Monday, July 18, 2011

நடிகர் விஜய் ரூ 8 லட்சம் நலத்திட்ட உதவி: கூட்டம் குவிந்ததால் போலீஸ் தடியடி!

Vijay சேலத்தில் ஏழைகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். 

ஏராளமான ரசிகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், ஒரு கட்டத்தில் மேடையை நோக்கி ரசிகர்கள் திடீரென முண்டியடித்துக்கொண்டு சென்றதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினார்கள்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் தொடங்கி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. 

சேலம் மாவட்ட தலைமை விஜய் நற்பணி மன்றத்தின் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. சேலம் 3 ரோடு ஜவகர் மில் திடலில் நடந்த இந்த விழாவுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கி பேசினார்.

இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், அரசு மருத்துவமனைக்கு சக்கரநாற்காலிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு உதவிகள் உள்பட ரூ.8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

போலீஸ் தடியடி

நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி மேடையை நோக்கி முண்டியடித்துக்கொண்டு வர ஆரம்பித்தது. அதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.

அதைப் பார்த்ததும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மேடையை நோக்கி வந்த ரசிகர்கள் கூட்டத்தின் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். மேலும் கூட்டத்தின் நடுவே இருந்த சில ரசிகர்கள் விஜய்யை நெருக்கமாக சென்று பார்க்க முடியாத ஆத்திரத்தில் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை தலைக்கு மேல் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக ஜெயிக்க வேண்டும் என்றேன்... அதற்கு பலன் கிடைத்தது! - விஜய்

Vijay and Jayalalitha தமிழகத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று கடுமையாக உழைத்தீர்கள். அதன் பலனாக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றார், என்று நடிகர் விஜய் கூறினார்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ரூ 8 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கிய பின் நடிகர் விஜய் பேசியதாவது:

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.

அதேபோல் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். அவரின் அந்த கருத்துக்கு ஆதரவாக சேலத்தில் என்னுடைய ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டீர்கள்.

இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

நான் பார்க்காத தோல்விகளா...

இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடைக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்," என்றார்.

ILAYATHALAPATHY MEETS FANS

vijay-vijay-18-07-11
The Ilayathalapathy thanked his Salem fans for organizing a function in which welfare measures to the tune of 8 lakh rupees were distributed. The star distributed sewing machines, wheel chairs and three-wheelers to the needy.

During his speech, Vijay thanked his fans for heeding to his request and working for the AIADMK’s victory in the state assembly elections. The actor made it clear that he would do something in a big way so that all his fans would definitely benefit. This cheered his fans, who were present at the venue, to no end.

Though the function went of relatively well, a small scuffle ensued when some fans moved closer to the dais and the police had to resort to minor lathi charge due to which some fans were hurt.

இளையதளபதியின் இளம் நாயகி

vijay-velayutham-18-07-11
'வேலாயுதம்' படத்தின் பணிகள் ஏறக்குறைய முடிந்தவிட்ட நிலையில், தற்போது விஜய்யின் கவனம் முழுதும் சங்கரின் 'நண்பன்' படத்தில்தான்.
'நண்பன்' படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் இளையதளபதி விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்வுடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர்  தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக உதயன் பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

கௌதம் மேனனுக்கு நோ சொன்ன விஜய்

vijay-gautham-menon-18-07-11
கெளதம் வாசுதேவ் மேனன் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஹிந்தி ரீமேக்கை முடித்துவிட்டு விஜய்க்கு ஒரு படம் செய்யப்போகிறார்.

அஜீத்திற்காக‌ தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்'  ஸ்க்ரிப்டில்தான் விஜய் நடிக்கப்போகிறார். அஜீத்துக்கு தயார் செய்த கதையை உங்களுக்காக சற்று மாற்றவா? என்று கௌதம் மேனன் கேட்டதற்கு 'நோ' சொல்லிவிட்டாராம் விஜய். நீங்கள் தயார் செய்த கதையிலேயே நடிக்கிறேன் எனக்காக எந்த மாற்றமும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.  விஜய் அது மட்டுமல்லாமல் படத்தின் தலைப்பைகூட துப்பறியும் ஆனந்த் என்றே வைத்துக்கொள்ளலாம் என்று விஜய் கூறியதாக தகவல்.

ரசிகர்கள் மீது தடியடி விஜய் கூட்டத்தில் போலீஸ் அதிரடி

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் நடிகர் விஜய். ஒவ்வொரு முறையும் இப்படி கூடும் ரசிகர்கள் அவரைVijay - SACதொட்டுப்பார்க்கும் ஆசையில் நெருக்கியடிப்பதால் விழாவே களேபரமாகி விடுகிறது. இதுபோன்ற கூட்டங்கள் அத்தனையிலும் ரசிகர்கள் தடியடி பிரசாதம் வாங்கிக் கொண்டுதான் வீடு திரும்புகிற சோகமும் நடந்தேறுகிறது.
ரசிகர்களே தங்களுக்குள் ஒழுங்கை கடைபிடிக்காத வரை இது போன்ற தடியடிக்கு முடிவே இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்த விழாவில் ஏதாவது கலவரம் நடக்காதா என்று காத்திருந்த ஒரு சில மீடியாக்களுக்கு இந்த செய்தி பிளாஷ் நியூஸ் ஆனதுதான் கொடுமை.
அதுபோகட்டும்... விஜய் என்ன பேசினார் அங்கே?
"தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்"
இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யும் கலந்து கொண்டார். சுமார் 8 லட்ச ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அஜீத் படத்தில் விஜய்!

'வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்வுடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர்  தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக உதயன் பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது ப்ரதீக் பார்பர், எமி ஜாக்சன் ஆகியோரை வைத்து 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை இந்தியில் இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்து விட்டு விஜய்யுடன் இணைகிறார் கெளதம்.

அஜீத்திற்கு என்று தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்'  கதையினை விஜய்க்கு ஏற்றவாறு சிறு மாற்றம் செய்து இருக்கிறாராம் கெளதம்.  படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டாம் என்று கூறி விட்டாராம் விஜய்.

இப்படத்தினை கெளதமின் தயாரிப்பு நிறுவனமான PHOTON KATHAAS தயாரிக்க இருக்கிறது.