விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் கதை என்ன?
ஜெயம் ராஜாவும், விஜய்யும் ரீமேக் பிரியர்கள் என்பது தமிழகம் அறிந்ததுதான். விஜய்யை பொருத்தவரை அவ்வப்போது இந்த ஐடியா காலை வாரிவிட்டாலும், ராஜாவுக்கு ரீமேக்தான் ராசியோ ராசி. அந்த வகையில் இப்போது அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதையும் ரீமேக்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி சில வருடங்களுக்கு முன் தெலுங்கில் இயக்கிய ‘ஆசாத்’ என்ற படத்தை தழுவிதான் இந்த வேலாயுதத்தை உருவாக்கப் போகிறாராம் ராஜா. இந்தியன், முதல்வன், அந்நியன் என்று ஷங்கரின் கைவண்ணத்தை பிட்டு பிட்டு பிசைந்த படம்தான் அந்த ஆசாத் என்கிறது தெலுங்கு பட வட்டாரம். அப்படின்னா….? புரிஞ்சு போச்!
No comments:
Post a Comment