” விஜய் பிரகாஷுடன் இணைந்து நண்பன் படத்திற்காக ஒரு அழகான பாடலை பதிவு செய்தோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த பாடலில் பல்வேறு மொழிகளின் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளோம். இயக்குனர் ஷங்கர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் எப்போதும் புதிய முயற்சிகளை ஊக்குவிப்பார்கள். அவர்கள் இருவருக்கும் எனது நன்றி” என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதுகுறித்து தனது டிவிட்டர் இணையத்தில் ” மதன் கார்க்கி மிகவும் அழகாக 10 மொழிகளில் ஒரு பாடல் எழுதியுள்ளார். அவருக்கு என் பாராட்டுக்கள் ” என்று தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்கும் பாடல்களில் அர்த்தம் இல்லாத, ஆனால் கேட்க புதிதாக இருக்கிற வார்த்தைகளைப் பயன்படுத்துவார். ஆதவன் படத்தில் ” டமக்கு டமக்கு டம டம்மா..” ” ஷசிலி பிசிலி ஷசக்கலி..” போன்ற பாடல்கள் வந்தன. வெவ்வேறு மொழி வார்த்தைகளை போட்டு இசையமைத்திருக்கும் பாட்டும் நிச்சயம் ஹிட்டாகும் என்கிறது ரசிகர்கள் வட்டம்.


நண்பன் ஷங்கரின் ஜிலீர் ஊட்டி அனுபவம்


இந்தி ‘த்ரீ இடியட்’ சை தமிழில் தனது தனித்துவமான பாணியில் ‘நண்பனாக’ எடுத்து வருகிறார்.
‘மெகா’ பட டைரக்டர் என பெயர் பெற்றவர் ஷங்கர். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, அனுயா ஆகியோரை வைத்து படப்பிடிப்பை தொடங்கி இருக்கின்றனர்.
முதல் கட்டமாக ஊட்டியில் படத்துக்கு தேவையான காட்சிகளை ஆரம்பித்து ‘சூட்’ பண்ணியுள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பு நல்ல துவக்கமாக அமைந்தது. சிரிப்பும் வேடிக்கையுமாக சென்றது.
இளமையான டீமுடன் பணியாற்றியது புத்துணர்வு தந்தது என்று அனுபவத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் அஜித் சூர்யாவுடன் கை கோர்க்க தயாராகும் விக்ரம்


ஐ.நா சபையின் மனித குடியேற்ற பிரிவின் இளைஞர் து£தராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் நடிகர் விக்ரம். தனது விக்ரம் பவுண்டேஷன் மற்றும் சஞ்சீவினி அறக்கட்டளை மூலமாக தமிழகம் முழுவதிலும் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறார் அவர். இந்த லட்சியத்திற்கு ‘பச்சை புரட்சி’ என்று பெயரிட்டிருக்கிறார் விக்ரம்.
இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அவர். மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்துச்சாம் என்றொரு பழமொழி உண்டு. அதை நிரூபிக்கிற வகையில் ஏராளமான கேள்விகளை கேட்டார்கள் சில புத்திசாலி நிருபர்கள். ஒரு மனிதன் சமூக அக்கறையோடு சில விஷயங்கள் செய்யும்போது அதை உற்சாகப்படுத்தும் நோக்கம் சிறிதும் இல்லை அந்த கேள்விகளில்.
சாலையோரத்தில் ஏதோ கடமைக்காக மரத்தை நட்டோம் என்பது போல இருக்காது இந்த திட்டம். நில உரிமையாளர்களால் தாமாகவே முன்வந்து தரப்படும் காலி நிலங்கள், சாலை விரிவாக்கத்தில் சிக்காத இடங்கள் இவற்றை தேர்வு செய்து மரங்கள் நடுவோம். அது வளர்கிற வரை பராமரிப்பதுதான் எங்கள் திட்டம் என்று தெளிவாகவே கூறினார் விக்ரம். அப்படியிருந்தும் அஜீத் கூடதான் இப்படி மரங்களை நட்டார். ஆனால் அவற்றையெல்லாம் பிளாட்பாரம் கட்டுவதற்காக பிடுங்கி எறிந்துவிட்டார்களே என்றார் ஒரு நிருபர்.
சிக்னலில் பிச்சை எடுக்கிறார்களே, அதை தடுக்க மாட்டீங்களா என்றார் மற்றொருவர். ஏதோ ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விக்ரம்தான் அநாதை ரட்சகர் என்பது போல இவர்கள் எழுப்பிய கேள்விகளை சற்று சிரமத்தோடுதான் எதிர்கொண்டார் விக்ரம்.
அவர் பேசியதிலேயே மிகவும் பிடித்த விஷயம் இவ்விரண்டும்தான். இந்த மரக்கன்றுகள் என் ரசிகர் மன்றத்தினரால் பராமரிக்கப்படும்! அஜீத், விஜய், சூர்யா ஆகியோரிடம் இது குறித்து பேசி அவர்களையும் என்னுடன் இணைத்துக் கொண்டு செயல்படுவேன்!
பெற்றோர்களால் படிக்க வைக்க முடியாத இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் கல்வியை தொடர வழி செய்வதையும் ஒரு லட்சியமாக வைத்திருக்கிறார் விக்ரம்.

காவலன் நூறாவது நாள் வெற்றிவிழாவை கொண்டாடுகிறது



விஜய் நடிப்பில் பல எதிர்ப்புகளை தாண்டி பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் காவலன்.இது விஜயின் 51 வது படமாகும்.இதில் விஜய் அஸின் வடிவேலு நிழல்கள் ரவி ரோஜா மித்ரா ராஜ்கிரன் என பல நட்சத்திரப்பட்டாளமே நடித்தனர்.இத்திரைப்படம் வெளியாகிய போதும் அதிகளவான தியேட்டர்கள் கிடைக்கவில்லை.விஜயின் முந்தைய படமான சுறா அடைந்த தோல்வியால் தியேட்டர் உரிமையாளர்கள் காட்டிய எதிர்ப்பும் ஏனைய படங்களின் வருகையும் தியேட்டர் பற்றாக்குறைக்கு காரணமாயின.எனினும் படம் வெளியான பின்பு படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடிக்கவே பின்பு பல தியேட்டர்கள் இதில் இணைந்து கொண்டன.இப்படம் ஜெனவரி 15 ம் திகதி தமிழர்களின் பொங்கல் பண்டிகை ஸ்பெசலாக வந்து இன்று ஏப்ரல் 24 ம் திகதி காவலன் நூறாவது நாள் வெற்றிவிழாவை கொண்டாடுகிறது.காவலன் நூறாவது நாளை எட்டிய போதும் காவலன் ஆறு தியேட்டர்களில் இன்றும் ஓடுகிறது என்பது ஒரு சந்தோசமான செய்தியாகும்.நூறாவது நாளை கொண்டாடும் காவலன் திரைப்படத்திற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.நூறாவது நாள் கொண்டாட்டத்திற்காக அதிகளவான விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து சத்தியம் சினிமாவில் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.இப்பட வெற்றி விழா விரைவில் கொண்டாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது

பரபர ஷூட்டிங்... ரிலீசுக்கு தயாராகும் வேலாயுதம்!



valauthamவிஜய்யின் அடுத்த படமான வேலாயுதம் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. அதே நேரம் படத்தின் விளம்பரப் பணிகளையும் படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்
ஆரம்பித்துள்ளார். விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.


விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா நடித்துள்ளனர். பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானமும் படத்தில் உண்டு. ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
இந்தப் படம் தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் பால்காரராக நடித்துள்ளார் விஜய். ஜெனிலியா பெண் பத்திரிகை நிருபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறியுள்ளார்.
விஜய் பிறந்த நாள் வரும் ஜூன் 22 ம் தேதி ஆகும்
.

Sunday, April 24, 2011

ஷங்கர் இயக்கத்தில் விஜய்யின் நண்பன்


ஷங்கர் இயக்கத்தில் விஜய்யின் நண்பன்
இந்தியில் வெளிவந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டான “3-இடியட்ஸ்” படம் தமிழில் “நண்பன்” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல்கட்ட சூட்டிங் கடந்தமாதம் ஊட்டியில் தொடங்கியது. ஊட்டியில் சூட்டிங்கை முடித்‌த கையொடு, 2ம் கட்ட சூட்டிங்கிற்காக டேராடூன் புறப்பட்டு சென்றது நண்பன் டீம். அங்கு விறுவிறுப்பாக நடந்த இப்படத்தின் சூட்டிங் காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டன.
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் கூறியதாவது, நண்பன் படத்தின் 2ம் கட்ட சூட்டிங் டேராடூனில் வெற்றிகரமாக முடிந்து விட்டது. 2ம் கட்ட சூட்டிங் முழுவதும் கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. முதன்முறையாக விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோரை வைத்து இயக்கியது ஒரு புது அனுபவத்தை தந்தது என்றார்.
நண்பன் படத்துக்காக ஒரு நாளைக்கு ஒருவேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு டயட்டில் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்தின் வேடம் கல்லூரி மாணவன் வேடமாம். இதற்காக உடலை குறைத்து, மாணவன் தோற்றத்துக்கு மாற வேண்டும்  என்று டைரக்டர் ஷங்கர், ஸ்ரீகாந்துக்கு கட்டளையிட்டிருக்கிறார்.
இதையடுத்து தற்போது நாளொன்றுக்கு ஒரு வேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு டயட்டில் இருக்கிறார் ஸ்ரீகாந்த். சாப்பிடாமல் பட்டினி கிடப்பதற்கு கைமேல் பலன் கிடைத்திருப்பதாக கூறும் ஸ்ரீகாந்த், சினிமாதான் என் வாழ்க்கை என்றாகி விட்டது. அதற்காக ஒரு வேளை சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் தவறில்லை. படம் நன்றாக வர வேண்டும். ஸ்ரீகாந்த் நன்றாக நடித்திருக்கிறான் என்று ரசிகர்கள் சொல்ல வேண்டும். அதற்காக எதுவும் செய்ய தயாராக இருப்பதுதான் ஒரு நடிகனுக்கு அழகு. அதைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன், என்கிறார்.