இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: இயக்குனர் விஜய்
இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏ.எல். விஜய் இளைய தளபதி விஜய், அமலா பாலை வைத்து தலைவா என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இறுதிகட்ட இதர வேலைகள் நடந்து வருகிறது. இயக்குனர் படத்தை எடிட் செய்வதில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் தனது படத்தின் ஹீரோவை புகழ்ந்து தள்ளியுள்ளார். தமிழகத்தில் வெகுகாலமாக கேட்கப்படும் கேள்வி அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் விஜய் ஒரு புதிய பதிலை அளித்துள்ளார்.
No comments:
Post a Comment