|
01/02/2011 |
விஜய்யின் 3 இடியட்ஸின் பெயர் நண்பன்! |
விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, ‘நண்பன்’ என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இதனை படத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை வெளியிட்டுள்ளார். படத்துக்கு இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா. பாடல்கள்: நா முத்துக்குமார், தயாரிப்பு வடிவமைப்பு: விமல்ஜி. வசனம்: ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி. திரைக்கதை-இயக்கம்: ஷங்கர். ஹீரோ விஜய், ஹீரோயின் இலியானா. மற்ற நடிகர்கள்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர். இயக்குநர் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். சிவா மனசுல சக்தி நாயகி அனுயாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்! இந்த தலைப்பு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாண்டியன் படத்துக்காக வைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்!. |
Saturday, March 19, 2011
விஜய்யின் 3 இடியட்ஸின் பெயர் நண்பன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment