துள்ளிவிளையாடு படம் பார்த்து வின்செண்ட் செல்வாவைப் பாராட்டிய விஜய்!
துள்ளி விளையாடு படம் பார்த்துவிட்டு, அதன் இயக்குநர் வின்சென்ட் செல்வாவைப் பாராட்டினார் விஜய். விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற படங்களைத் தந்தவர் வின்செண்ட் செல்வா. ஜித்தன், வாட்டாக்குடி இரண்யன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இப்போது அவர் இயக்கத்தில் வெளிவரத் தயாராக இருக்கும் படம் துள்ளி விளையாடு. ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த விஜய், வின்செண்ட் செல்வாவை மிகவும் பாராட்டியிருக்கிறார். "கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்டோர் புதுமுகங்களாக இருந்தாலும், எனக்கு இந்தப் படம் புதியவர்கள் நடித்ததாகவே தெரியவில்லை... நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் போட்டியை ரசிகர்கள் நிச்சயம் மிகவும் விரும்புவார்கள்..," என்றார். படத்தின் பாடல்களை வெளியிட்டவரும் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. யு சான்றிதழ் பெற்றிருக்கும் துள்ளி விளையாடு விரைவில் வெளியாகவிருக்கிறது.
No comments:
Post a Comment