Thursday, February 28, 2013

துப்பாக்கி 2ஆம் பாகம் கிடையாது – முருகதாஸ்

img1130228060_1_1துப்பாக்கி 2ஆம் பாகம் இப்போதைக்கு இல்லை என தெ‌ரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அ‌ஜீத்தை வைத்து படம் இயக்க எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று முருகதாஸ் கூறியதற்கு அ‌‌ஜீத் தரப்பிலிருந்து பாஸிடிவான சமிக்ஞை வரவில்லை. இதனால் தனது பார்வையை மீண்டும் விஜய் பக்கம் திருப்பியுள்ளார்.
துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெய‌ரில் இந்தியில் முருகதாஸ் இயக்குகிறார். அக்சய் குமார் ஹீரோ. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் விஜய்யை இயக்குகிறார். ஆனால் அது துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என அவர் தெ‌ரிவித்துள்ளார்.
தற்போது தலைவா படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து நேசன் இயக்கத்தில் ‌ஜில்லா படத்தில் நடிக்க உள்ளார். அதனையடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.

விஜய்க்கு இன்னும் ஒரு நாயகி… கடுப்பில் அமலா!

28-ragini-nandwani-8-300இயக்குநர் விஜய் – நடிகர் விஜய் கை கைகோர்த்துள்ள தலைவா படத்தில் மேலும் ஒரு நாயகியை புதிதாக சேர்த்துள்ளனர். அவர் ராகினி நந்வானி. டேராடூன் டைரி படத்திலும் சில டிவி தொடர்களிலும் நடித்தவர். இந்த திடீர் சேர்க்கையால் படத்தின் முதல் நாயகி அமலா பால் டென்ஷனாகியுள்ளாராம். இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் தலைவா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் நடந்து வருகிறது. விஜய்யுடன் அமலாபால், பொன்வண்ணன் உள்பட பலர் முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்தக் கதையில் ஒரே ஒரு ஹீரோயின்தானாம். ஆனால் கதையில் லேசான மாற்றம் செய்து, மும்பை செல்லும் விஜய் அங்கும் ஒரு பெண்ணை காதலிப்பது போல மாற்றியுள்ளார்களாம்.
இந்த வேடத்துக்குதான் ராகினி நந்வானி என்ற மும்பை நாயகியை ஒப்பந்தம் செய்துள்ளனர். விஜய்க்குப் பிடித்த நாயகியாக இந்த ராகினி தேர்வாகியுள்ளது, அமலா பாலை டென்ஷனாக்கியுள்ளது. தமது காட்சிகள் குறைக்கப்பட்டு விடுமோ என்பதால் இந்த டென்ஷனாம்!

மீண்டும் முருகதாஸுடன் இணைகிறார் விஜய்.. ஆனால்..!

27-vijay-with-murugadoss-300மீண்டும் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைகிறார் விஜய். ஆனால் இந்தப் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என உறுதியாக முருகதாஸ் தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய படம் துப்பாக்கி. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைப் படைத்துவிட்டதாக அவர்களே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இருவரும் இணைந்து மீண்டும் படம் செய்யப் போவதாக செய்திகள் கிளம்பின. இதுகுறித்து இயக்குநர் முருகதாஸிடம் விசாரித்தபோது, “இருவரும் மீண்டும் இணையும் திட்டமிருக்கிறது. ஆனால் நிச்சயம் இது துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது,” என்றார். முருகதாஸ் இப்போது துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் இந்தியில் இயக்குகிறார். விஜய் தலைவா, ஜில்லா என இரு படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தங்கள் கைவசமுள்ள படங்களை முடித்ததும் புதிய படத்தைத் துவங்கப்போகிறார்களாம்.

Monday, February 25, 2013

அஜீத்தை விட்டுவிட்டு மீண்டும் விஜயிடம் சென்ற முருகதாஸ்

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் துப்பாக்கி இந்தி ரீமேக்கை முடித்துவிட்டு அஜீத்தை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. ஆனால் தற்போது விஜயை வைத்து படம் எடுக்கிறாராம். ஏ.ஆர். முருகதாஸ் விஜய், காஜல் அகர்வாலை வைத்து எடுத்த துப்பாக்கி படத்தை இந்தியில் பிஸ்டல் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்தியில் விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 50 கோடி சம்பளமாம். பிஸ்டல் படப்பிடிப்பு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிஸ்டலை முடித்த கையோடு முருகதாஸ் தமிழில் படம் இயக்குகிறார் என்று கூறப்பட்டது.
24-1361703560-murugadoss-ajith44-600

விஜய் படத்தில் மகத்


அஜித்தின் மங்காத்தாவில் பார் ஓனராக நடித்தவர் மகத். தயாநிதி அழகிரியின் நண்பரான இவர் தாப்ஸியுடனான காதலில் நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜுடன் மோதலில் ஈடுபட்டு செம அடி வாங்கியது தெரிந்திருக்கும். நடிப்பில் கிடைக்காத பெயரும் புகழும் இந்த காதல் அடிதடியில் மகத்துக்கு கிடைத்தது.
மங்காத்தாவுக்குப் பிறகு பேக் பென்ச் ஸ்டூடண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் தொடங்கயிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்தில் மகத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜில்லா படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நேசன் என்பவர் படத்தை இயக்குகிறார். விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தப் புதிய படத்தில் முக்கியமான வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய்யின் தம்பியாக நடிக்க மகத் ஒப்பந்தம் செய்ய்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
img1130224018_1_1

Thalaiva song

Naanum Unnodu