இந்நிலையில் துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸூம், விஜய்யும் சேர்ந்து ஒரு படம் பண்ண உள்ளனர் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளன. அது எந்த மாதிரியான படம், யாரும் ஹீரோயின் என்ற விபரம் எல்லாம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் மீண்டும் இணையவுள்ள இப்படத்திற்கு கொலவெறி அனிரூத் மட்டும் இசையமைக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அனிரூத் கூறியுள்ளதாவது, ஆமாம், விஜய்-முருகதாஸ் மீண்டும் இணையும் படத்திற்கு நான் இசையமைக்க இருக்கிறேன். இதுதொடர்பாக அவர்களை சந்தித்து பேசியுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் தான் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது பற்றி வெளியான செய்தி தவறானது என்றும், விஜய் படம் உட்பட மிகப்பெரிய படங்கள் கைவசம் நிறைய இருப்பதால் தற்போது இசையில் மட்டுமே தனது முழு கவனமும் இருப்பதாக கூறியுள்ளார்.
அனிரூத் இசையமைப்பில் வெளிவந்த இரண்டு படங்களின் (3, எதிநீச்சல்) பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், கோலிவுட் இயக்குனர்களின் பலரது பார்வை இப்போது அனிரூத் பக்கம் திரும்பியிருக்கிறது. அந்தவகையில் முருகதாஸின் பார்வையும் இப்போது அவர் பக்கம் திரும்பியுள்ளன. முன்னதாக முருகதாஸ் இயக்கிய கடைசி மூன்று படங்களான கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment