ஜில்லாவில் விஜய்க்கு 17 வயது 'போராளி' தங்கச்சி
ஜில்லா படத்தில் விஜய் தங்கையாக போராளி படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிக்கிறார். விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் அவர் பெயர் சக்தி. இந்த படத்தில் இளைய தளபதிக்கு அப்பாவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார். மதுரையில் எடுக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஒரு தங்கை, அதுவும் அந்த தங்கை கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாம். இந்த படத்தில் விஜய்க்கு யாரை தங்கையாக போடுவது என்று அலைந்துள்ளனர். அப்போது போராளி படத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பெண்ணாக வந்த நிவேதா தாமஸை(17) பார்த்துள்ளனர். உடனே அவரையே விஜய்க்கு தங்கையாக்கிவிட்டனர். படத்தில் அண்ணன், தங்கை சென்டிமென்ட் தூக்கலாக இருக்குமாம். இது குறித்து நிவேதா கூறுகையில், என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அண்ணனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாசமுள்ள தங்கையாக நடிக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
No comments:
Post a Comment