Tuesday, June 4, 2013

'பாட்டைத் திருடிட்டாங்க...' போலீசில் புகார்...- 'புரமோஷனை' ஆரம்பித்த விஜய் & டீம்!

தலைவா படத்தின் ஒரு பாடலை திருட்டுத்தனமாக சமூக வலைத் தளங்களில் வெளியிட்டுவிட்டார்கள் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் இன்று புகார் கொடுத்துள்ளனர். 

கல்லூரி மாணவர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தங்கள் புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

thalaivaa team lodges complaint on single track

இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற படத்தின் இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சிபி சுனில் குமார் ஆகியோர் மனு ஒன்றை கமிஷனரிடம் கொடுத்தனர். 

அதில், "தலைவா படத்திலிருந்து ஒரு பாடலை சட்டவிரோதமாக சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த சதியின் பின்னணியில் சாய்ராம் கல்லூரியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 தலைவா படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. அதற்கு முன் அடுத்த வாரம் இசை வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ஒரு பாடல் மட்டும் லீக் ஆகியிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபர விளம்பரமாக மாறியுள்ளது.

Thalaivaa team lodges complaint on leakage of single track

ஜூன் 21-ல் தலைவா இசை... ஆகஸ்டில் படம் ரிலீஸ்!

Thalaivaa Music From June 21 விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 21-ம் தேதி நடக்கிறது. விஜய்யின் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 

விஜய் - அமலா பால் ஜோடியாக நடித்துள்ள படம் தலைவா. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ளார். 

ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக பாடல்களை வெளியிடுகிறார்கள். சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையைப் பெற்றுள்ளது. 

இப்படத்தின் தமிழக, கர்நாடக, கேரள உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுளது. வெளிநாட்டு உரிமை, விஜய் படத்துக்கு இதுவரை கிடைக்காத அளவுத்து நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளனர். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் படத்தை வெளியிடுகிறார்கள்.

Monday, June 3, 2013

விஜய் அஜித்தை குறிவைக்கும் ஹன்சிகா......

தனது மார்க்கெட் சரியத் துவங்கியுள்ளதால் ஹன்சிகா விஜய், அஜீத் படங்களில் நடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம். ஹன்சிகா விஜய்யுடன் சேர்ந்து வேலாயுதம் படத்தில் நடித்த பிறகு தான் மளமளவென வாய்ப்புகள் வந்து குவிந்தன. அதன் பிறகு தான் அவருக்கு சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது ஹன்சிகா கையில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் எதுவும் இல்லை. தனது மார்க்கெட் சரியத் துவங்கியுள்ளதை அவர் உணர்ந்துவிட்டார்.


லக்ஷ்மி மேனன் 

லக்ஷ்மி மேனனின் அசுர வளர்ச்சியைக் கண்டு ஆடிபோயுள்ள ஹன்சிகா தெலுங்கிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இதில் அவருக்கு சரியான போட்டியாக நஸ்ரியா நஸீம் இருப்பார் என்று வேறு கூறப்படுவதால் அவர் சற்று கலங்கித் தான் உள்ளார்.


 காஜல் ஓவர்டேக் பண்ணிடுவாரா?

விஜய்யுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான், மீண்டும் விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் காஜல் தன்னை ஓவர்டேக் செய்துவிடுவாரோ என்று பயப்படுகிறாராம் ஹன்சிகா.



விஜய், அஜீத் 

முன்னணி நடிகர்கள் படத்தை கைப்பற்றிவிட்டால் காஜலைப் பற்றி பயப்பட வேண்டாம் என்று ஹன்சிகாவுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளார்களாம். அதனால் அவர் விஜய், அஜீத் படங்களில் நடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறாராம்.


ஜில்லா ஷுட்டிங் – கலந்து கொண்டார் விஜய்

img1130602018_1_1நேசன் இயக்கத்தில் தயாராகும் ஜில்லா படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன் ஜில்லா படப்பிடிப்பு தொடங்கியது. காரைக்குடி, மதுரை போன்ற இடங்களில் நடந்த படப்பிடிப்பில் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும் கலந்து கொண்டனர்.
சென்னை மோகன் ஸ்டுடியோவில் ஜில்லாவுக்கு என பிரமாண்ட அரங்கு அமைத்திருக்கிறார்கள். அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். மோகன்லால், விஜய் காம்பினேஷன் காட்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது நடந்த ஷுட்டிங்கில் விஜய்யுடன் விஜய் தம்பியாக நடிக்கும் மகத்தும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜில்லாவை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயின். டி.இமான் இசையமைக்கிறார்.

Thursday, May 30, 2013

எகிறிய ‘தலைவா’ பட்ஜெட்: டென்ஷனில் தயாரிப்பாளர்கள்

30-1369913291-thalaivaa-team1-600தலைவா படத்தின் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டதை விட எகிறிவிட்டதாம். இதனால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
விஜய், அமலா பாலை வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் எடுத்துள்ள படம் தலைவா. இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் துவங்கி ஆஸ்திரேலியாவில் முடிந்தது.
ஆஸ்திரேலியாவில் பல நாட்கள் ஷூட்டிங் நடந்தது. அமலா மற்றும் ராகினியுடன் விஜய் ஆடும் பாடல்கள் அங்கு தான் படமாக்கப்பட்டன. மும்பையைவிட ஆஸ்திரேலியாவில் தான் அதிக நாட்கள் ஷூட்டிங் நடந்துள்ளது.

விஜய்யின் தலைவாவை வெளியிடும் வேந்தர் மூவீஸ்

எதிர்நீச்சல் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தலைவா படத்தின் உரிமையை வாங்கியுள்ளது வேந்தர் மூவீஸ். இயக்குநர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தலைவா. அமலா பால் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் விநியோக உரிமையைப் பெற பல நிறுவனங்கள் போட்டியிட்டன. இறுதியில் பெருந்தொகை கொடுத்து வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது.

vendhar movies release thalaivaa
இதன் கேரள விநியோக உரிமையை துப்பாக்கி படத்தை வெளியிட்ட தமீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கர்நாடக உரிமையை கே மஞ்சு பெற்றுள்ளார். 

இதனிடையே படத்தின் ஆடியோவை விஜய் பிறந்த நாளான அதாவது ஜூன் 22ம் தேதி வெளியிடவிருக்கின்றனர். 

வேந்தர் மூவீஸ் நிறுவனம் ஏற்கெனவே 5 படங்களின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவனம் வாங்கி வெளியிட்ட எதிர்நீச்சல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் வெற்றி விழாவை ஜெனீவாவில் பாரிவேந்தர் தலைமையில் நடத்தவிருக்கின்றனர்.
 


Wednesday, May 29, 2013

துள்ளிவிளையாடு படம் பார்த்து வின்செண்ட் செல்வாவைப் பாராட்டிய விஜய்!

Vijay Praised Director Vincent Selva துள்ளி விளையாடு படம் பார்த்துவிட்டு, அதன் இயக்குநர் வின்சென்ட் செல்வாவைப் பாராட்டினார் விஜய். விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற படங்களைத் தந்தவர் வின்செண்ட் செல்வா. ஜித்தன், வாட்டாக்குடி இரண்யன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இப்போது அவர் இயக்கத்தில் வெளிவரத் தயாராக இருக்கும் படம் துள்ளி விளையாடு. ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த விஜய், வின்செண்ட் செல்வாவை மிகவும் பாராட்டியிருக்கிறார். "கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்டோர் புதுமுகங்களாக இருந்தாலும், எனக்கு இந்தப் படம் புதியவர்கள் நடித்ததாகவே தெரியவில்லை... நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் போட்டியை ரசிகர்கள் நிச்சயம் மிகவும் விரும்புவார்கள்..," என்றார். படத்தின் பாடல்களை வெளியிட்டவரும் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. யு சான்றிதழ் பெற்றிருக்கும் துள்ளி விளையாடு விரைவில் வெளியாகவிருக்கிறது.