பின்னர் அங்கிருந்த பெண்கள் நடிகர் விஜயிடம் கேள்விகள் கேட்டனர். அதற்கு சிரித்த முகத்துடன் நடிகர் விஜய் அளித்த பதில் வருமாறு:-
கே: உங்கள் மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோரது எதிர்காலம் என்னவாக இருக்கும்?
ப: எனது மகன் சஞ்சய் ஒரு சமயம் நடிகர் ஆகவேண்டும் என்கிறான். இன்னொரு சமயம் கிரிக்கெட் வீரராக போகிறேன் என்று கூறுகிறான். அவனுடைய எதிர்காலத்தை பின்னர் அவனே நிர்ணயிக்கட்டும். எனது மகள் திவ்யா குழந்தை என்பதால் அவளது எதிர்காலத்தை பின்னர் யோசிக்கலாம்.
கே: உங்களது புதிய படமான தலைவா அரசியல் படமா? அல்லது கிரைம் பற்றிய படமா?
ப: தலைவா படம் அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரசிகர்களின் பேராதரவை பெறும் வகையில் எடுத்துள்ளார். நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும்.
கே: தற்போது நீங்கள் செய்துவரும் சமூக பணியில் அரசியலுக்கு வரும் நோக்கம் உள்ளதா?
ப: இந்த பணிக்கும், அரசியலுக்கு வருவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது எனது மன திருப்திக்காக செய்யும் பணியாகும். மக்களுக்கு தொண்டு செய்வதில் தான் திருப்தி அடைகிறேன். இதுபோன்ற நிறைவான பணிகளுக்கு ஈடாக எதுவும் இல்லை என்று கருதுகிறேன். இதைத்தவிர வேறு சந்தோசம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment